தமிழில் தேட.....

Showing posts with label வா பொன் மயிலே. Show all posts
Showing posts with label வா பொன் மயிலே. Show all posts

Monday, April 8, 2019

வா பொன் மயிலே - (பூந்தளிர்)



படம்: பூந்தளிர்
இசை: இளையராஜா

*********************************

வா பொன் மயிலே
நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது
என்றும் நீயின்றி நானில்லை
நானின்றி நீயில்லை கண்மணி

வா பொன் மயிலே
நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது

*********************************

காதலின் ஜாடையெல்லாம் கண்ணழகிலே
கோவிலின் தேரழகோ முன்னழகிலே
கனியே மனம் மயங்க மயங்க
வருவாய் சுவை பெருகப் பெருக
இளமையின் நளினமே
இனிமையின் உருவம் மலர

வா பொன் மயிலே நெஞ்சம்
ஏக்கத்தில் தவிக்குது
என்றும் நீயின்றி நானில்லை
நானின்றி நீயில்லை கண்மணி

வா பொன் மயிலே
நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது

*********************************

மேனியின் மஞ்சள் நிறம்
வானளந்ததோ
பூமியின் நீல நிறம் கண்ணளந்ததோ
அழகே சுகம் வளர வளர
நினைவே தினம் பழகப் பழக
உரிமையில் அழைக்கிறேன்
உயிரிலே கலந்து மகிழ

வா பொன் மயிலே நெஞ்சம்
ஏக்கத்தில் தவிக்குது
என்றும் நீயின்றி நானில்லை
நானின்றி நீயில்லை கண்மணி

வா பொன் மயிலே நெஞ்சம்
ஏக்கத்தில் தவிக்குது

*********************************