தமிழில் தேட.....

Tuesday, December 15, 2020

நிலா காயும் நேரம் - செம்பருத்தி பாடல் வரிகள்



படம்: செம்பருத்தி

இசை: இளையராஜா 


*********************************


ஆண்: 

நிலா காயும் நேரம் சரணம்

உலா போக நீயும் வரணும் 


பெண்: 

நிலா காயும் நேரம் சரணம்

உலா போக நீயும் வரணும் 


ஆண்: 

பார்வையில் புது புது

கவிதைகள் மலர்ந்திடும்

காண்பவை யாவுமே தேன்

அன்பே நீயே அழகின் அமுதே 

அன்பே நீயே அழகின் அமுதே 


பெண்: 

நிலா காயும் நேரம் சரணம்

உலா போக நீயும் வரணும் 


*********************************


ஆண்: 

தென்றல் தேரில் நான் தான்

போகும் நேரம் பார்த்து

தேவர் கூட்டம் பூ தூவி

பாடும் நல்ல வாழ்த்து 


பெண்: 

கண்கள் மூடி நான் தூங்க

திங்கள் வந்து தாலாட்டும்

காலை நேரம் ஆனாலே

கங்கை வந்து நீராட்டும் 


ஆண்: 

நினைத்தால் இதுப் போல் 

ஆகாததேது 


பெண்: 

அணைத்தால் உனைத்தான்

நீங்காது பூ மாது 


ஆண்: 

நெடு நாள் திருத்தோள்

எங்கும் நீ கொஞ்ச

அன்பே நீயே அழகின் அமுதே 

அன்பே நீயே அழகின் அமுதே 


பெண்: நிலா காயும் நேரம் சரணம்


ஆண்: உலா போக நீயும் வரணும் 


*********************************


பெண்: 

மின்னல் நெய்த சேலை

மேனி மீது ஆட

மிச்சம் மீதி காணாமல்

மன்னன் நெஞ்சம் வாட


ஆண்: 

அர்த்த ஜாமம் நான் சூடும்

ஆடை என்றும் நீயாகும்

அங்கம் யாவும் நீ மூட

ஆசை தந்த நோய் போகும்


பெண்: 

நடக்கும் தினமும்

ஆனந்த யாகம் 


ஆண்: 

சிலிர்க்கும் அடடா

ஸ்ரீதேவி பூந்தேகம் 


பெண்: 

அனைத்தும் வழங்கும்

காதல் வைபோகம்

அன்பே நீயே அழகின் அமுதே 

அன்பே நீயே அழகின் அமுதே 


ஆண்: 

நிலா காயும் நேரம் சரணம்

உலா போக நீயும் வரணும் 


பெண்: 

பார்வையில் புது புது

கவிதைகள் மலர்ந்திடும்

காண்பவை யாவுமே தேன்


ஆண்: 

அன்பே நீயே அழகின் அமுதே 

அன்பே நீயே அழகின் அமுதே 


பெண்:  நிலா காயும் நேரம் சரணம்


ஆண்:  உலா போக நீயும் வரணும் 



*********************************


No comments:

Post a Comment

உங்கள் கருத்து...