தமிழில் தேட.....

Showing posts with label சின்ன தம்பி. Show all posts
Showing posts with label சின்ன தம்பி. Show all posts

Saturday, August 10, 2019

தூளியிலே ஆடவந்த - சின்ன தம்பி பாடல் வரிகள்



படம்: சின்ன தம்பி
இசை: இளையராஜா

******************************************

ஓ ஓஓஓ ஓஓஓ
ஓ ஓஓஓ ஓஓஓ

தூளியிலே ஆடவந்த வானத்து மின்விளக்கே
ஆழியில் கண்டெடுத்த அற்புத ஆணிமுத்தே
தொட்டில் மேலே முத்து மாலை
வண்ணப் பூவா விளையாட சின்னத் தம்பி எசபாட

தூளியிலே ஆடவந்த வானத்து மின்விளக்கே
ஆழியில் கண்டெடுத்த அற்புத ஆணிமுத்தே

******************************************

பாட்டெடுத்து நான் படிச்சா காட்டருவி கண்ணுறங்கும்
பட்டமரம் பூமலரும் பாறையிலும் நீர்சுரக்கும்

பாட்டெடுத்து நான் படிச்சா காட்டருவி கண்ணுறங்கும்
பட்டமரம் பூமலரும் பாறையிலும் நீர்சுரக்கும்
ராகமென்ன தாளமென்ன அறிஞ்சா நான் படிச்சேன்
ஏழு கட்ட எட்டுக் கட்ட தெரிஞ்சா நான் படிச்சேன்

நான் படிச்ச ஞானமெல்லாம் யார் கொடுத்தா சாமிதான்
ஏடெடுத்துப் படிச்சதில்ல சாட்சியிந்த பூமி தான்
தொட்டில் மேலே முத்து மாலை
வண்ணப் பூவா விளையாட சின்னத் தம்பி எசபாட

******************************************

சோறுபோடத் தாயிருக்க பட்டினியப் பார்த்ததில்ல
தாயிருக்கும் காரணத்தால் கோயிலுக்குப் போனதில்ல

சோறுபோடத் தாயிருக்க பட்டினியப் பார்த்ததில்ல
தாயிருக்கும் காரணத்தால் கோயிலுக்குப் போனதில்ல
தாயடிச்சு வலிச்சதில்ல இருந்தும் நானழுதேன்
நானழுதா தாங்கிடுமா ஒடனே தாயழுவா

ஆகமொத்தம் தாய் மனசு போல் நடக்கும் பிள்ள நான்
வாழுகிற வாழ்க்கையிலே தோல்விகளே இல்லைதான்
தொட்டில் மேலே முத்து மாலை
வண்ணப் பூவா விளையாட சின்னத் தம்பி எசபாட

தூளியிலே ஆடவந்த வானத்து மின்விளக்கே
ஆழியில் கண்டெடுத்த அற்புத ஆணிமுத்தே
தொட்டில் மேலே முத்து மாலை
வண்ணப் பூவா விளையாட சின்னத் தம்பி எசபாட
வண்ணப் பூவா விளையாட சின்னத் தம்பி எசபாட

******************************************

நீ எங்கே என் அன்பே - சின்ன தம்பி பாடல் வரிகள்



படம்: சின்ன தம்பி
இசை: இளையராஜா

******************************************

நீ எங்கே என் அன்பே
மீண்டும் மீண்டும் மீண்டும்
நீ தான் இங்கு வேண்டும்
நீ எங்கே என் அன்பே
நீ இன்றி நான் எங்கே
மீண்டும் மீண்டும் மீண்டும்
நீ தான் இங்கு வேண்டும்
உந்தன் அன்பு இல்லாது எந்தன் ஜீவன் நில்லாது
நீ எங்கே என் அன்பே
நீ இன்றி நான் எங்கே

