தமிழில் தேட.....

Showing posts with label பேரைச் சொல்லவா அது நியாயம். Show all posts
Showing posts with label பேரைச் சொல்லவா அது நியாயம். Show all posts

Friday, March 29, 2019

பேரைச் சொல்லவா அது நியாயம் - (குரு)



படம்: குரு
இசை: இளையராஜா

*********************************

பெண் : பேரைச் சொல்லவா அது நியாயம் ஆகுமா
பேரைச் சொல்லவா அது நியாயம் ஆகுமா
நான் பாடும் ஸ்ரீ ராகம்
என்னாளுமே நீயல்லவா
என் கண்ணனே என் மன்னவா

ஆண் : தங்க மாங்கனி என் தர்ம தேவதை
தங்க மாங்கனி என் தர்ம தேவதை
நான் பாடும் ஸ்ரீ ராகம் என்னாளுமே
நீயல்லவா என் பூங்கொடி இதை சொல்லவா

பெண் : பேரை சொல்லவா அது நியாயம் ஆகுமா

*********************************

ஆண் : இடை ஒரு கொடி இதழ் ஒரு கனி
இன்பலோகமே உன் கண்கள் தானடி

பெண் : மலரது முகம் அணைவது சுகம்
ஒன்று போதுமே இனி உங்கள் தேன் மொழி

ஆண் : நான் தேடினேன் பூந்தோட்டமே வந்தது

பெண் : நான் கேட்டது அருகே நின்றது
ஆண் : இனிமேல் பறக்கட்டும் பறவைகள் இரண்டும்

பெண் : பேரை சொல்லவா அது நியாயம் ஆகுமா
ஆண் : ப ப ப பா ப ப ப பா

*********************************

பெண் : புது மழை இது சுவை தரும் மது
வைர பூச்சரம் அது இதழில் வந்தது

ஆண் : இனியது இது கனிந்தது அது
இளமை என்பது உன் உடலில் உள்ளது

பெண் : நீ போட்டது என் கண்ணிலே மந்திரம்

ஆண் : நான் பார்த்தது அழகின் ஆலயம்

பெண் : இதுதான் உலகத்தை ரசிக்கின்ற பருவம்

ஆண் : தங்க மாங்கனி என் தர்ம தேவதை

பெண் : ப ப ப பா ப ப ப பா

*********************************

ஆண் : நவமணி ரதம் நடை பெறும் விதம்
நமது கோவிலில் இனி நல்ல உற்சவம்

பெண் : கவிதைகள் தரும் கலை உந்தன் வசம்
கங்கை ஆறு போல் இனி பொங்கும் மங்களம்

ஆண் : ஓராயிரம் தேனாறுகள் வந்தன

பெண் : நீராடுவோம் தினமும் நீந்துவோம்

ஆண் : சரிதான் நடக்கடும் இளமையின் ரசனை

பெண் : பேரை சொல்லவா அது நியாயம் ஆகுமா

ஆண் : தங்க மாங்கனி என் தர்ம தேவதை

பெண் : நான் பாடும் ஸ்ரீ ராகம்
லா ல லா லா ல லா

ஆண் : லா ல லா லா ல லா
ப ப ப பா ப ப ப பா

*********************************