படம்: இளையவன்
இசை: இளையராஜா
*********************************
ஆண் :
வட்ட நிலவே
எட்டி எட்டி எதுக்குப் பாக்குற
குட்டி நிலவே
கொட்டக் கொட்ட முழிச்சு பாக்குற
மன்மதனின் தேரோட்டம்
இது மல்லிகப் பூ போராட்டம்
ராவெல்லாம் தூக்கம் போச்சு
உன்ன தொடலாமா
வட்ட நிலவே
எட்டி எட்டி எதுக்குப் பாக்குற
குட்டி நிலவே
கொட்டக் கொட்ட முழிச்சு பாக்குற
குழு : ஜனக்கு ஜனக்கு ஜம்ஜம்
ஜனக்கு ஜனக்கு ஜம்ஜம்
ஜனக்கு ஜனக்கு ஜம்ஜம்
அஹா ஜனக்கு ஜனக்கு தக்க ஜன
ஜனக்கு ஜனக்கு ஜம்ஜம்
ஜனக்கு ஜனக்கு ஜம்ஜம்
ஜனக்கு ஜனக்கு ஜம்ஜம்
அஹா ஜனக்கு ஜனக்கு தக்க ஜம்
*********************************
பெண் :
கண்ட படி வாடக் காத்து
கன்னிப் பொண்ண கையால் அணைக்க
கன்னி நெஞ்சு மாமா
ஹா கன்னிப் போகலாமா
ஆண் :
கத்தும் குயில் பாட்டக் கேட்டேன்
கட்டில் மேல கிளியப் பார்த்தேன்
கட்டிக் கொள்ளலாமா
கொஞ்சம் தொட்டணைக்கலாமா
பெண் :
ஊருக்குள்ள அரவம் கேக்குதே
அதுக்குள்ள எதுக்கு அவசரம்
ஆண் :
உள்ளுக்குள்ள மனசு கேக்கல
நீ முத்தம் கொடு கன்னத்தில் ஒரு தரம்
பெண் :
அதுக்குன்னு இருக்கு ஒரு நாளு
மாமா நான் தான் உன் ஆளு
அப்புறமா நீ கேளு
ஆண் :
வட்ட நிலவே
எட்டி எட்டி எதுக்குப் பாக்குற
பெண் :
குட்டி நிலவே
கொட்டக் கொட்ட முழிச்சு பாக்குற
ஆண் :
மன்மதனின் தேரோட்டம்
இது மல்லிகப் பூ போராட்டம்
பெண் :
ராவெல்லாம் தூக்கம் போச்சு
உன்ன தொடலாமா
வட்ட நிலவே
எட்டி எட்டி எதுக்குப் பாக்குற
ஆண் :
குட்டி நிலவே
கொட்டக் கொட்ட முழிச்சு பாக்குற
*********************************
ஆண் :
கண் சிமிட்டும் நிலவப் பாரு
காதல நீ கேட்டுப் பாரு
எம் மனச கொல்லும்
நிலவும் ஆசையத் தான் சொல்லும்
பெண் :
தலையில் வெச்ச பூவக் கேளு
உலையில் பொங்கும் சோத்தக் கேளு
பச்சப் புள்ள மனச மாமா
கச்சிதமா சொல்லும்
ஆண் :
சந்தனத்து வாசம் போலவே
நெஞ்சில் வந்து பரவும் ஞாபகம்
பெண் :
தேக்கு மரம்
பாக்கும் போதெல்லாம்
கட்டுடலை தழுவும் ஞாபகம்
ஆண் :
இரவே இரவே விடியாதே
நிலவே நிலவே போகாதே
கண்ணை மட்டும் மூடிக் கொள்ளு
பெண் :
வட்ட நிலவே (குழு : ஹா ஹா)
எட்டி எட்டி எதுக்குப் பாக்குற (குழு : ஹா ஹா)
ஆண் :
குட்டி நிலவே (குழு : ஹா ஹா)
கொட்டக் கொட்ட முழிச்சு பாக்குற (குழு : ஹா ஹா)
பெண் :
மன்மதனின் தேரோட்டம்
இது மல்லிகப் பூ போராட்டம்
ஆண் :
ராவெல்லாம் தூக்கம் போச்சு
உன்ன தொடலாமா
வட்ட நிலவே (குழு : ஹா ஹா)
பெண் :
எட்டி எட்டி எதுக்குப் பாக்குறே (குழு : ஹா ஹா)
பெண் : குட்டி நிலவே (குழு : ஹா ஹா)
ஆண் :
கொட்டக் கொட்ட முழிச்சு பாக்குற (குழு : ஹா ஹா)
*********************************