தமிழில் தேட.....

Showing posts with label மன்னன். Show all posts
Showing posts with label மன்னன். Show all posts

Thursday, September 5, 2019

கும்தலக்கடி கும்தலக்கடி பாட்டு - மன்னன் பாடல் வரிகள்

படம்: மன்னன்
இசை: இளையராஜா

******************************************

ஆண் :
கும்தலக்கடி கும்தலக்கடி பாட்டு
இதை கும்மிடிபூண்டி கூட்சு வண்டியில் ஏத்து

குழு :
கும்தலக்கடி கும்தலக்கடி பாட்டு
இதை கும்மிடிபூண்டி கூட்சு வண்டியில் ஏத்து

குழு :
கும்தலக்கடி கும்தலக்கடி

நான் மாமனாரு வீட்டில் மன்னனாக ஆனேன்
ஆனபோதும் இங்கே அண்ணனாகிப் போனேன்
கும்தலக்கடி கும்தலக்கடி
கும்தலக்கடி கும்தலக்கடி பாட்டு
இதை கும்மிடிபூண்டி கூட்சு வண்டியில் ஏத்து

குழு :
கும்தலக்கடி கும்தலக்கடி பாட்டு
இதை கும்மிடிபூண்டி கூட்சு வண்டியில் ஏத்து

******************************************

ஆண் :
பாட்டாளிக் கூட்டமெல்லாம்
பாரவண்டி இழுக்குது

குழு :
பாடுபட்டுப் பொழைக்குது
பாட்டுக்கள் எடுத்துப் படிக்குது

ஆண் :
அன்னாடம் மீன் பிடிக்கும்
ஏழை சனம் கடலிலே

குழு :
போகுறப்போ படகிலே
ஏலேலோ என்று பாடுது

ஆண் : ஏத்தம் இறைப்பவன்
குழு : ஹேய்
ஆண் : ஏரைப் பிடிப்பவன்
குழு : ஹேய்
ஆண் : மூட்டை சுமப்பவன்
குழு : ஹேய்
ஆண் : முடியை வழிப்பவன்

ஆண் :
எல்லாம் ஒரு இனம்
இங்கு பாடித்தான் செய்யுது வேல

குழு : ஹேய் ஹேய்

ஆண் : பாட்டாலே மனம் கொண்ட
பாரங்கள் நீங்குவதாலே

குழு : ஹேய் ஹேய்

ஆண் :
நாம் கூடத்தான்
ஒரு கச்சேரி வைப்போமடா

குழு :
ஹேய்
கும்தலக்கடி கும்தலக்கடி பாட்டு
இதை கும்மிடிபூண்டி கூட்சு வண்டியில் ஏத்து

******************************************

ஆண் :
தை மாசம் பிறந்திடுச்சு
பொங்கப் பானை வைக்கலாம்

குழு :
புதுசு வாங்கிக்கட்டலாம்
பொங்கலோ பொங்கல் பாடலாம்

ஆண் :
ஓயாமல் உழைக்கும் வர்க்கம்
நாளும் இங்கு சிரிக்கணும்

குழு :
நாடும் வீடும் செழிக்கணும்
நல்லது எல்லாம் நடக்கணும்

ஆண் : ஏறி கெடக்குது
குழு : ஹேய்
ஆண் : எல்லாம் விலையிலே
குழு : ஹேய்
ஆண் : ஏற்றம் வரலியே
குழு : ஹேய்
ஆண் : எங்க நிலையிலே
குழு : ஹேய்
ஆண் : மாசம் தான் வரும்
எங்க சம்பளம் பத்தலே சாமி
குழு : ஹேய் ஹேய்
ஆண் : போனஸ்தான் தரும்
முதலாளியை மெச்சிடும் பூமி
குழு : ஹேய் ஹேய்
ஆண் : போராடினா வெற்றி நிச்சயம்
நிச்சயம் தான்
குழு : ஹேய்

ஆண் :
கும்தலக்கடி கும்தலக்கடி பாட்டு
இதை கும்மிடிபூண்டி கூட்சு வண்டியில் ஏத்து

குழு :
கும்தலக்கடி கும்தலக்கடி பாட்டு
இதை கும்மிடிபூண்டி கூட்சு வண்டியில் ஏத்து

ஆண் :
நான் மாமனாரு வீட்டில்
மன்னனாக ஆனேன்
ஆனபோதும் இங்கே
அண்ணனாகிப் போனேன்

கும்தலக்கடி கும்தலக்கடி

கும்தலக்கடி கும்தலக்கடி பாட்டு
இதை கும்மிடிபூண்டி கூட்சு வண்டியில் ஏத்து

குழு :
கும்தலக்கடி கும்தலக்கடி பாட்டு
ஆண் : ஆமாம்
குழு : இதை கும்மிடிபூண்டி கூட்சு வண்டியில் ஏத்து
ஆண் : போடு

குழு :
கும்தலக்கடி கும்தலக்கடி பாட்டு
இதை கும்மிடிபூண்டி கூட்சு வண்டியில் ஏத்து
கும்தலக்கடி கும்தலக்கடி பாட்டு
இதை கும்மிடிபூண்டி கூட்சு வண்டியில் ஏத்து

******************************************

அம்மா என்றழைக்காத - மன்னன் பாடல் வரிகள்

படம்: மன்னன்
இசை: இளையராஜா

******************************************

அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே
அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே
நேரில் நின்று பேசும் தெய்வம்
பெற்ற தாயன்றி வேறொன்று ஏது
அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே

