தமிழில் தேட.....

Showing posts with label ஶ்ரீரங்க ரங்கநாதனின். Show all posts
Showing posts with label ஶ்ரீரங்க ரங்கநாதனின். Show all posts

Friday, February 1, 2019

ஶ்ரீரங்க ரங்கநாதனின் - (மகாநதி)

படம்: மகாநதி
இசை: இளையராஜா

*********************************

பெண்: கங்கா ஷங்காஷ காவேரி
ஶ்ரீரங்கேச மனோஹரி
கல்யாணகாரி கலுஷாரி
நமஸ்தேஸ்து சுபாச்சரி

ஆ... ஆஆ.ஆ.ஆ..ஆ..ஆ.ஆ....
ஆ அ ஆ அ ஆ அ ஆஆ அஆ.

ஶ்ரீரங்க ரங்கநாதனின்
பாதம் வந்தனம் செய்யடி
ஶ்ரீதேவி ரங்கநாயகி நாமம் சந்ததம் சொல்லடி

ஶ்ரீரங்க ரங்கநாதனின்
பாதம் வந்தனம் செய்யடி
ஶ்ரீதேவி ரங்கநாயகி நாமம் சந்ததம் சொல்லடி

இன்பம் பொங்கும் தென்கங்கை நீராடி
மஞ்சள் குங்குமம் மங்கை நீசூடி

இன்பம் பொங்கும் தென்கங்கை நீராடி
தென்றல் போல நீ ஆடடி
மஞ்சள் குங்குமம் மங்கை
நீசூடி தெய்வப்பாசுரம் பாடடி
ஶ்ரீரங்க ரங்கநாதனின்
பாதம் வந்தனம் செய்யடி
ஶ்ரீதேவி ரங்கநாயகி நாமம் சந்ததம் சொல்லடி

*********************************

பெண்: கொள்ளிடம் நீர்மீது
நர்த்தனம் ஆடும்
மெல்லிய பூங்காற்று மந்திரம் பாடும்
செங்கனி மேலாடும் மாமரம் யாவும்
ரங்கனின் பேர்சொல்லிச் சாமரம் வீசும்
அந்நாளில் சோழமன்னர்கள்
ஆக்கிவைத்தனர் ஆலயம்
அம்மாடி என்ன சொல்லுவேன்
கோயில் கோபுரம் ஆயிரம்
தேனாக நெஞ்சை அள்ளுமே தெய்வப்
பூந்தமிழ்ப் பாயிரம்......
ஶ்ரீரங்க ரங்கநாதனின்
பாதம் வந்தனம் செய்யடி
ஶ்ரீதேவி ரங்கநாயகி நாமம் சந்ததம் சொல்லடி
இன்பம் பொங்கும் தென்கங்கை நீராடி
தென்றல் போல நீ ஆடடி
மஞ்சள் குங்குமம் மங்கை
நீசூடி தெய்வப்பாசுரம் பாடடி
ஶ்ரீரங்க ரங்கநாதனின்
பாதம் வந்தனம் செய்யடி
ஶ்ரீதேவி ரங்கநாயகி நாமம் சந்ததம் சொல்லடி

*********************************

ஆண்: கன்னடம் தாய்வீடு என்றிருந்தாலும்
கன்னி உன் மறுவீடு தென்னகம் ஆகும்
கங்கையில் மேலான காவிரி தீர்த்தம்
மங்கள நீராட முன்வினை தீர்க்கும்
நீர்வண்ணம் எங்கும் மேவிட
நஞ்சை புஞ்சைகள் பாரடி
ஊர்வண்ணம் என்ன கூறுவேன் தெய்வலோகமே தானடி
வேறெங்கு சென்றபோதிலும்
இந்த இன்பங்கள் ஏதடி
ஶ்ரீரங்க ரங்கநாதனின்
பாதம் வந்தனம் செய்யடி
ஶ்ரீதேவி ரங்கநாயகி நாமம் சந்ததம் சொல்லடி
இன்பம் பொங்கும் தென்கங்கை
நீராடித் தென்றல் போல நீ ஆடடி
மஞ்சள் குங்குமம் மங்கை
நீசூடி தெய்வப்பாசுரம் பாடடி
ஸ்ரீரங்க ரங்கநாதனின்
பாதம் வந்தனம் செய்யடி

கோரஸ்: ஶ்ரீரங்கரங்கநாதனின்
பாதம் வந்தனம் செய்யடி
ஶ்ரீதேவி ரங்கநாயகி நாமம் சந்ததம் சொல்லடி

*********************************