படம் : என்கிட்டே மோதாதே
இசை : இளையராஜா
*********************************
பெண்:
சரியோ சரியோ நான் காதலித்தது
சரியோ சரியோ நான் காதலித்தது
சரியோ சரியோ நான் காதலித்தது
சரியோ சரியோ நான் காதலித்தது
மடிமேலே வைத்து மகராஜன் கொஞ்ச
மணிமுத்தம் சிந்த மெதுவாகக் கெஞ்ச
ஆடிக் கொண்டாடும் ஆனந்த கூத்து
ஆண் :
சரிதான் சரிதான் நீ காதலித்தது
சரிதான் சரிதான் நீ காதலித்தது
*********************************
ஆண் :
பாய் போடத்தானே தாய்மாமன் நானே
பூவைக்குப் பூவை வைக்க வந்தேனே
பெண்:
நீ வைத்த பூவும் நான் வைத்த பொட்டும்
நீங்காத சொந்தம் என்று கண்டேனே
ஆண் : நீயின்றி எனக்கு யார்தான் பொருத்தம்
பெண்: ஆனாலும் சிலபேர் மனதில் வருத்தம்
ஆண் : கண்ணே நீ என்றும் பாடு காதலின் விருத்தம்
பெண்:
சரியோ சரியோ நான் காதலித்தது
சரியோ சரியோ நான் காதலித்தது
ஆண் :
மடிமேலே வைத்து மகராஜன் கொஞ்ச
மணிமுத்தம் சிந்த மெதுவாகக் கெஞ்ச
ஆடிக் கொண்டாடும் ஆனந்த கூத்து
பெண்: சரியோ சரியோ நான் காதலித்தது
ஆண் : சரிதான் சரிதான் நீ காதலித்தது
*********************************
பெண்:
பூமாலை சூட பொன்னூஞ்சல் ஆட
கல்யாண மேளச் சத்தம் கேட்காதோ
ஆண் :
கட்டில்கள் போடக் கச்சேரி பாடப்
பூந்தென்றல் எட்டி எட்டிப் பார்க்காதோ
பெண்: நீ என்னைத் தாங்கு மார்பில் நிறுத்தி
ஆண் : நீயின்றி ஏது வாழ்வில் ஒருத்தி
பெண்: நான்தானே வாடை பட்டு வெடிக்கின்ற பருத்தி
ஆண் :
சரிதான் சரிதான் நீ காதலித்தது
சரிதான் சரிதான் நீ காதலித்தது
பெண்:
மடிமேலே வைத்து மகராஜன் கொஞ்ச
மணிமுத்தம் சிந்த மெதுவாக கெஞ்ச
ஆண் : ஆடிக் கொண்டாடும் ஆனந்த கூத்து
பெண்: சரியோ சரியோ நான் காதலித்தது
ஆண் : சரிதான் சரிதான் நீ காதலித்தது
பெண்: சரியோ சரியோ நான் காதலித்தது
ஆண் : சரிதான் சரிதான் நீ காதலித்தது
*********************************