******************************************

அபிராமி சிவகாமி கருமாயி மகமாயி
திருக்கோயில் தெய்வங்கள் நீதானம்மா
அன்னைக்கு அன்றாடம் அபிஷேகம் அலங்காரம்
புரிகின்ற சிறுத்தொண்டன் நான்தானம்மா
பொருளோடு புகழ் வேண்டும் மகனல்ல தாயே உன்
அருள் வேண்டும் எனக்கென்றும் அது போதுமே
அடுத்திங்கு பிறப்பொன்று அமைந்தாலும் நான் உந்தன்
மகனாகப் பிறக்கின்ற வரம் வேண்டுமே
அதை நீயே தருவாயே

அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே

******************************************

பசும் தங்கம் புது வெள்ளி மாணிக்கம் மணிவைரம்
அவை யாவும் ஒரு தாய்க்கு ஈடாகுமா
விலை மீது விலை வைத்துக் கேட்டாலும் கொடுத்தாலும்
கடைதன்னில் தாயன்பு கிடைக்காதம்மா
ஈரைந்து மாதங்கள் கருவோடு எனைத்தாங்கி
நீ பட்ட பெரும்பாடு அறிவேனம்மா
ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உழைத்தாலும்
உனக்கிங்கு நான் பட்ட கடன் தீருமா
உன்னாலே பிறந்தேனே

அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே
நேரில் நின்று பேசும் தெய்வம்
பெற்ற தாயன்றி வேறொன்று ஏது
அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே
அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே

******************************************

Thursday, July 25, 2019

ராஜாதி ராஜா உன் தந்திரங்கள் - மன்னன் பாடல் வரிகள்

படம்: மன்னன்
இசை: இளையராஜா

******************************************

பெண்: ராஜாதி ராஜா
உன் தந்திரங்கள்
நிற்காமல் கூத்தாடும்
பம்பரங்கள்

ஆண்: மாய ஜாலம் என்ன
மையல் கொண்டு நீயும்
நாளும் ஆட்டம் போடவா

பெண்: நேரம் காலம் என்ன
நேசம் கொண்டு நீயும்
காதல் தோட்டம் போடவா

ஆண்: ஹேராணி
என்னோடு ஆடவா நீ

பெண்: பூமேனி
கொண்டாடும் வெண் பனி
என்னாளும் ராஜாத்தி ராஜா
உன் தந்திரங்கள்
நிற்காமல் கூத்தாடும்
பம்பரங்கள்

******************************************

ஆண்: மான் கூட்டம் மீன் கூட்டம்
வேடிக்கை பார்க்கின்ற
கண்ணிரண்டிலே என்ன மயக்கம்

பெண்: மாமாங்கம் ஆனாலும்
மன்னா உன் மார் சேர்ந்து
சின்ன மலர் தான் சிந்து படிக்கும்

ஆண்: கையோடு கை சேரும்
கல்யாண வைபோகம்
கண்டு களிக்கும் காலம் பிறக்கும்

பெண்: மேள சத்தம்
கேட்பதெந்த தேதியோ

பெண்/குழு:லால லால லால லால லால லா

ஆண்: தேவனுக்கு சொந்தம்
இந்த தேவியோ

பெண்/குழு:லால லால லால லால லால லா

பெண்: காதும் காதுமாய்

ஆண்: காதல் மந்திரம்

பெண்: ஓதுகின்ற மன்னன் அல்லவோ
என்னாளும் இங்கு

பெண்: ராஜாதி ராஜா
உன் தந்திரங்கள்
நிற்காமல் கூத்தாடும்
பம்பரங்கள்

******************************************

பெண்: நின்றாலும் சென்றாலும்
பின்னோடு என்னாளும்
வந்த நிழலே வண்ண மயிலே

ஆண்: தொட்டாலும் பட்டாலும்
முத்தாரம் இட்டாலும்
என்ன சுகமே என்ன சுவையே

பெண்: உன்மேனி பொன்மேனி
இன்னாளும் என்னாளும்
என்னை மயக்க தன்னை மறக்க

ஆண்: ஓடை மீது ஓடம் போல
ஆடவா

பெண்/குழு:லால லால லால லால லால லா

பெண்: உன்னை அன்றி யாரும் இல்லை
ஆடவா

பெண்/குழு:லால லால லால லால லால லா

ஆண்: காதல் கன்னிகை

பெண்: காமன் பண்டிகை

ஆண்: காணுகின்ற காலம் அல்லவா
என்னாளும் இங்கு

பெண்: ராஜாதி ராஜா
உன் தந்திரங்கள்
நிற்காமல் கூத்தாடும்
பம்பரங்கள்

ஆண்: மாய ஜாலம் என்ன
மையல் கொண்டு நீயும்
நாளும் ஆட்டம் போடவா ஹஹா

பெண்: நேரம் காலம் என்ன
நேசம் கொண்டு நீயும்
காதல் தோட்டம் போடவா

ஆண்: ஹேராணி
என்னோடு ஆடவா நீ

பெண்: பூமேனி
கொண்டாடும் வெண்பனி
என்னாளும் ராஜாத்தி ராஜா
உன் தந்திரங்கள்
நிற்காமல் கூத்தாடும்
பம்பரங்கள்

ஆண்: ரூபாபா ராபாப்பா
ராப பப்பா
ரூரூரூரூ
ரூரூரூடூரூரூ

******************************************