படம்: நெஞ்சத்தை கிள்ளாதே
இசை: இளையராஜா
*********************************
பெண்:
ப ப ப பா
ப ப ப பா பா
ப ப ப ப
ப ப ப பா பா
உறவெனும் புதிய வானில்
பறந்ததே இதய மோகம்
ஓடும் அலை என மனம் ஏங்கும்
கனவிலும் (ஆண்: பப ப ப பா)
நினைவிலும் (ஆண்: பபபபா)
புது சுகம் (ஆண்: பபபபா)
உறவெனும் புதிய வானில்
பறந்ததே இதய மோகம்
*********************************
ஆண்:
பார்வை ஒவ்வொன்றும் கூறும்
பொன் காவியம்
பார்வை என்கின்ற கோலம்
பெண் ஓவியம்
பெண்:
மாலை வரும் போதிலே
நாளும் உந்தன் தோளிலே
ஆண்:
கனவில் ஆடும்
நினைவு யாவும்
கனவில் ஆடும் நினைவு யாவும்
இனிய பாவம்
பெண்:
உறவெனும் புதிய வானில்
பறந்ததே இதய மோகம்
*********************************
பெண்:
நெஞ்சில் உள்ளூர ஓடும்
என் ஆசைகள்
நேரம் இல்லாமல் நாளும்
உன் பூஜைகள்
ஆண்:
எந்தன் மனம் எங்கிலும்
இன்பம் அது சங்கமம்
பெண்:
இணைந்த கோலம்
இனிய கோலம்
இணைந்த கோலம் இனிய கோலம்
இளமை காலம்
ஆண்:
உறவெனும் புதிய
வானில் பறந்ததே இதய மோகம்
ஓடும் அலை என மனம் ஏங்கும்
கனவிலும் (பெண்: பப ப ப பா)
நினைவிலும் (பெண்: பபபபா)
புது சுகம்(பெண்: பபபபா)
ஆண்:
ப ப ப பா
ப ப ப பா பா
ப ப ப ப
ப ப ப பா பா
*********************************