படம்: தீர்த்தக்கரையினிலே
இசை: இளையராஜா
******************************************
ஓ ஓஓ ஓஓஓ ஓஓ ஓஓஓஓ
ஆ ஆஆ ஆஆஆ ஆஆ ஆ
தீர்த்தக்கரை ஓரத்திலே
தென்பொதிகை சாரத்திலே
தீர்த்தக்கரை ஓரத்திலே
தென்பொதிகை சாரத்திலே
பாடும் மொழி உனது
தேடும் விழி எனது
தீர்த்தக்கரை ஓரத்திலே
தென்பொதிகை சாரத்திலே
******************************************
பாலைவன பாதையிலே
பால் நிலவை நானும் கண்டேன்
பாலைவன பாதையிலே
பால் நிலவை நானும் கண்டேன்
தேன் இறைத்த பால் நிலவு
தீ இறைத்து போவதென்ன
காதல் வரி பாடலெல்லாம்
கானல் வரி ஆனதென்ன
என் ஜீவன் நீ இன்றி
என்னாளும் வாழாது
என் கண்கள் உன் கோலம்
காணாமல் தூங்காதம்மா ஆ
ஆஆஆஆ ஆஆஆ
தீர்த்தக்கரை ஓரத்திலே
தென்பொதிகை சாரத்திலே
******************************************
ஒற்றை வழி பாதையிலே
உன்னை மட்டும் நான் நினைத்தேன்
ஒற்றை வழி பாதையிலே
உன்னை மட்டும் நான் நினைத்தேன்
நெற்றி முதல் பாதம் வரை
முத்தம் இட்ட சொப்பனங்கள்
ஒற்றிக் கொண்ட தொட்டுக் கொண்ட
அத்தனையும் கற்பனைகள்
நேராக உன் பார்வை
என் மீது வாராது
நீ இன்றி இன்பங்கள்
என்னோடு சேராதம்மா ஆ
ஆஆஆஆ ஆஆஆ
தீர்த்தக்கரை ஓரத்திலே
தென்பொதிகை சாரத்திலே
பாடும் மொழி உனது
தேடும் விழி எனது
தீர்த்தக்கரை ஓரத்திலே
தென்பொதிகை சாரத்திலே
******************************************
No comments:
Post a Comment
உங்கள் கருத்து...