தமிழில் தேட.....

Friday, May 14, 2021

மீட்டாத ஒரு வீணை - பூந்தோட்டம் பாடல் வரிகள்



படம்: பூந்தோட்டம் 

இசை: இளையராஜா


*********************************


ஆண் : 

மீட்டாத ஒரு வீணை 

எனை மீட்டும் நேரம்

புதிரான ஒரு பாடல் 

பொருள் சொல்லும் நேரம்

ஆகாயப் பூக்கள் 

மழை தூவும் நேரம்

மனதின் ராகம்


பெண் : 

மீட்டாத ஒரு வீணை 

எனை மீட்டும் நேரம்

புதிரான ஒரு பாடல் 

பொருள் சொல்லும் நேரம்


*********************************



ஆண் : 

பளிங்கினால் ஒரு வீடு

அமைக்கவா பொன் மானே


பெண் : 

விழியினால் இரு தீபம்

ஏற்றவா அதில் தானே


ஆண் : 

மறந்த அந்தப் பாடலுக்கு

அடி எடுத்துக் கொடுக்கவா


பெண் : 

விருந்து என்னை அழைத்ததென்று

புதுக் கவிதை படிக்கவா


ஆண் : 

எரிமலையும் பனிமலை என்றே

மாறுது ஏன் பைங்கிளி


பெண் : 

மீட்டாத ஒரு வீணை 

எனை மீட்டும் நேரம்

புதிரான ஒரு பாடல் 

பொருள் சொல்லும் நேரம்


ஆண் : 

ஆகாயப் பூக்கள் 

மழை தூவும் நேரம்

மனதின் ராகம்

மீட்டாத ஒரு வீணை 

எனை மீட்டும் நேரம்


*********************************



பெண் : 

கனவிலே துயில் நீங்கி

திரும்பினால் உன் உருவம்


ஆண் : 

முழு நிலா முகம் பார்க்க

மலர்ந்ததே உன் வடிவம்


பெண் : 

நடந்து செல்லும் வழி முழுதும்

என் நிழலை அனுப்பவா


ஆண் : 

துணைக்கு வந்த நிழல் அதற்கு

குடை எடுத்துப் பிடிக்கவா


பெண் : 

ஒரு கணமும் பல யுகம் என்றே 

ஆகுது சொல் பைங்கிளி


ஆண் : 

மீட்டாத ஒரு வீணை 

எனை மீட்டும் நேரம்

புதிரான ஒரு பாடல் 

பொருள் சொல்லும் நேரம்


பெண் : 

ஆகாயப் பூக்கள் 

மழை தூவும் நேரம்

மனதின் ராகம்


ஆண் : 

மீட்டாத ஒரு வீணை 

எனை மீட்டும் நேரம்


இருவர் : 

புதிரான ஒரு பாடல் 

பொருள் சொல்லும் நேரம்



*********************************


No comments:

Post a Comment

உங்கள் கருத்து...