படம்: அந்த ஒரு நிமிடம்
இசை: இளையராஜா
******************************************
பெண்:
சிறிய பறவை
சிறகை விரிக்க துடிக்கிறதே
சிறகை விரித்து
நிலவை உரச நினைக்கிறதே
உதடு உருக அமுதம் பருக
வருகவே வருகவே
சிறிய பறவை
சிறகை விரிக்க துடிக்கிறதே
சிறகை விரித்து
நிலவை உரச நினைக்கிறதே
******************************************
ஆண்:
அன்பு லைலா (பெண்: ஹும்)
நீயே எந்தன் ஜீவ சொந்தம் (பெண்: சிரிப்பு)
நீ சிரித்தால் பாலை எங்கும் பூ வசந்தம்
பெண்:
சம்மதம் என்ன சொல்லவா
மௌனமே சொல்லும் அல்லவா
ஆண்:
கிண்ணமாய் என்னை மாற்றவா
உன்னையே வந்து ஊற்றவா
பெண்:
மது போதை வேண்டுமா
இதழ் போதை நல்லது
ஆண்:
உன் பேரைச்சொல்கிறேன்
அதில் போதை உள்ளது
பெண்:
வருகவே வருகவே {ஆண்: ஆ...ஆ....}
ஆண்:
சிறிய பறவை
சிறகை விரிக்க துடிக்கிறதே..
சிறகை விரித்து
நிலவை உரச நினைக்கிறதே...
******************************************
ஆண்:
மஞ்சமே தமிழின் மன்றமே
புதிய சந்தமே சிந்தினேன்..
பெண்:
அன்பனே இளைய கம்பனே
கவிதை நண்பனே நம்பினேன்
ஆண்:
சொர்ணமே அரச அன்னமே
இதழின் யுத்தமே முத்தமே
பெண்:
நெற்றியில் வியர்வை சொட்டுமே
கைகள் பற்றுமே ஒற்றுமே
ஆண்:
சோழர் குயில் பாடுகையில்
சோலைக்குயில் ஓய்வெடுக்கும்
மெல்லினங்கள் பாடு கண்ணே
வல்லினங்கள் வாய் வலிக்கும்
பெண்:
சந்தமே இன்பம் தந்தது
கங்கையே இங்கு வந்ததே
தென்றலே இன்று நின்றது
நன்று தான் சந்தம் என்றது
கன்றுகள் ரெண்டு இன்றுபோல்
என்றும் வென்று வாழ்கின்றது
ஆண்:
வாழ்கவே...வாழ்கவே..{பெ:ஆ...ஆ.}
பெண்:
சிறிய பறவை
சிறகை விரிக்க துடிக்கிறதே
சிறகை விரித்து
நிலவை உரச நினைக்கிறதே
******************************************
பெண்:
அன்பு ரோமியோ
இங்கே ஒரு காவல் இல்லை
தேன் குடித்தால்
இங்கே ஒரு கேள்வி இல்லை
ஆண்:
காதலின் கல்விச் சாலையில்
கண்களே நல்ல தத்துவம்
பூவையின் மேனி அற்புதம்
பூக்களால் செய்த புத்தகம்
பெண்:
நம் காதல் பாடவே
சுரம் ஏழு போதுமா
ஆண்:
நம் நேசம் பேசவே
ஒரு பாஷை போதுமா
பெண்:
கவிமழை பொழியுமா
ஆண்:
ம்ம்..ஹும் ஹஹ்ஹஹா...
பழைய கனவு
உனக்கு எதற்கு கலையட்டுமே
நமது கதையை
உலகம் முழுதும் புகழட்டுமே
கவிதை எழுத இளைய கவிகள்
எழுகவே எழுகவே {பெண்: ஆ...ஆ...}
பழைய கனவு
உனக்கு எதற்கு கலையட்டுமே
நமது கதையை
உலகம் முழுதும் புகழட்டுமே
******************************************
No comments:
Post a Comment
உங்கள் கருத்து...