தமிழில் தேட.....

Showing posts with label அந்த ஒரு நிமிடம். Show all posts
Showing posts with label அந்த ஒரு நிமிடம். Show all posts

Friday, September 13, 2019

சிறிய பறவை - அந்த ஒரு நிமிடம் பாடல் வரிகள்



படம்: அந்த ஒரு நிமிடம்
இசை: இளையராஜா

******************************************

பெண்:
சிறிய பறவை
சிறகை விரிக்க துடிக்கிறதே
சிறகை விரித்து
நிலவை உரச நினைக்கிறதே
உதடு உருக அமுதம் பருக
வருகவே வருகவே

சிறிய பறவை
சிறகை விரிக்க துடிக்கிறதே
சிறகை விரித்து
நிலவை உரச நினைக்கிறதே

******************************************

ஆண்:
அன்பு லைலா (பெண்: ஹும்)
நீயே எந்தன் ஜீவ சொந்தம் (பெண்: சிரிப்பு)
நீ சிரித்தால் பாலை எங்கும் பூ வசந்தம்

பெண்:
சம்மதம் என்ன சொல்லவா
மௌனமே சொல்லும் அல்லவா

ஆண்:
கிண்ணமாய் என்னை மாற்றவா
உன்னையே வந்து ஊற்றவா

பெண்:
மது போதை வேண்டுமா
இதழ் போதை நல்லது

ஆண்:
உன் பேரைச்சொல்கிறேன்
அதில் போதை உள்ளது

பெண்:
வருகவே வருகவே {ஆண்: ஆ...ஆ....}

ஆண்:
சிறிய பறவை
சிறகை விரிக்க துடிக்கிறதே..
சிறகை விரித்து
நிலவை உரச நினைக்கிறதே...

******************************************


ஆண்:
மஞ்சமே தமிழின் மன்றமே
புதிய சந்தமே சிந்தினேன்..

பெண்:
அன்பனே இளைய கம்பனே
கவிதை நண்பனே நம்பினேன்

ஆண்:
சொர்ணமே அரச அன்னமே
இதழின் யுத்தமே முத்தமே

பெண்:
நெற்றியில் வியர்வை சொட்டுமே
கைகள் பற்றுமே ஒற்றுமே

ஆண்:
சோழர் குயில் பாடுகையில்
சோலைக்குயில் ஓய்வெடுக்கும்
மெல்லினங்கள் பாடு கண்ணே
வல்லினங்கள் வாய் வலிக்கும்

பெண்:
சந்தமே இன்பம் தந்தது
கங்கையே இங்கு வந்ததே
தென்றலே இன்று நின்றது
நன்று தான் சந்தம் என்றது
கன்றுகள் ரெண்டு இன்றுபோல்
என்றும் வென்று வாழ்கின்றது

ஆண்:
வாழ்கவே...வாழ்கவே..{பெ:ஆ...ஆ.}

பெண்:
சிறிய பறவை
சிறகை விரிக்க துடிக்கிறதே
சிறகை விரித்து
நிலவை உரச நினைக்கிறதே

******************************************

பெண்:
அன்பு ரோமியோ
இங்கே ஒரு காவல் இல்லை
தேன் குடித்தால்
இங்கே ஒரு கேள்வி இல்லை

ஆண்:
காதலின் கல்விச் சாலையில்
கண்களே நல்ல தத்துவம்
பூவையின் மேனி அற்புதம்
பூக்களால் செய்த புத்தகம்

பெண்:
நம் காதல் பாடவே
சுரம் ஏழு போதுமா

ஆண்:
நம் நேசம் பேசவே
ஒரு பாஷை போதுமா

பெண்:
கவிமழை பொழியுமா

ஆண்:
ம்ம்..ஹும் ஹஹ்ஹஹா...
பழைய கனவு
உனக்கு எதற்கு கலையட்டுமே
நமது கதையை
உலகம் முழுதும் புகழட்டுமே
கவிதை எழுத இளைய கவிகள்

எழுகவே எழுகவே {பெண்: ஆ...ஆ...}

பழைய கனவு
உனக்கு எதற்கு கலையட்டுமே
நமது கதையை
உலகம் முழுதும் புகழட்டுமே

******************************************

Monday, June 24, 2019

தேவை இந்த பாவை - அந்த ஒரு நிமிடம் பாடல் வரிகள்



படம்: அந்த ஒரு நிமிடம்
இசை: இளையராஜா

******************************************

பெண்:
தேவை இந்த பாவை
தானே தெய்வ லோகம்
நான் தானே தினம் சாய்ந்தாடும்
தேர் போல வருவேன்
தேவை இந்த பாவை
நானே தெய்வ லோகம்

ஆண்:
ஹே ஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ
ஹ ஹ ஹாஆஆஆஆ
அ அ அ அ ஆஆஆஆ
அ அ அ அ ஆஆஆஆ

ஹஹ்ஹா ஹ ஹா ஹ ஹா
ஹெஹ்ஹே ஹே ஹேஹ்ஹே
டர டர டர டராட்ட
தரா தரா தரா தரா

******************************************

ஆண்:
அழகே புது மலரே
அடியே இளங்கிளியே
இதழோ மது ரசமோ
முகமோ முழு நிலவோ
தொடுவேன் உன்னை தொடுவேன்
வருவேன் எனை தருவேன்
முறைத்தால் முகம் கெடுமே
சிரித்தால் சுகம் வருமே
அங்கங்கே அங்கங்கள் துடிக்க ஆ ஆ ஆ
என்னென்ன இன்பங்கள் படிக்க
எடுத்து கொடுக்க மானே
இங்கு வேடன் நானே
கண்ணி வைக்கும்
நாள் தானே இனி பாவங்கள் தூளாகும் பொழுது
ஹான் ராப்பா
பரப்ப ரபப்பா
ஹ ஹ ஹ ஹ
ரா ரா தராரே தரரா
தாகு தகு திகு

******************************************

ஆண்:
சரியா இது முறையா
தனிமை சுகம் தருமா?
இதழால் உன்னை தொடுவேன்
இளமைக் கனி பறிப்பேன்
அடித்தால் உன்னை அணைப்பேன்
துடித்தால் துணை இருப்பேன்
நெருப்பாய் வரும் நிலவே (ஏ ஏ ஏ)
சிரிப்பாய் ஒரு தரமே
வெட்கம் ஏன் பக்கம் வா பழக
ஆ ஆ ஆ
அம்மம்மா கண்ணம்மா சொல்லம்மா
இழுத்து அணைக்க
தத்த ரித்த ஜனு தகிட தீம்த ஜனு
ததீம் தோம்த ஜனு தகிடதோம்
தத்த ரித்த ஜனு தகிட தீம்த ஜனு
ததீம் தோம்த ஜனு தகிடதோம்
நிஸகம  பம  பம  பம  கரிஸ
கமபநி ஸநி ஸநி ஸநி தபம
ப நி ஸ க ரி ஸ
கம பஸ நிதப
ஸநிதப நிதபம,தபமக பமகரி மானே
இங்கு வேடன் நானே கண்ணி வைக்கும்
நாள் தானே இனி பாவங்கள்
ஹா ஹா ஹா ஹா தூளாகும் பொழுது
தா தூ து தகுதுக தகுதுக
மானே தராரே தாரா
ஹேய் ஹேய்
தார்ரா தரார்ரா ரபப்பா

******************************************