தமிழில் தேட.....

Thursday, February 18, 2021

அதிகாலை நிலவே - உறுதி மொழி பாடல் வரிகள்


படம்: உறுதி மொழி

இசை: இளையராஜா


*********************************



பெண்:

ஆஆஆஆ ஆஆ ஆஆஆஆ

ஆஆஆஆ ஆஆ ஆஆஆஆ

ஆ.......


ஆஆஆ ஆ ஆஆ

ஆஆஆ ஆஆ ஆ

ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆ 

ஆஆஆஆஆ


ஆண்:

அதிகாலை நிலவே

அலங்கார சிலையே

புதுராகம் நான் பாடவா


பெண்:

இசை தேவன் இசையில்

புதுப்பாடல் துவங்கு

எனையாளும் கவியே உயிரே


அதிகாலை கதிரே 

அலங்காரச் சுடரே

புது ராகம் நீ பாடவா



*********************************


ஆண்:

மணிக்குருவி உனைத்தழுவ

மயக்கம் பிறக்கும்


பெண்:

பருவக்கதை தினம் படிக்க 

கதவு திறக்கும்


ஆண்:

மணிக்குருவி உனைத்தழுவ

மயக்கம் பிறக்கும்


பெண்:

பருவக்கதை தினம் படிக்க 

கதவு திறக்கும்


ஆண்:

விழியே உன் இமை இரண்டும்

எனைப் பார்த்து மயங்கும்


பெண்:

உனைப்பார்த்த மயக்கத்திலும்

முகம் பூத்து மலரும்


ஆண்:

நமை வாழ்த்த வழி தேடி 

தமிழும் தலைகுனியும்


பெண்:

அதிகாலை கதிரே 

அலங்காரச் சுடரே 

புதுராகம் நீ பாடவா


ஆண்:

இசைதேவன் இசையில் 

அசைந்தாடும் கொடியே

பனி தூங்கும் மலரே உயிரே


அதிகாலை நிலவே 

அலங்கார சிலையே 

புது ராகம் நான் பாடவா



*********************************


பெண்:

அழகுச்சிலை இதயம்தனை

வழங்கும் உனக்கு 


ஆண்:

ரதிமகளும் அடிபணியும்

அழகு உனக்கு


பெண்:

அழகுச்சிலை இதயம்தனை

வழங்கும் உனக்கு 


ஆண்:

ரதிமகளும் அடிபணியும்

அழகு உனக்கு


பெண்:

தவித்தேன் உன் அணைப்பில் தினம் 

துடித்தேன் என் உயிரே


ஆண்:

இனித்தேன் என் இதயம்தனை

இணைத்தேன் என் உயிரே 


பெண்:

சுவைத்தாலும் திகட்டாத 

கவிதைகளை படித்தேன்


ஆண்:

அதிகாலை நிலவே 

அலங்காரச் சிலையே

புது ராகம் நான் பாடவா


பெண்:

இசை தேவன் இசையில்

புதுப்பாடல் துவங்கு

எனையாளும் கவியே உயிரே


அதிகாலை கதிரே 

அலங்காரச் சுடரே 

புதுராகம் நீ பாடவா


*********************************