படம்: காக்கிச் சட்டை
இசை: இளையராஜா
******************************************
ஆண்:
பட்டுக்கன்னம் தொட்டுக்கொள்ள
ஒட்டிக்கொள்ளும்
ஒட்டிக்கொண்டு கட்டிக்கொள்ள
உள்ளம் துள்ளும்
பெண்:
தென்றல் வந்து உன்னைக்கண்டு
மெல்ல மெல்ல ராகம் ஒன்று
பாடுதம்மா
ஹோ ஹோய்
பட்டுக்கன்னம் தொட்டுக்கொள்ள
ஒட்டிக்கொள்ளும்
ஒட்டிக்கொண்டு கட்டிக்கொள்ள
உள்ளம் துள்ளும்
******************************************
ஆண்:
நீல நதிக்கரை ஓரத்தில் நின்றிருந்தேன்
ஒரு நாள்
உந்தன் பூவிதழ் ஈரத்தில்
என்னை மறந்திருந்தேன்
பல நாள்
பெண்:
வானத்து மீன்களை மேகம் மறைத்தது போல்
தினமும்
எந்தன் மோகத்தை நாணத்தில்
மூடி மறைத்திருந்தேன்
மனதில்
ஆண்:
நாணம் யாவும் நூலாடை
நானே உந்தன் புது மேலாடை
பெண்:
மங்கை இவள் அங்கங்களில்
உங்கள் கரம் தொடங்கலாம்
நாடகமே
ஹோ ஹோய்!
ஆண்:
பட்டுக்கன்னம் தொட்டுக்கொள்ள
ஒட்டிக்கொள்ளும்
ஒட்டிக்கொண்டு கட்டிக்கொள்ள
உள்ளம் துள்ளும்
பெண்:
தென்றல் வந்து உன்னைக்கண்டு
மெல்ல மெல்ல ராகம் ஒன்று
பாடுதம்மா
ஹோ ஹோய்
ஆண்: ஹஹஹஹ
பெண்:
பட்டுக்கன்னம் தொட்டுக்கொள்ள
ஒட்டிக்கொள்ளும்
ஒட்டிக்கொண்டு கட்டிக்கொள்ள
உள்ளம் துள்ளும்
******************************************
பெண்:
கற்பனை கொஞ்சிடும் காவியச்சந்தங்களே
அடடா
இந்த காவியக் கோவிலைப் பார்த்து எழுதியதோ
தலைவா
ஆண்:
புன்னகை சிந்திடும் பூந்தமிழ் ஓவியமே
கிளியே
உந்தன் பூவுடல் பார்த்தபின்
சிற்பம் வடித்தனரோ
கனியே
பெண்:
ஆசைத்தீயை தூண்டாதே
போதைப் பூவை தினம் தூவாதே
ஆண்:
அந்தியிலே வெள்ளி நிலா
அள்ளித்தரும் சுகங்களே
ஆயிரமே
ஹோ ஹோய்
பெண்:
பட்டுக்கன்னம் தொட்டுக்கொள்ள
ஒட்டிக்கொள்ளும்
ஒட்டிக்கொண்டு கட்டிக்கொள்ள
உள்ளம் துள்ளும்
ஆண்:
தென்றல் வந்து உன்னைக்கண்டு
மெல்ல மெல்ல ராகம் ஒன்று
பாடுதம்மா
ஹோ ஹோய்
பெண்: பட்டுக்கன்னம்
ஆண்: தொட்டுக்கொள்ள
பெண்: ஒட்டிக்கொள்ளும்
ஆண்: ஒட்டிக்கொண்டு
பெண்: கட்டிக்கொள்ள
ஆண்: உள்ளம் துள்ளும்
******************************************
No comments:
Post a Comment
உங்கள் கருத்து...