தமிழில் தேட.....

Showing posts with label ஒரு நாள் ஒரு கனவு. Show all posts
Showing posts with label ஒரு நாள் ஒரு கனவு. Show all posts

Friday, October 18, 2019

கஜுராஹோ கனவில் - ஒரு நாள் ஒரு கனவு பாடல் வரிகள்



படம்: ஒரு நாள் ஒரு கனவு
இசை: இளையராஜா

*********************************

பெண் :
தானானன நானனான நான
தானாஎன நானனான நானா

ஆண் :
கஜுராஹோ கனவில் ஓர்
சிற்பம் கண்ணில் மிதக்குதே
அறியாதோர் மனதிலே
ரகசிய வாசல் திறக்குதே
மெல்ல மெல்ல விரலில் திரன திம் தனா
துள்ளுகின்ற பொழுதில் இனிய கீர்த்தனா
நான் உன்னுள்ளே உன்னுள்ளே
சிலையின் மொழிகளை பழகலாம்

கஜுராஹோ கனவில் ஓர்
சிற்பம் கண்ணில் மிதக்குதே
அறியாதோர் மனதிலே
ரகசிய வாசல் திறக்குதே
கஜுராஹோ கஜுராஹோ

*********************************

பெண் :
தகிட தீம்கிடத்தோம்
தகிட தீம்கிடத்தோம்
தகிட தீம்கிடத்தோம்
தகிட தீம்கிடத்தோம்

என் தேகம் முழுவதும்
மின்மினி மின்மினி ஓடுதே
மாயங்கள் செய்கிறாய்
மார்பினில் சூரியன் காயுதே

ஆண் :
பூவினுள் பனி துளி
தூறுது தூறுது தூறுதே
பனியோடு தேன் துளி
ஊருது ஊருது ஊருதே

பெண் :
ஆ ஆ காமனின் வழிபாடு
உடலினில் கொண்டாடு

ஆண் :
நானன நானானா
நனன நானானா

பெண் :
தீபம் போல் என்னை நீ ஏற்று
காற்றோடு காற்றாக
அந்தரங்க வழி மிதக்கலாம்

கஜுராஹோ கனவில் ஓர்
சிற்பம் கண்ணில் மிதக்குதே
அறியாதோர் மனதிலே
ரகசிய வாசல் திறக்குதே

ஆண் :
கஜுராஹோ கஜுராஹோ

*********************************

ஆண் :
நீராக உன் உடல்
நெளியுது வளையுது மூழ்கவா
தண்டோடு தாமரை
பூவினை கைகளில் ஏந்தவா

பெண் :
மேலாடை நீயென
மேனியில் நான் உனை சூடவா
நீ தீண்டும் போதிலே
மோகன ராட்டினம் ஆடவா

ஆண் :
பகலுக்கு தடை போடு
இரவினை எடை போடு

பெண் :
லாலல லாலா
லலலல லாலா லா

ஆண் :
எங்கே நான் என்றுநீ நீ தேடு
ஈரங்கள் காயாமல்
இன்ப ராக மழை பொழியலாம்

பெண் :
கஜுராஹோ கனவில் ஓர்
சிற்பம் கண்ணில் மிதக்குதே

ஆண் :
அறியாதோர் மனதிலே ரகசிய
வாசல் திறக்குதே

பெண் :
மெல்ல மெல்ல விரலில் திரன திம் தனா

ஆண் :
துள்ளுகின்ற பொழுதில் இனிய கீர்த்தனா

பெண் :
நான் உன்னுள்ளே உன்னுள்ளேதும்
சிலையின் மொழிகளை பழகலாம்

இரு:
கஜுராஹோ கனவில் ஓர்
சிற்பம் கண்ணில் மிதக்குதே
அறியாதோர் மனதிலே ரகசிய
வாசல் திறக்குதே

ஆண் :
கஜுராஹோ கஜுராஹோ

*********************************