தமிழில் தேட.....

Showing posts with label சோழர்குல குந்தவை போல். Show all posts
Showing posts with label சோழர்குல குந்தவை போல். Show all posts

Friday, January 11, 2019

சோழர்குல குந்தவை போல் - (உடன் பிறப்பு)

படம்: உடன் பிறப்பு
இசை: இளையராஜா
*********************************
(ஆ1)சோழர்குல குந்தவை போல்
ஸ்வர்ணக்கிளி நான் தரவா
சேரர் இளம் தேவியைபோல்
சித்திரத்தை நான் தரவா

மன்னவன் மாமல்லன்
மாடத்து பைங்கிளி
கொண்டு வந்து நான் தரவா
நண்பா அன்பாய் மாலை சூடிக் கொள்ள

சோழர்குல குந்தவை போல்
ஸ்வர்ணக்கிளி நான் தரவா
சேரர் இளம் தேவியைபோல்
சித்திரத்தை நான் தரவா

(ஆ2) தாரம் தான் வந்த பின்னும்
தாயை போல் நான் உனை
(ஆ1)ஹூம் ஹும்
கைகளில் வைத்திருப்பேன்
நண்பன் நான் உன் துணை
(ஆ1)ஹூம் ஹும்
இன்பத்தினை பங்கு வைக்க
அன்புக் குயில் அங்கிருப்பாள்
துன்பத்தினை பங்கு கொள்ள
உன்னருகில் நான் இருப்பேன்
(ஆ1) பாசத்தில் உன் துணை
என்னை கட்டி போட்டதென்பேன்
(ஆ1,ஆ2)ஈருடலில் ஓருயிர் தான்
நீயும் நானும் மேலும் என்ன சொல்ல
(ஆ2) மோனகையைச் சிந்துகின்ற
மேனகையை நான் தரவா
வானகத்து தேவதையாம்
ஊர்வசியை நான் தரவா

(ஆ1) நேற்று நாம் வீதியிலே
இன்று நாம் வேலையில்
(ஆ2) ஹூம் ஹூம்
(ஆ1)நாளை ஓர் வேளை வந்தால்
நாமும் மனமாலையில்
(ஆ2) ஹூம் ஹும்
(ஆ1)வண்ணங்கள் மாறிப்போக
நாமும் இங்கு பூக்களல்ல
எண்ணங்கள் மாறிப் போக
சிந்திக்கின்ற ஆட்கள் அல்ல
(ஆ2)ஏழை நான் இன்றும் உன்
வீட்டுக்கொரு காவல் போலே
(ஆ1,ஆ2)ஈருடலில் ஓருயிர் தான்
நீயும் நானும் மேலும் என்ன சொல்ல
(ஆ2) மோனகையைச் சிந்துகின்ற
மேனகையை நான் தரவா
வானகத்து தேவதையாம்
ஊர்வசியை நான் தரவா
மன்னவன் பாரியின்
அங்கவை செங்கவை போல ஒரு பெண் தரவா
நண்பா அன்பாய் மாலை சூடிக்கொள்ள
(ஆ1)சோழர்குல குந்தவை போல்
ஸ்வர்ணக்கிளி நான் தரவா
(ஆ2)வானகத்து தேவதையாம்
ஊர்வசியை நான் தரவா