தமிழில் தேட.....

Showing posts with label அன்பச் சுமந்து. Show all posts
Showing posts with label அன்பச் சுமந்து. Show all posts

Thursday, May 9, 2019

அன்பச் சுமந்து சுமந்து - (பொன்னுமணி)



படம்: பொன்னுமணி
இசை: இளையராஜா

*********************************

அன்பச் சுமந்து சுமந்து
அல்லும் பகலும் நினைந்து
இன்பம் சுமக்க வைத்த மாமா
என்னை தவிக்க விடலாமா

அன்பச் சுமந்து சுமந்து
அல்லும் பகலும் நினைந்து
இன்பம் சுமக்க வைத்த மாமா
என்னை தவிக்க விடலாமா
என்னை தவிக்க விடலாமா

*********************************

வான் மழையில் தான் நனைந்தால்
பால் நிலவும் கரைந்திடுமா
தீயினிலே நீயிருந்தால்
நிலவொளி தான் சுகம் தருமா
மரக்கிளையில் ஒரு குருவி
கூடுக்கட்டி வாழ்ந்ததே
அந்தரத்தில் ஆடவிட்டு
ஆலமரம் சாய்ந்ததே
இன்பம் சுமக்க வைத்த மாமா
என்னை தவிக்க விடலாமா
என்னை தவிக்க விடலாமா

*********************************

நீ அரைச்ச சந்தனமே
வாசனை தான் மாறலியே
நேசமெனும் கோட்டையிலே
காவல் இன்னும் தீறலையே
பேசாமல் போனதென்ன
பாசப்புறா விண்ணிலே
வீசாமல் வீசுகின்ற
பாசப்புயல் மண்ணிலே
இன்பம் சுமக்க வைத்த மாமா
என்னை தவிக்க விடலாமா

அன்பச் சுமந்து சுமந்து
அல்லும் பகலும் நினைந்து
இன்பம் சுமக்க வைத்த மாமா
என்னை தவிக்க விடலாமா
என்னை தவிக்க விடலாமா

அன்பச் சுமந்து சுமந்து

*********************************