ஒரு காவியம் - அறுவடை நாள் பாடல் வரிகள்
படம்: அறுவடை நாள்
இசை: இளையராஜா
*********************************
பெண் குழு :
ஆ அஆஅ ஆ அஆஅ
ஆஅஆ அஆஅஆ அஆஅ
ஹாஆஅஆ அஆ அஆ அஆ அஆ ஆஅ
ஆண் :
ஒரு காவியம் அரங்கேறும் நேரம்
ஒரு காவியம் அரங்கேறும் நேரம்
மழை தூவுதே இதமாகுதே
மழை தூவுதே இதமாகுதே
ஒரு காவியம்
*********************************
ஆண் :
காமன் கலை நூறு
காணும் இரு தேகம்
காற்று சுதி மீட்டி
போடும் ஒரு தூபம்
காதல் எனும் யாகம்
காணுகின்ற யோகம்
காட்டு நதி வேகம்
காதல் மனம் போகும்
மோகம் ஒரு தாகம்
மூடுதே மேகம்
போகம் சம பாகம்
பாடுதே ராகம்
வாடுதே தேகம்
ஒரு காவியம்
குழு :
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
*********************************
ஆண் :
ராதை அவள் மீது
கண்ணன் ஒரு பாதி
போதை வரும் போது
காணும் நிலை மீதி
பவள மணித் தேரில்
பருவம் அரங்கேற
மெழுகுதிரி போல
கரைந்து விளையாட
ஊறும் நதி யாவும்
சேரும் இடம் ஒன்று
நாளும் விலகாமல்
கூடும் சுகம் இன்று
சேர்ந்ததே நன்று
ஆண் :
ஒரு காவியம் அரங்கேறும் நேரம்
மழை தூவுதே இதமாகுதே
மழை தூவுதே இதமாகுதே
*********************************