******************************************

விடிகிற வரையினில் கதைகளைப் படித்தது
நினைத்ததே நினைத்ததே
முடிகிற கதையினை தொடர்ந்திட மனம்
இங்கு துடிக்குதே துடிக்குதே
கதையிலே கனவிலே உறவுகள்
உணர்வுகள் உருகுதே உருகுதே
பிழை இல்லை வழி இல்லை அருவிகள்
விழிகளில் பெருகுதே பெருகுதே
வாழும் போது ஒன்றாக
வாழ வேண்டும் வா வா
விடியும் போது எல்லோர்க்கும் விடியும் இங்கு வாவா
உந்தன் அன்பு இல்லாது எந்தன் ஜீவன் நில்லாது
நீ எங்கே என் அன்பே
நீ இன்றி நான் எங்கே
மீண்டும் மீண்டும் மீண்டும்
நீ தான் இங்கு வேண்டும்
உந்தன் அன்பு இல்லாது எந்தன் ஜீவன் நில்லாது
நீ எங்கே என் அன்பே
நீ இன்றி நான் எங்கே

******************************************

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
வீதி என்று வெட்ட வெளி பொட்டலென்று
வெண்ணிலவு பார்க்குமா பார்க்குமா
வீடு என்று மொட்டை சுடுக்காடு என்றும்
தென்றல் இங்கு பார்க்குமா பார்க்குமா
எட்டனென்றும் ஏழை பணக்காரன் என்றும்
ஓடும் ரத்தம் பார்க்குமா பார்க்குமா
பித்தன் என்றும் பிச்சை போடும் பக்தன் என்றும்
உண்மை தெய்வம் பார்க்குமா பார்க்குமா
காதல் கொண்டு வாழாத கதைகள் என்றென்றும் உண்டு
கதைகள் இங்கு முடியாது மீண்டும் தொடரட்டும் இங்கு
உந்தன் அன்பு இல்லாது எந்தன் ஜீவன் நில்லாது
நீ எங்கே என் அன்பே
நீ இன்றி நான் எங்கே
மீண்டும் மீண்டும் மீண்டும்
நீ தான் இங்கு வேண்டும்
உந்தன் அன்பு இல்லாது எந்தன் ஜீவன் நில்லாது
நீ எங்கே என் அன்பே
நீ இன்றி நான் எங்கே

******************************************

Friday, August 9, 2019

குயில புடிச்சி - சின்ன தம்பி பாடல் வரிகள்



படம்: சின்ன தம்பி
இசை: இளையராஜா

******************************************

குயில புடிச்சி கூண்டில் அடச்சி
கூவச் சொல்லுகிற உலகம்
மயில புடுச்சி கால ஒடச்சி
ஆடச் சொல்லுகிற உலகம்

குயில புடிச்சி கூண்டில் அடச்சி
கூவச் சொல்லுகிற உலகம்
மயில புடுச்சி கால ஒடச்சி
ஆடச் சொல்லுகிற உலகம்
அது எப்படி பாடுமைய்யா
அது எப்படி ஆடுமைய்யா
ஓ ஓ ஓ ஓ ஓ

குயில புடிச்சி கூண்டில் அடச்சி
கூவச் சொல்லுகிற உலகம்
மயில புடுச்சி கால ஒடச்சி
ஆடச் சொல்லுகிற உலகம்

******************************************

ஆண்பிள்ளை முடிபோடும் பொன்தாலி கயிறு
என்னான்னு தெரியாது எனக்கு
ஆத்தாள நான் கேட்டு அறிஞ்சேனே பிறகு
ஆனாலும் பயனென்ன அதுக்கு
வேறென்ன எல்லாமே நான் செஞ்ச பாவம்
யார் மேலே எனக்கென்ன கோபம்
ஓலை குடிசையில
இந்த ஏழ பொறந்ததுக்கு
வந்தது தண்டனையா
இது தெய்வத்தின் நிந்தனையா
இதை யாரோடு சொல்ல

குயில புடிச்சி கூண்டில் அடச்சி
கூவச் சொல்லுகிற உலகம்
மயில புடுச்சி கால ஒடச்சி
ஆடச் சொல்லுகிற உலகம்
அது எப்படி பாடுமைய்யா
அது எப்படி ஆடுமைய்யா
ஓ ஓ ஓ ஓ ஓ

குயில புடிச்சி கூண்டில் அடச்சி
கூவச் சொல்லுகிற உலகம்
மயில புடுச்சி கால ஒடச்சி
ஆடச் சொல்லுகிற உலகம்

