தமிழில் தேட.....

Tuesday, December 15, 2020

நிலா காயும் நேரம் - செம்பருத்தி பாடல் வரிகள்



படம்: செம்பருத்தி

இசை: இளையராஜா 


*********************************


ஆண்: 

நிலா காயும் நேரம் சரணம்

உலா போக நீயும் வரணும் 


பெண்: 

நிலா காயும் நேரம் சரணம்

உலா போக நீயும் வரணும் 


ஆண்: 

பார்வையில் புது புது

கவிதைகள் மலர்ந்திடும்

காண்பவை யாவுமே தேன்

அன்பே நீயே அழகின் அமுதே 

அன்பே நீயே அழகின் அமுதே 


பெண்: 

நிலா காயும் நேரம் சரணம்

உலா போக நீயும் வரணும் 


*********************************


ஆண்: 

தென்றல் தேரில் நான் தான்

போகும் நேரம் பார்த்து

தேவர் கூட்டம் பூ தூவி

பாடும் நல்ல வாழ்த்து 


பெண்: 

கண்கள் மூடி நான் தூங்க

திங்கள் வந்து தாலாட்டும்

காலை நேரம் ஆனாலே

கங்கை வந்து நீராட்டும் 


ஆண்: 

நினைத்தால் இதுப் போல் 

ஆகாததேது 


பெண்: 

அணைத்தால் உனைத்தான்

நீங்காது பூ மாது 


ஆண்: 

நெடு நாள் திருத்தோள்

எங்கும் நீ கொஞ்ச

அன்பே நீயே அழகின் அமுதே 

அன்பே நீயே அழகின் அமுதே 


பெண்: நிலா காயும் நேரம் சரணம்


ஆண்: உலா போக நீயும் வரணும் 


*********************************


பெண்: 

மின்னல் நெய்த சேலை

மேனி மீது ஆட

மிச்சம் மீதி காணாமல்

மன்னன் நெஞ்சம் வாட


ஆண்: 

அர்த்த ஜாமம் நான் சூடும்

ஆடை என்றும் நீயாகும்

அங்கம் யாவும் நீ மூட

ஆசை தந்த நோய் போகும்


பெண்: 

நடக்கும் தினமும்

ஆனந்த யாகம் 


ஆண்: 

சிலிர்க்கும் அடடா

ஸ்ரீதேவி பூந்தேகம் 


பெண்: 

அனைத்தும் வழங்கும்

காதல் வைபோகம்

அன்பே நீயே அழகின் அமுதே 

அன்பே நீயே அழகின் அமுதே 


ஆண்: 

நிலா காயும் நேரம் சரணம்

உலா போக நீயும் வரணும் 


பெண்: 

பார்வையில் புது புது

கவிதைகள் மலர்ந்திடும்

காண்பவை யாவுமே தேன்


ஆண்: 

அன்பே நீயே அழகின் அமுதே 

அன்பே நீயே அழகின் அமுதே 


பெண்:  நிலா காயும் நேரம் சரணம்


ஆண்:  உலா போக நீயும் வரணும் 



*********************************


Monday, December 14, 2020

விழிகள் மேடையாம் - கிளிஞ்சல்கள் பாடல் வரிகள்


படம்: கிளிஞ்சல்கள்

இசை: டி ராஜேந்தர் 


*********************************


பெண்: 

பாப்ப பாப்ப பா 

பாப்ப பாப்ப பா


ஆண்:

பாப்ப பாப்ப பா 

பாப்ப பாப்ப பா


பெண்: 

லால லால லா 

லால லால லா

ஆண்:

லால லால லா 

லால லால லா


பெண்: 

விழிகள் மேடையாம்

இமைகள் திரைகளாம்

விழிகள் மேடையாம்

இமைகள் திரைகளாம்

பார்வை நாடகம்

அரங்கில் ஏறுதாம்

ஓஓஓ ஓஓஓ ஓஓஓ ஓஓஓ

ஓஓஓஓஓஓஓஓ ஓ


ஆண்: 

ஜூலி ஐ லவ் யூ (பெண்: ஹஅ அஅஅஅ அஅஅஅ)

ஜூலி ஐ லவ் யூ (பெண்: ஹஅ அஅஅஅ அஅஅஅ)

பபப் பபப் பபப் பபப்

ஜூலி ஐ லவ் யூ ( பெண்: ஹோ )

பபப் பபப் பபப் பபப்

ஜூலி ஐ லவ் யூ


*********************************


பெண்:

மை தடவும் விழியோரம்

மோகனமாய் தினம் ஆடும்

மயக்கம் தரும்

மன்னவனின் திருவுருவம்

மை தடவும் விழியோரம்

மோகனமாய் தினம் ஆடும்

மயக்கம் தரும்

மன்னவனின் திருவுருவம்


மன வீணையிலே நாதமீட்டி

கீதமாகி நீந்துகின்ற தலைவா

இதழ் ஓடையிலே வார்த்தையென்னும்

பூக்களாகி மிதக்கின்ற பாட்டா


விழிகள் மேடையாம்

இமைகள் திரைகளாம்

பார்வை நாடகம்

அரங்கில் ஏறுதாம்

ஓஓஓ ஓஓஓ ஓஓஓ ஓஓஓ

ஓஓஓஓஓஓஓஓ ஓ


ஆண்: 

