தமிழில் தேட.....

Showing posts with label அலை மீது தடுமாறுதே சிறு ஓடம். Show all posts
Showing posts with label அலை மீது தடுமாறுதே சிறு ஓடம். Show all posts

Wednesday, February 20, 2019

அலை மீது தடுமாறுதே சிறு ஓடம் - (அன்புள்ள மலரே)

படம்: அன்புள்ள மலரே
இசை: இளையராஜா

*********************************

இருவரும்: ஆ ஆ ஆ ஆ ஆ ஆஅ ஆ ஆ ஆ

ஆ: அலை மீது தடுமாறுதே சிறு ஓடம்
அலை மீது தடுமாறுதே சிறு ஓடம்
சுமை தாங்காமலே கரை தேடும்
சென்று சேரும் வரை இவள் பாவம் பாவம்
அலை மீது தடுமாறுதே சிறு ஓடம்

*********************************

ஆ: கண்ணில் இன்னும் சிந்தக் கண்ணீரில்லை
ஏதோ கொஞ்சம் இனிமை
பெ: பெண்ணைப் பெண்ணாய்க் காணும் காலமில்லை
போதும் போதும் தனிமை
ஆ: பிள்ளை என்னும் கொடிமுல்லை
கண்வளர இல்லை இல்லை கவலை
பெ: ஆ.ஆ..ஆ..ஆ..ஆ....
இந்த நேசம் சுகமாகுமே
இவள் வாழ்க்கை நிறம் மாறுமே
ஆ: என்றாலும் கண்ணோரம் ஓர் சோகமே

பெ: அலை மீது தடுமாறுதே சிறு ஓடம்
அலை மீது தடுமாறுதே சிறு ஓடம்
சுமை தாங்காமலே கரை தேடும்
சென்று சேரும் வரை இவள் பாவம் பாவம்
அலை மீது தடுமாறுதே சிறு ஓடம்

*********************************

பெ: ஜன்னல் எங்கும் கண்கள் பார்க்கின்றதே
ஏதோ சொல்லிச் சிரிக்கும்
ஆ: தர்மம் பேசும் இந்த ஊருள்ளதே
சாகும் முன்பே எரிக்கும்
பெ: தானாய் ஏணி தரும் மேலே ஏற விடும்
மீண்டும் ஏணி பறிக்கும்

ஆ: ஆ..ஆ தடுமாறும் இங்கு நியாயங்கள்
இதனால் தான் பல காயங்கள்

பெ: கண்ணீரில் தள்ளாடும் பெண் தீபங்கள்
அலை மீது தடுமாறுதே சிறு ஓடம்

ஆ: அலை மீது தடுமாறுதே சிறு ஓடம்
பெ: சுமை தாங்காமலே கரை தேடும்
ஆ: சென்று சேரும் வரை இவள் பாவம் பாவம்
பெ: அலை மீது தடுமாறுதே சிறு ஓடம்

*********************************