******************************************

எல்லார்க்கும் தலைமேல எழுத்தொண்ணு உண்டு
என்னான்னு யார் சொல்லக் கூடும்
கண்ணீரக் குடம் கொண்டு வடிச்சாலும் கூட
எந்நாளும் அழியாமல் வாழும்
யாரார்க்கு எதுவென்று விதிபோடும் பாதை
போனாலும் வந்தாலும் அது தான்
ஏழை என் வாசலுக்கு
வந்தது பூங்குருவி
கோழை என்றே இருந்தேன்
போனது கை நழுவி
இதை யாரோடு சொல்ல

குயில புடிச்சி கூண்டில் அடச்சி
கூவச் சொல்லுகிற உலகம்
மயில புடுச்சி கால ஒடச்சி
ஆடச் சொல்லுகிற உலகம்
அது எப்படி பாடுமைய்யா
அது எப்படி ஆடுமைய்யா
ஓ ஓ ஓ ஓ ஓ

குயில புடிச்சி கூண்டில் அடச்சி
கூவச் சொல்லுகிற உலகம்
மயில புடுச்சி கால ஒடச்சி
ஆடச் சொல்லுகிற உலகம்

******************************************

அரைச்ச சந்தனம் - சின்ன தம்பி பாடல் வரிகள்



படம்: சின்ன தம்பி
இசை: இளையராஜா

******************************************

பெண்குழு :
செம்பவழ முத்துக்கள
சேர்த்து வச்ச சித்திரமே
தங்க வளை வைர வளை
போட்டிருக்கும் முத்தினமே
வாய் திறந்து நீ சிரிச்சா
பாத்திருக்கும் அத்தனையும்
நீ வளர்ந்துப் பார்த்திருந்தா
தோத்து விடும் இத்தனையும்

ஆண் :
அரைச்ச சந்தனம்
மணக்கும் குங்குமம்
அழகு நெத்தியிலே
ஒரு அழகு பெட்டகம்
புதிய புத்தகம்
சிரிக்கும் பந்தலிலே
முழு சந்திரன் வந்தது போல்
ஒரு சுந்தரி வந்ததென்ன
ஒரு மந்திரம் செஞ்சதுப் போல்
பல மாயங்கள் தந்ததென்ன
இது பூவோ பூந்தேரோ

அரைச்ச சந்தனம்
மணக்கும் குங்குமம்
அழகு நெத்தியிலே
ஒரு அழகு பெட்டகம்
புதிய புத்தகம்
சிரிக்கும் பந்தலிலே

******************************************

ஆண் :
பூவடி அவ பொன்னடி
அதை தேடிப் போகும் தேனீ
தேனடி அந்த திருவடி
அவ தேவலோக ராணி
தாழம்பூவு வாசம் வீசும் மேனியோ
அந்த ஏழு லோகம் பார்த்திராத தேவியோ
ரத்தினம் கட்டின பூந்தேரு
உங்களைப் படைச்சதாரு
என்னைக்கும் வயசு மூவாறு
என் சொல்லு பலிக்கும் பாரு
இது பூவோ பூந்தேரோ

அரைச்ச சந்தனம்
மணக்கும் குங்குமம்
அழகு நெத்தியிலே
ஒரு அழகு பெட்டகம்
புதிய புத்தகம்
சிரிக்கும் பந்தலிலே
முழு சந்திரன் வந்தது போல்
ஒரு சுந்தரி வந்ததென்ன
ஒரு மந்திரம் செஞ்சதுப் போல்
பல மாயங்கள் தந்ததென்ன
இது பூவோ பூந்தேரோ

அரைச்ச சந்தனம்
மணக்கும் குங்குமம்
அழகு நெத்தியிலே
ஒரு அழகு பெட்டகம்
புதிய புத்தகம்
சிரிக்கும் பந்தலிலே

******************************************

ஆண் :
மான்விழி ஒரு தேன்மொழி
நல்ல மகிழம்பூவு அதரம்
பூ நிறம் அவ பொன்னிறம்
அவ சிரிக்க நினைப்பு சிதறும்
ஏலப்பூவு கோலம் போடும் நாசிதான்
பல ஜாலத்தோடு ஆடப் போகும் ராசிதான்
மொட்டுக்கள் இன்னைக்குப் பூவாச்சு
சித்திரம் பெண்ணென ஆச்சு
கட்டுறேன் கட்டுறேன் நான் பாட்டு
கைகளைத் தட்டுங்க கேட்டு
இது பூவோ பூந்தேரோ

