தமிழில் தேட.....

Showing posts with label பூவிழி வாசலிலே. Show all posts
Showing posts with label பூவிழி வாசலிலே. Show all posts

Thursday, March 21, 2019

சின்ன சின்ன ரோஜா பூவே - (பூவிழி வாசலிலே)

படம்: பூவிழி வாசலிலே
இசை: இளையராஜா

*********************************

சின்ன சின்ன ரோஜா பூவே
செல்லக் கண்ணே நீ யாரு
தப்பி வந்த சிப்பி முத்தே
உன்னைப் பெற்ற தாய் யாரு

சொல்லிக் கொள்ள வாயும் இல்லை
அள்ளிக்கொள்ள தாயும் இல்லை
ஏனோ சோதனை
இளநெஞ்சில் வேதனை

*********************************

சின்ன பிஞ்சு நெஞ்சுக்குள்ளே
என்ன என்ன ஆசையுண்டோ
உள்ளம் தன்னை மூடிவைத்த
தெய்வம் வந்தா சொல்லும் இங்கே
ஊரும் இல்லை பேரும் இல்லை
உண்மை சொல்ல யாரும் இல்லை
நீயும் இனி நானும் ஒரு ஜீவன் தானடா
சோலைக்கிளி போலே என் தோளில் ஆடடா
இது பேசா ஓவியம்
இதில் சோகம் ஆயிரம்

சின்ன சின்ன ரோஜா பூவே
செல்லக் கண்ணே நீ யாரு
தப்பி வந்த சிப்பி முத்தே
உன்னைப் பெற்ற தாய் யாரு

*********************************

கண்ணில் உன்னைக் காணும்போது
எண்ணம் எங்கோ போகுதைய்யா
என்னை விட்டுப் போன பிள்ளை
இங்கே உந்தன் கோலம் கொண்டு
வந்ததென்று எண்ணுகின்றேன்
வாழ்த்து சொல்லி பாடுகின்றேன்
கங்கை நீ என்றால் கரை இங்கு நானடா
வானம் நான் என்றால் விடிவெள்ளி நீயடா
என் வாழ்வில் நிம்மதி அது உந்தன் சன்னதி

சின்ன சின்ன ரோஜா பூவே
செல்லக் கண்ணே நீ யாரு

சொல்லிக் கொள்ள வாயும் இல்லை
அள்ளிக்கொள்ள தாயும் இல்லை
ஏனோ சோதனை
இளநெஞ்சில் வேதனை

*********************************

Wednesday, March 20, 2019

ஒரு கிளியின் தனிமையிலே - (பூவிழி வாசலிலே)

படம்: பூவிழி வாசலிலே
இசை: இளையராஜா

*********************************

ஆண்: ஒரு கிளியின் தனிமையிலே
சிறு கிளியின் உறவு

கோரஸ்: உறவு உறவு உறவு உறவு

ஆண்: இரு கிளிகள் உறவினிலே
புது கிளி ஒன்று வரவு

கோரஸ்: வரவு வரவு வரவு வரவு

ஆண்: விழிகளிலே கனவு மிதந்து வர
உலகமெலாம் நினைவு பறந்து வர

ஆண்: தினம் தினம் உறவு உறவு

கோரஸ்: புதிது புதிது

ஆண்: வரவு வரவு

கோரஸ்: இனிது இனிது

ஆண்: கனவு கனவு

கோரஸ்: புதிய கனவு

ஆண்: ஆஆ ஒரு கிளியின் தனிமையிலே
சிறு கிளியின் உறவு

கோரஸ்: உறவு உறவு உறவு உறவு

ஆண்: இரு கிளிகள் உறவினிலே
புது கிளி ஒன்று வரவு

*********************************

பெண்: முத்து இரத்தினம் உனக்குச் சூட
முத்திரைக் கவி இசைந்து பாட
நித்தம் நித்திரை கரைந்து ஓட
சித்தம் நித்தமும் நினத்து கூட
சிறு மழழை மொழிதனிலே

கோரஸ்: இனிமை தவழ இதயம் மகிழ

பெண்: இரு மலரின் விழிகளிலே

கோரஸ்: இரவும் மறைய பகலும் தெரிய

பெண்: ஆசையால் உன்னை அள்ள வேண்டும்
அன்பினால் என்னை கொள்ள வேண்டும்
சேரும் நாள் இதுதான்