ஜூலி ஐ லவ் யூ (பெண்: ஹஅ அஅஅஅ அஅஅஅ)

ஜூலி ஐ லவ் யூ (பெண்: ஹஅ அஅஅஅ அஅஅஅ)


*********************************



பெண்:

பப பப்பா

பா பா பா பா


ஆண்:

தரத தத்தா

ஹ்ம்ம்

பெண்:

நினைவென்னும் காற்றினிலே

மனமென்னும் கதவாட

தென்றலென வருகை தரும்

கனவுகளே

உன் நினைவென்னும் காற்றினிலே

மனமென்னும் கதவாட

தென்றலென வருகை தரும்

கனவுகளே


மது மாலையிலே மஞ்சள் வெயில்

கோலமென நெஞ்சமதில் நீ வீச

மனச் சோலையிலே வட்டமிடும்

வாசமென்னும் உள்ளமதில் நீ பொங்க

விழிகள் மேடையாம்

இமைகள் திரைகளாம்

பார்வை நாடகம்

அரங்கில் ஏறுதாம்

ஓஓஓ ஓஓஓ ஓஓஓ ஓஓஓ

ஓஓஓஓஓஓஓஓ ஓ


ஆண்: 

ஜூலி ஐ லவ் யூ

ஜூலி ஐ லவ் யூ

பபப் பபப் பபப் பபப்

ஜூலி ஐ லவ் யூ ( பெண்: ஹோ )

பபப் பபப் பபப் பபப்

ஜூலி ஐ லவ் யூ ( பெண்: ஹோ )