அரைச்ச சந்தனம்
மணக்கும் குங்குமம்
அழகு நெத்தியிலே
ஒரு அழகு பெட்டகம்
புதிய புத்தகம்
சிரிக்கும் பந்தலிலே
முழு சந்திரன் வந்தது போல்
ஒரு சுந்தரி வந்ததென்ன
ஒரு மந்திரம் செஞ்சதுப் போல்
பல மாயங்கள் தந்ததென்ன
இது பூவோ பூந்தேரோ

அரைச்ச சந்தனம்
மணக்கும் குங்குமம்
அழகு நெத்தியிலே
ஒரு அழகு பெட்டகம்
புதிய புத்தகம்
சிரிக்கும் பந்தலிலே

******************************************

Wednesday, August 7, 2019

போவோமா ஊர்கோலம் - சின்ன தம்பி பாடல் வரிகள்



படம்: சின்ன தம்பி
இசை: இளையராஜா

******************************************

பெண் :
போவோமா ஊர்கோலம்
பூலோகம் எங்கெங்கும்
ஓடும் பொன்னி ஆறும்
பாடும் கானம் நூறும்
காலம் யாவும் பேரின்பம்
காணும் நேரம் ஆனந்தம்
போவோமா ஊர்கோலம்
பூலோகம் எங்கெங்கும்

******************************************

ஆண் :
அரண்மனை அன்னக்கிளி தரையில நடப்பது
நடக்குமா அடுக்குமா

பெண் : பனியிலும் வெட்டவெளி வெய்யிலிலும் உள்ள சுகம்
அரண்மனை கொடுக்குமா

ஆண் :
குளுகுளு அறையில கொஞ்சிக் கொஞ்சி தவழ்ந்தது
குடிசைய விரும்புமா

பெண் :
சிலுசிலுசிலுவென இங்கிருக்கும் காத்து அங்க
அடிக்குமா கிடைக்குமா

ஆண் :
பளிங்கு போல உன் வீடு
வழியில பள்ளம் மேடு

பெண் :
வரப்பு மேடும் வயலோடும்
பறந்து போவேன் பாரு

ஆண் : அதிசயமான பெண்தானே
பெண் : புதுசுகம் தேடி வந்தேனே

ஆண் :
போவோமா ஊர்கோலம்
பூலோகம் எங்கெங்கும்
ஓடும் பொன்னி ஆறும்
பாடும் கானம் நூறும்
காலம் யாவும் பேரின்பம்
காணும் நேரம் ஆனந்தம்
போவோமா ஊர்கோலம்
பூலோகம் எங்கெங்கும்

******************************************

பெண் :
கொட்டுகிற அருவியும் மெட்டுக்கட்டும் குருவியும்
அடடடா அதிசயம்

ஆண் : கற்பனையில் மிதக்குது கண்டதையும் ரசிக்குது
இதிலென்ன ஒரு சுகம்

பெண் :
ரத்தினங்கள் தெறிக்குது முத்துமணி ஜொலிக்குது
நடந்திடும் நதியிலே

ஆண் :
உச்சந்தல சொழலுது உள்ளுக்குள்ள மயங்குது
எனக்கொண்ணும் புரியல்லே

பெண் :
கவிதை பாடும் காவேரி
ஜதிய சேர்த்து ஆடும்

ஆண் :
அணைகள் நூறு போட்டாலும்
அடங்கிடாம ஓடும்

பெண் : போதும் போதும் உம் பாட்டு
ஆண் : பொறப்படப் போறேன் நிப்பாட்டு

பெண் :
போவோமா ஊர்கோலம்
பூலோகம் எங்கெங்கும்

ஆண் :
ஓடும் பொன்னி ஆறும்
பாடும் கானம் நூறும்

பெண் :
காலம் யாவும் பேரின்பம்
காணும் நேரம் ஆனந்தம்

ஆண் : போவோமா ஊர்கோலம்
பெண் : பூலோகம் எங்கெங்கும்

******************************************