படம்: கிளிஞ்சல்கள்
இசை: டி ராஜேந்தர்
*********************************
கிளையில்லா மரங்களில்
நிழல் தேடும் மனங்களே
அழிவில்லா காதலில்
அழிகின்ற மலர்களே
ஆ ஆ ஆ ஆ ஆஆ
அழிகின்ற மலர்களே
காதல் ஒரு வழி பாதை பயணம்
அதில் நுழைவது என்பது சுலபம்
பின்பு திரும்பிட நினைப்பது பாவம்
பின்பு திரும்பிட நினைப்பது பாவம்
அது ஆற்றிட முடியா காயம்
காதல் ஆற்றிட முடியா காயம்
காதல் ஒரு வழி பாதை பயணம்
அதில் நுழைவது என்பது சுலபம்
*********************************
மேகங்கள் போட்டிடும் கோலம்
அது காற்றினில் கலைந்திட சோகம்
மேகங்கள் போட்டிடும் கோலம்
அது காற்றினில் கலைந்திட சோகம்
காலை கதிரவன் அழித்திடும் பனி போல்
காலை கதிரவன் அழித்திடும் பனி போல்
காதல் விதியவன் சிதைத்திடும் கனவோ
காதல் விதியவன் சிதைத்திடும் கனவோ
காதல் ஒரு வழி பாதை பயணம்
அதில் நுழைவது என்பது சுலபம்
*********************************
கோடையில் காய்ந்திடும் நதிகள்
எந்த நிலையிலும் காயாத விழிகள்
கோடையில் காய்ந்திடும் நதிகள்
எந்த நிலையிலும் காயாத விழிகள்
கதை சாகின்ற வரையும் தொடரும்
கதை சாகின்ற வரையும் தொடரும்
கட்டை வேகின்ற போதும் மலரும்
கட்டை வேகின்ற போதும் மலரும்
காதல் ஒரு வழி பாதை பயணம்
அதில் நுழைவது என்பது சுலபம்
பின்பு திரும்பிட நினைப்பது பாவம்
பின்பு திரும்பிட நினைப்பது பாவம்
அது ஆற்றிட முடியா காயம்
காதல் ஆற்றிட முடியா காயம்
*********************************
No comments:
Post a Comment
உங்கள் கருத்து...