படம்: நான் சிகப்பு மனிதன்
இசை: இளையராஜா
******************************************
பெண்:
ஆ ஹா ஆ ஹா
ஆ ஹா ஆ ஹா
ஆ ஹா ஹா ஆ ஹா ஆ ஹா ஹா
ஆண்:
பெண் மானே சங்கீதம் பாடி வா
அம்மானை பொன் ஊஞ்சல் ஆடி வா
உல்லாசம் ஆயிரம் உன் பார்வை தேன் தரும்
உன் நாணம் செவ்வானம்
பெண் மானே சங்கீதம் பாடி வா
அம்மானை பொன் ஊஞ்சல் ஆடி வா
******************************************
ஆண்:
தேன் மழை நீ ஹோய்
மார்பிலே தூவவோ
தேவதை நீ ஹோய்
நான் தினம் தேடவோ
பெண்:
கையருகில் பூமாலை
காதல் என்னும் கோபுரம்
மை விழியில் நீ தானே
வாழ்கிறாய் ஓர் புறம்
ஆண்:
என் காதல் வானிலே
பெண் மேக ஊர்வலம்
காணுவேன் தேவியை
கண்களின் விழாவில்
பெண்:
உன் மானே சங்கீதம் பாடவா
உல்லாசம் ஆயிரம்
உன் பார்வை தேன் தரும்
உன் தேனே வந்தேனே
உன் மானே சங்கீதம் பாடவா
******************************************
இருவரும்:
லாலால்ல லாலா லாலால்ல லாலா
லாலால்ல லாலா லாலால்ல லாலா
பெண்:
யாத்திரை ஏன் ஹோய்
ராத்திரி நேரமே
போர்களம் தான் ஹோய்
பூக்களின் தேகமே
ஆண்:
தேக மழை நான் ஆகும்
தேவியை தேடுவேன்
ஈர வயல் நீயாக
மேனியை மூடுவேன்
பெண்:
கண்ணோரம் காவியம்
கை சேரும் போதிலே
வானமும் தேடியே
வாசலில் வாராதோ
ஆண்: பெண் மானே சங்கீதம் பாடி வா
பெண்:
அம்மானை பொன் ஊஞ்சல் ஆட வா
உல்லாசம் ஆயிரம்
ஆண்:
ம்ம்...உன் பார்வை தேன் தரும்
உன் நாணம் செவ்வானம்
பெண் மானே சங்கீதம் பாடி வா
பெண்:
அம்மானை பொன் ஊஞ்சல் ஆடி வா
******************************************
Good lines and nice smoothly memorable music
ReplyDelete