*********************************


Saturday, December 5, 2020

சின்ன சின்ன கண்ணா - கிளிஞ்சல்கள் பாடல் வரிகள்



படம்: கிளிஞ்சல்கள்

இசை: டி ராஜேந்தர் 


*********************************


சின்ன சின்ன கண்ணா 

சேதி சொல்லும் மன்னா

உன்னில் என்னை என்னில் உன்னை காண 

கண்ணில் மின்ன நெஞ்சில் வைக்க எண்ண

ஓடி இங்கே வாராய் 

ஒண்ணே ஒண்ணு தாராய்

சின்ன சின்ன கண்ணா 

சேதி சொல்லும் மன்னா

உன்னில் என்னை என்னில் உன்னை காண 

கண்ணில் மின்ன நெஞ்சில் வைக்க எண்ண


*********************************


சுட்டி பையா சுற்றி வந்தால் 

முட்டி தருவேனோ

எட்டி நின்றால் கட்டிக் கொள்ள 

என்ன செய்வேனோ

அடம் ஒன்று பிடிக்காதே 

தேர் வலம் என்று இழுக்காதே

ஹே ஹே ஹே அடம் ஒன்று பிடிக்காதே 

தேர் வலம் என்று இழுக்காதே

பொடியுடன் சிலிர்த்திட கைகளில் தவழ்ந்திட 

சுகம் ஒன்று பிறக்காதோ

கேட்டதை கொடுத்திட தருவதை வாங்கிட

தடம் ஒன்றும் இருக்காதோ


சின்ன சின்ன கண்ணா 

சேதி சொல்லும் மன்னா

உன்னில் என்னை என்னில் உன்னை காண 

கண்ணில் மின்ன நெஞ்சில் வைக்க எண்ண


*********************************


துடிக்குது வாட்ச்சு கொதிக்குது மூச்சு 

வாட்டி வதைக்காதே

கண்ணாம் மூச்சு கண்டால்  போச்சு 

ஓடி ஒளியாதே 

தந்தது போதாதோ 

நீ தவிப்பது புறியாதோ

ஓ ஓ ஓ தந்தது போதாதோ 

நீ தவிப்பது புறியாதோ

கன்னத்தை திரிகிட கைவிரல் தொடுத்திட 

அணைத்திட வருவாயோ

காற்றினில் மிதந்திடும் கவிதையை படித்திட 

பொருள் அதை உறைப்பாயோ


சின்ன சின்ன கண்ணா 

சேதி சொல்லும் மன்னா

உன்னில் என்னை என்னில் உன்னை காண 

கண்ணில் மின்ன நெஞ்சில் வைக்க எண்ண

ஓடி இங்கே வாராய் 

ஒண்ணே ஒண்ணு தாராய்

சின்ன சின்ன கண்ணா 

சேதி சொல்லும் மன்னா

உன்னில் என்னை என்னில் உன்னை காண 

கண்ணில் மின்ன நெஞ்சில் வைக்க எண்ண


*********************************


Thursday, December 3, 2020

கிளையில்லா மரங்களில் - காதல் ஒரு வழி - கிளிஞ்சல்கள் பாடல் வரிகள்



படம்: கிளிஞ்சல்கள்

இசை: டி ராஜேந்தர் 


*********************************


கிளையில்லா மரங்களில் 

நிழல் தேடும் மனங்களே

அழிவில்லா காதலில் 

அழிகின்ற மலர்களே

ஆ ஆ ஆ ஆ ஆஆ

அழிகின்ற மலர்களே


காதல் ஒரு வழி பாதை பயணம் 

அதில் நுழைவது என்பது சுலபம்

பின்பு திரும்பிட நினைப்பது பாவம்

பின்பு திரும்பிட நினைப்பது பாவம்

அது ஆற்றிட முடியா காயம் 

காதல் ஆற்றிட முடியா காயம்


காதல் ஒரு வழி பாதை பயணம் 

அதில் நுழைவது என்பது சுலபம்



*********************************


மேகங்கள் போட்டிடும் கோலம் 

அது காற்றினில் கலைந்திட சோகம்

மேகங்கள் போட்டிடும் கோலம் 

அது காற்றினில் கலைந்திட சோகம்

காலை கதிரவன் அழித்திடும் பனி போல்

காலை கதிரவன் அழித்திடும் பனி போல்

காதல் விதியவன் சிதைத்திடும் கனவோ

காதல் விதியவன் சிதைத்திடும் கனவோ


காதல் ஒரு வழி பாதை பயணம் 

அதில் நுழைவது என்பது சுலபம்


*********************************


கோடையில் காய்ந்திடும் நதிகள் 

எந்த நிலையிலும் காயாத விழிகள்

கோடையில் காய்ந்திடும் நதிகள் 

எந்த நிலையிலும் காயாத விழிகள்

கதை சாகின்ற வரையும் தொடரும்

கதை சாகின்ற வரையும் தொடரும்

கட்டை வேகின்ற போதும் மலரும்

கட்டை வேகின்ற போதும் மலரும்


காதல் ஒரு வழி பாதை பயணம் 

அதில் நுழைவது என்பது சுலபம்

பின்பு திரும்பிட நினைப்பது பாவம்

பின்பு திரும்பிட நினைப்பது பாவம்

அது ஆற்றிட முடியா காயம் 

காதல் ஆற்றிட முடியா காயம்



*********************************


Wednesday, December 2, 2020

அழகினில் விளைந்தது - கிளிஞ்சல்கள் பாடல் வரிகள்



படம்: கிளிஞ்சல்கள்

இசை: டி ராஜேந்தர் 


*********************************


அழகினில் விளைந்தது

மழையினில் நனைந்தது

மனதுக்கு சுகம் தருது

அம்மம்மோ 

ஸ் ஹா ஸ் ஹா ஸ் ஹா

அம்மம்மோ

ஸ் ஹா ஹா ஹா


அழகினில் விளைந்தது

மழையினில் நனைந்தது

மனதுக்கு சுகம் தருது

அம்மம்மோ

ஸ் ஹா ஸ் ஹா ஸ் ஹா

அம்மம்மோ

ஹா ஹா ஹா ஹா ஹா


*********************************


விழியோ 

பிரம்மன் மயக்கத்தில்

வரைந்த கவிதை 

லலலல லல லலலா லாலா

லலலல லல லலலா லாலா

லலலல லல லலலா லாலா

தரத்த தரத்தாதா


விழியோ 

பிரம்மன் மயக்கத்தில்

வரைந்த கவிதை 

மொழியோ அமுதம் குரலாகி

பொழிகின்ற போதை

ஒரு ஆனந்தராகம்

இவள் அல்லிவிழி ஜாலம்

ஒரு ஆனந்தராகம்

இவள் அல்லிவிழி ஜாலம் 

ஓஓ ஓஓ ஓஓ


அழகினில் விளைந்தது

மழையினில் நனைந்தது

மனதுக்கு சுகம் தருது

அம்மம்மோ 

ஸ் ஹா ஸ் ஹா ஸ் ஹா

அம்மம்மோ

ஸ் ஹா ஹா ஹா


*********************************


சுகத்தை 

சுருதி மாறாமல் படிக்கின்ற வீணை

லாலலலாலா பபபாபா 

லாலலலாலா தரத்தாதா

தரத்த தரத்தாதா தரத்த தரத்த  தா


சுகத்தை 

சுருதி மாறாமல் 

படிக்கின்ற வீணை

திராட்சை 

ரசத்தை வசமாக்கி

தருகின்ற பார்வை

வான வில்லென்னும் நாணம் (ஹஹா)

காண ஜில்லென்னும் கோலம்

வான வில்லென்னும் நாணம்

காண ஜில்லென்னும் கோலம்

ஹே ஹே ஹே யே


அழகினில் விளைந்தது

மழையினில் நனைந்தது

மனதுக்கு சுகம் தருது

அம்மம்மோ 

ஸ் ஹா ஸ் ஹா ஸ் ஹா

அம்மம்மோ

ஸ் ஹா ஹா ஹா

அம்மம்மோ 

ஹஹஹஹா

அம்மம்மோ

ஹஹஹஹா ஹஹஹஹா


*********************************