பெண்: ஒரு கிளியின் தனிமையிலே
சிறு கிளியின் உறவு

கோரஸ்: உறவு உறவு உறவு உறவு

பெண்: இரு கிளிகள் உறவினிலே
புது கிளி ஒன்று வரவு

கோரஸ்: வரவு வரவு வரவு வரவு

*********************************

ல ல லா லா லலல லலலா லாலாலா
ல ல லா லா லலல லலலா லாலாலா
ல ல லா லா லலல லலலா லாலாலா
ல ல லா லா லலல லலலா லாலாலா
லலலலலா லலலல லால லாலா
லலலலலா லலலல லால லாலா

ஆண்: கட்டளைப்படி கிடைத்த வேதம்
தொட்டணைப்பதே எனக்கு போதும்

பெண்: மொட்டு மல்லிகை எடுத்து தூவும்
முத்து புன்னகை எனக்கு போதும்

ஆண்: ஒரு இறைவன் வரைந்த கதை

கோரஸ்: புதிய கவிதை இனிய கவிதை

பெண்: கதை முடிவும் தெரிவதில்லை

கோரஸ்:இளைய மனது இழுத்த கவிதை

ஆண்: பாசம் என்றொரு ராகம் கேட்கும்
பார்வை அன்பெனும் நீரை வார்க்கும்
பாடும் நாள் இதுதான்

ஆண்: ஒரு கிளியின் தனிமையிலே
சிறு கிளியின் உறவு

கோரஸ்: உறவு உறவு உறவு உறவு

பெண்: இரு கிளிகள் உறவினிலே
புது கிளி ஒன்று வரவு

கோரஸ்: வரவு வரவு வரவு வரவு

ஆண்: விழிகளிலே கனவு மிதந்து வர
உலகமெலாம் நினைவு பறந்து வர

தினம் தினம் உறவு உறவு

கோரஸ்: புதிது புதிது

ஆண்: வரவு வரவு

கோரஸ்: இனிது இனிது

ஆண்: கனவு கனவு

கோரஸ்: புதிய கனவு

ஆண்: ஆஆ ஒரு கிளியின்
தனிமையிலே சிறு கிளியின் உறவு

கோரஸ்: உறவ உறவ உறவு உறவு
ஒரு கிளியின் தனிமையிலே
சிறு கிளியின் உறவு
இரு கிளிகள் உறவினிலே
புது கிளி ஒன்று வரவு
ஒரு கிளியின் தனிமையிலே
சிறு கிளியின் உறவு

*********************************

Friday, March 15, 2019

பாட்டிங்கே ரபப்பா - (பூவிழி வாசலிலே)

படம்: பூவிழி வாசலிலே
இசை: இளையராஜா

*********************************

பெண் கோரஸ்:
பாட்டிங்கே ரபப்பா
ஆட்டமிங்கே ரபப்பா
இன்னிசையோடு மெல்ல நீ சேர
தேனுடன் பாலும் பூவுடன் ஓட
பாட்டிங்கே ரபப்பா
ஆட்டமிங்கே

*********************************

ஆண்:
பகலில் மனிதர்க்கு மதியே துணை
இரவில் பலருக்கு மதுவே துணை
வேறொன்றும் தெரியாது ஏக்கங்கள் புரியாது
ஏற்றிய பாரம் தாங்காது
இறக்கிட நீயும் வா
ஏங்கிய உள்ளம் தூங்காது
அமைதியை மீண்டும் தா
வா பூவே வா

பெண் கோரஸ்:
பாட்டிங்கே ரபப்பா
ஆட்டமிங்கே

பெண் கோரஸ்:
தா தர ரத்தா தத்தா
தரரா ரரரா
தா தர ரத்தா தத்தா
தரரா
தா தர ரத்தா தத்தா
தரரா ரரரா
தா தர ரத்தா தத்தா
தரரா
தா தரரா ரா ரா
தகு திகு திகு தகு திகு திகு தகு திகு
தகு திகு திகு தகு திகு திகு தகு திகு

*********************************

ஆண்:
அசையும் அசைவுகள் இசையின் நிழல்
அமைதி திருவிழி இறைவன் மடல்
பூவே நீ சாமந்தி
பொழுதில் நீ பொன்னந்தி
எனக்கொரு ராகம் நீ தானே
புது புது கீதம் தா
தனி தனி வாழ்க்கை ஏதேது
இனியெதும் இனிமை தான்
வா பூவே வா

பெண் கோரஸ்:
பாட்டிங்கே ரபப்பா
ஆட்டமிங்கே ரபப்பா
இன்னிசையோடு மெல்ல நீ சேர
தேனுடன் பாலும் பூவுடன் ஓட
பாட்டிங்கே ரபப்பா
ஆட்டமிங்கே

*********************************