தமிழில் தேட.....

Showing posts with label சிவா. Show all posts
Showing posts with label சிவா. Show all posts

Wednesday, July 17, 2019

அடி வான்மதி என் பார்வதி - சிவா பாடல் வரிகள்



படம்: சிவா
இசை: இளையராஜா

******************************************

ஆண்:
அடி வான்மதி என் பார்வதி
காதலி கண் பாரடி

அடி வான்மதி என் பார்வதி
காதலி கண் பாரடி
தேடி வந்த தேவதாஸை காண ஓடி வா
அடி பார்வதி
என் பார்வதி
பாரு பாரு என்றேன்
பார்த்தால் ஆகாதா
பாடும் பாடல் அங்கே கேட்காதா
அடி வான்மதி என் பார்வதி

******************************************

ஆண்:
சின்ன ரோஜா இதழ்
அது கண்ணம் நான் என்றது

பெண்:
பாடும் புல்லாங்குழல்
உன் பாஷை நான் என்று கூறும்

ஆண்:
கூந்தல் அல்ல
தொங்கும் தோட்டம்
தோளில் சாய்தால்
ஊஞ்சல் ஆட்டும்

பெண்:
தேன் தரவேண்டும்
நீ வரவேண்டும்
கண் வாசல் பார்த்தது வா

ஒரு வான்மதி உன் பார்வதி
காதலி என்னை காதலி
தேவன் எந்தன் தேவதாஸை
காண ஏங்கினேன்
என் தேவதாஸ்
என் தேவதாஸ்
பாரு பாரு என்னும்
பாடல் கேட்டேனே
பாரு நானும் உனை பார்த்தேனே
ஒரு வான்மதி உன் பார்வதி

******************************************

பெண்:
கோடை காலங்களில்
குளிர் காற்று நீ ஆகிறாய்

ஆண்:
வாடை நேரங்களில்
ஒரு போர்வை நீயாக வந்தாய்

பெண்:
கண்கள் நான்கும்
பேசும் நேரம்
நானும் நீயும்
ஊமை ஆனோம்

ஆண்:
மைவிழி ஆசை
கை வலை ஓசை
என் என்று நான் சொல்ல வா

அடி வான்மதி என் பார்வதி
காதலி கண் பாரடி
தேடி வந்தா தேவதாஸை காண ஓடி வா

பெண்:
தேவதாஸ் என் தேவதாஸ்
பாரு பாரு என்னும் பாடல் கேட்டேனே

ஆண்:
ஆஹ ஆஹ

பெண்:
பாரு நானும் உனை பார்த்தேனே

ஆண்:
அடி வான்மதி என் பார்வதி

பெண்:
தேவதாஸ் என் தேவதாஸ்

******************************************

Friday, July 12, 2019

இரு விழியின் வழியே - சிவா பாடல் வரிகள்



படம்: சிவா
இசை: இளையராஜா

******************************************

பெண்:
ல ல லாலாலாலாலாலா லாலல
ல ல லாலாலாலாலாலா லாலல

ல ல லாலாலாலா 
ல ல லாலாலாலா 

இரு விழியின் வழியே நீயா வந்து போனது
இனி விடியும் வரையில் தூக்கம் என்ன ஆவது
இரு பார்வைகள் பரிமாறிடும் மன ஆசைகள்
அணை மீறிடும் அணை மீறும் போது காவல் ஏது
ஆண்:
இரு விழியின் வழியே நீயா வந்து போனது
இனி விடியும் வரையில் தூக்கம் என்ன ஆவது

******************************************

ஆண்:
தொட்டில் இடும் இரு தேம்மாங்கனி
என் தோளில் ஆட வேண்டுமே
பெண்:
கட்டில் இசும் உன் காமன் கனி
மலர் மாலை சூட வேண்டுமே
ஆண்:
கொஞ்சம் பொறு கொஞ்சம் பொறு
தேதி ஒன்று பார்க்கின்றேன்
பெண்:
கொஞ்சும் கிளி மஞ்சம் இடும்
தேதி சொல்ல போகிறேன்
ஆண்:
கார் கால மேகம் வரும்
பெண்:
கல்யாண ராகம் வரும்
ஆண்:
பாடட்டும் நாதஸ்வரம்
பெண்:
பார்க்கட்டும் நாளும் சுகம்
ஆண்:
விடிகாலையும் இளமாலையும்
இடை வேளையின்றி இன்ப தரிசனம்
பெண்:
இரு விழியின் வழியே நீயா வந்து போனது
இனி விடியும் வரையில் தூக்கம் என்ன ஆவது
ஆண்:
இரு பார்வைகள் பரிமாறிடும் மன ஆசைகள்
அணை மீறிடும் அணை மீறும் போது காவல் ஏது
பெண்:
விழியின் வழியே நீயா வந்து போனது
ஆண்:
இனி விடியும் வரையில் தூக்கம் என்ன ஆவது

******************************************

ஆண்:
உன் மேனியும் நிலக்கண்ணாடியும்
ரசம் பூச என்ன காரணம்
பெண்:
ஒவ்வொன்றிலும் உனை நீ காணலாம்
இதை கேட்பதென்ன நாடகம்
ஆண்:
எங்கே எங்கே ஒரே தரம்
என்னை உன்னில் பார்க்கிறேன்
பெண்:
இதோ இதோ ஒரே சுகம்
நானும் இன்று பார்க்கிறேன்
ஆண்:
தென்பாண்டி முத்துக்களா
பெண்:
நீ சிந்தும் முத்தங்களா
ஆண்:
நோகாமல் கொஞ்சம் கொடு
பெண்:
உன் மார்பில் மஞ்சம் இடு
இரு தோள்களில் ஒரு வானவில்
அது பூமி தேடி வந்த அதிசயம்
ஆண்:
விழியின் வழியே நீயா வந்து போனது
இனி விடியும் வரையில் தூக்கம் என்ன ஆவது
பெண்:
இரு பார்வைகள் பரிமாறிடும் மன ஆசைகள்
அணை மீறிடும் அணை மீறும் போது காவல் ஏது
இருவரும்:
ல ல லாலாலாலாலாலா லாலல
ல ல லாலாலாலாலாலா லாலல

******************************************