தமிழில் தேட.....

Friday, May 14, 2021

மீட்டாத ஒரு வீணை - பூந்தோட்டம் பாடல் வரிகள்



படம்: பூந்தோட்டம் 

இசை: இளையராஜா


*********************************


ஆண் : 

மீட்டாத ஒரு வீணை 

எனை மீட்டும் நேரம்

புதிரான ஒரு பாடல் 

பொருள் சொல்லும் நேரம்

ஆகாயப் பூக்கள் 

மழை தூவும் நேரம்

மனதின் ராகம்


பெண் : 

மீட்டாத ஒரு வீணை 

எனை மீட்டும் நேரம்

புதிரான ஒரு பாடல் 

பொருள் சொல்லும் நேரம்


*********************************



ஆண் : 

பளிங்கினால் ஒரு வீடு

அமைக்கவா பொன் மானே


பெண் : 

விழியினால் இரு தீபம்

ஏற்றவா அதில் தானே


ஆண் : 

மறந்த அந்தப் பாடலுக்கு

அடி எடுத்துக் கொடுக்கவா


பெண் : 

விருந்து என்னை அழைத்ததென்று

புதுக் கவிதை படிக்கவா


ஆண் : 

எரிமலையும் பனிமலை என்றே

மாறுது ஏன் பைங்கிளி


பெண் : 

மீட்டாத ஒரு வீணை 

எனை மீட்டும் நேரம்

புதிரான ஒரு பாடல் 

பொருள் சொல்லும் நேரம்


ஆண் : 

ஆகாயப் பூக்கள் 

மழை தூவும் நேரம்

மனதின் ராகம்

மீட்டாத ஒரு வீணை 

எனை மீட்டும் நேரம்


*********************************



பெண் : 

கனவிலே துயில் நீங்கி

திரும்பினால் உன் உருவம்


ஆண் : 

முழு நிலா முகம் பார்க்க

மலர்ந்ததே உன் வடிவம்


பெண் : 

நடந்து செல்லும் வழி முழுதும்

என் நிழலை அனுப்பவா


ஆண் : 

துணைக்கு வந்த நிழல் அதற்கு

குடை எடுத்துப் பிடிக்கவா


பெண் : 

ஒரு கணமும் பல யுகம் என்றே 

ஆகுது சொல் பைங்கிளி


ஆண் : 

மீட்டாத ஒரு வீணை 

எனை மீட்டும் நேரம்

புதிரான ஒரு பாடல் 

பொருள் சொல்லும் நேரம்


பெண் : 

ஆகாயப் பூக்கள் 

மழை தூவும் நேரம்

மனதின் ராகம்


ஆண் : 

மீட்டாத ஒரு வீணை 

எனை மீட்டும் நேரம்


இருவர் : 

புதிரான ஒரு பாடல் 

பொருள் சொல்லும் நேரம்



*********************************


Saturday, May 8, 2021

மெட்டி ஒலி - மெட்டி பாடல் வரிகள்


படம்: மெட்டி

இசை: இளையராஜா


*********************************


பெண்: 

நனன நனனன நனனன

நனன நனனன நனனன

நனன நனனன நனனன

நனன நனனன நனனன

நனன நனனன நனனன

நனன நனனன நனனன

நனன நனனன நனனன


ஆண்: 

மெட்டி ஒலி காற்றோடு

என் நெஞ்சை தாலாட்ட

மெட்டி ஒலி காற்றோடு என் நெஞ்சை தாலாட்ட

மேனி ஒரு பூவாக மெல்லிசையின் பாவாக

மேனி ஒரு பூவாக மெல்லிசையின் பாவாக

கோதை மலர் பூம்பாதம் வாவென்னுதே


பெண்: ஆ


ஆண்: கோதை மலர் பூம்பாதம் வாவென்னுதே

மெட்டி ஒலி காற்றோடு என் நெஞ்சை தாலாட்ட


*********************************


ஆண்: 

ஓ ஓ ஓ ஓ ஓ ஓ

வாழ் நாளெல்லாம் உன்னோடுதான்

வாழ்ந்தாலே போதும்


பெண்: ஆ ஆ ஆ ஆ


ஆண்: 

வாழ்வென்பதின் பாவங்களை

நான் காண வேண்டும்

நாளும் பல நன்மை காணும் எழில் பெண்மை

பூவை வைத்த பூவாசம் போதை கொண்ட உன் நேசம்

தென்றல் சுகம் தான் வீசும் தேடாமல் சேராதோ

மெட்டி ஒலி காற்றோடு என் நெஞ்சை தாலாட்ட


*********************************



பெண்: 

ஆ ஆ 

ஆ ஆ ஆ


துருத்து துத்துத்து துருத்து

துத்துத்து துருத்து

துருத்து துத்துத்து துருத்து

துருத்து துத்துத்து துருத்து

துருத்து துத்துத்து துருத்து துத்துத்து

தனனா தனனா தனனா


*********************************


ஆண்: 

ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே 

பெண் முல்லையே (பெண்:  ஆஆ)

என் கண்மணி (பெண்:  சிரிப்பு )

ஊர்கோல நேரம் 


பொன் காலடி படும் போதிலே

பூந்தென்றல் பாடும்


பார்வை பட்ட காயம் (பெண்:  ஆ)

பாவை தொட்டு காயும் 

எண்ணம் தந்த முன்னோட்டம்

என்று அந்த வெள்ளோட்டம்

கண்ட பின்பு கொண்டாட்டம்

கண்டாடும் என் நெஞ்சம்


மெட்டி ஒலி காற்றோடு

என் நெஞ்சை தாலாட்ட

மேனி ஒரு பூவாக மெல்லிசையின் பாவாக

மேனி ஒரு பூவாக மெல்லிசையின் பாவாக

கோதை மலர் பூம்பாதம் வாவென்னுதே


பெண்: ஆ..


ஆண்: 

கோதை மலர் பூம்பாதம் வாவென்னுதே

மெட்டி ஒலி காற்றோடு என் நெஞ்சை தாலாட்ட


*********************************