தமிழில் தேட.....

Showing posts with label ஒரு போக்கிரி ராத்திரி. Show all posts
Showing posts with label ஒரு போக்கிரி ராத்திரி. Show all posts

Thursday, April 11, 2019

ஒரு போக்கிரி ராத்திரி - (இது நம்ம பூமி)



படம்: இது நம்ம பூமி
இசை: இளையராஜா

*********************************

ஆண்:
ஒரு போக்கிரி ராத்திரி
பார்க்குற பார்வை தான்
ஒன்ன தாக்குது கேட்குது பூக்குது ஆசை தான்
பிறக்குது சபலம் சபலம்
கொடுப்பது சுலபம் சுலபம்
மன காயங்கள் ஆறாதோ காதலால் தான்
ஒரு ஆறுதல் கூறினேன் ஆதலால் தான்
ஒரு போக்கிரி ராத்திரி
பார்க்குற பார்வை தான்

*********************************

ஆண்:
கல்லூரி வாசலிலே நட்டு வைத்த காதல் விதை
காயாகி கனிந்துவரும் காலம் உள்ள காலம் வரை

பெண்:
கல்யாணப் பந்தலுக்கு
காத்திருக்கும் வாழை இது
கண்ணா உன் கையணைக்க
பூத்திருக்கும் தாழை இது

ஆண்:
சிங்காரமேனி தான் சொக்க வெள்ளி பாற் குடம்

பெண்:
சிந்தாமல் நீ இதை அள்ளுகின்ற நாள் வரும்

ஆண்:
எப்போது ஆரம்பம் அந்தப்புற நாடகம்

பெண்:
ஏனிந்த காமமோ என்ன சொல்ல காரணம்

ஆண்:
காத்திரு கண்ணே கொடி நாட்டலாம் ஹோய்

பெண்:
காதலே வெல்லும் என்ன காட்டலாம் ஹோய்

ஆண்: ஒரு போக்கிரி ராத்திரி
பார்க்குற பார்வை தான்

பெண்:
ஒன்ன தாக்குது கேட்குது பூக்குது ஆசை தான்

*********************************

பெண்:
என்னோட நீ இருந்தா
நெஞ்சுக்கொரு நிம்மதி தான்
இல்லாமல் தனித்திருந்தா
அம்புபட்ட பைங்கிளி தான்

ஆண்:
எப்போதும் என் மனது
உன்னைச் சுற்றி கோலமிடும்
தன்னந்தனி என்றிருந்தா
தத்தளித்து ஓலமிடும்

பெண்:
என் கூந்தல் வேண்டுது உன்னைடைய பூச்சரம்
எந்நாளில் கைவரும் உன்னுடைய மோதிரம்

ஆண்:
என் தேகம் யாவுமே உன்னுடைய சீதனம்
பார்த்தாலும் தீருமோ உன்னழகு நூதனம்

பெண்:
காதலால் கூவும் ஒரு பூங்குயில் ஹோய்
ஆண்:
பூங்குயில் மேவும் இளம் ஆண் குயில் ஹோய்

பெண்:
ஒரு போக்கிரி ராத்திரி
பார்க்குற பார்வை தான்
ஒன்ன தாக்குது கேட்குது பூக்குது ஆசை தான்
பிறக்குது சபலம் சபலம்
கொடுப்பது சுலபம் சுலபம்
மன காயங்கள் ஆறாதோ காதலால் தான்
ஒரு ஆறுதல் கூறினேன் ஆதலால் தான்

ஆண்:
ஒரு போக்கிரி ராத்திரி
பார்க்குற பார்வை தான்

பெண்:
ஒன்ன தாக்குது கேட்குது பூக்குது ஆசை தான்

*********************************