தமிழில் தேட.....

Showing posts with label ஆசை அதிகம் வச்சு. Show all posts
Showing posts with label ஆசை அதிகம் வச்சு. Show all posts

Saturday, January 12, 2019

ஆசை அதிகம் வச்சு - (மறுபடியும்)

படம்: மறுபடியும்
இசை: இளையராஜா
*********************************

ஆசை அதிகம் வச்சு மனச அடக்கி வைக்கலாமா என் மாமா
ஆள மயக்கிப்புட்டு அழக ஒளிச்சி வைக்கலாமா என் மாமா
புது ரோசா நான் என்னோடு என் ராசாவே வந்தாடு என் செல்லக்குட்டி...
ஆசை அதிகம் வச்சு மனச அடக்கி வைக்கலாமா என் மாமா
ஆள மயக்கிப்புட்டு அழக ஒளிச்சி வைக்கலாமா என் மாமா
************
சின்னப்பொன்னு நான் ஒரு செந்தூரப்பூ நான்
செங்கமலம் நான் புதுத் தேன்கிண்ணம் நான்
வெல்லக்கட்டி நான் நல்ல வெள்ளிரதம் நான்
கண்ணுக்குட்டி நான் நல்ல கார்காலம் நான்
ஒரு பொன்தேரில் உல்லாச ஊர் போகலாம்
நீ என்னோடு சல்லாபத் தேரேறலாம்
அடி ஆத்தாடி அம்புட்டும் நீ காணலாம்
இது பூ சூடும் பொன் மாலை தான் என் செல்லகுட்டி
ஆசை அதிகம் வச்சு மனச அடக்கி வைக்கலாமா என் மாமா
ஆள மயக்கிப்புட்டு அழக ஒளிச்சி வைக்கலாமா என் மாமா
*******INTERLUDE*****
நா ந நா நா
ந ந ந நா நா
நா ந நா நா
ந ந ந நா நா

நா ந நா நா
ந ந ந நா நா
நா ந நா நா
நா நா
************
சின்ன சிட்டு நான் ஒரு சிங்கார பூ நான்
தங்க தட்டு நான் நல்ல தாழம் பூ நான்
வானவில்லும் நான் அதில் வண்ணங்களும் நான்
வாசமுல்லை நான் அந்தி வான் மேகம் நான்
என் மச்சானே என்னோடு நீராடலாம்
என் பொன்மேனி தன்னோடு நீ ஆடலாம்
வா தென்பாண்டி தெம்மாங்கு நாம் பாடலாம்
இது தேன் சிந்தும் பூஞ்சோலை தான் என் செல்லகுட்டி
ஆசை அதிகம் வச்சு மனச அடக்கி வைக்கலாமா என் மாமா
ஆள மயக்கிப்புட்டு அழக ஒளிச்சி வைக்கலாமா என் மாமா
புது ரோசா நான் என்னோடு என் ராசாவே வந்தாடு என் செல்லக்குட்டி
ஆசை அதிகம் வச்சு மனச அடக்கி வைக்கலாமா என் மாமா
ஆள மயக்கிப்புட்டு அழக ஒளிச்சி வைக்கலாமா என் மாமா