படம்: காதல் ஓய்வதில்லை
இசை: இளையராஜா
******************************************
ஆண்:
ராஜ மோகினி
சுக ராக தேவி நீ
ராஜ மோகினி
சுக ராக தேவி நீ
மது தேன் குடங்கள்
இடை மேல் சுமந்துபோகும்
ராஜ மோகினி
சுக ராக தேவி நீ
******************************************
பெண்:
காதல் என்றும் ஓய்வதில்லை
கவிதை சொன்னது
ஆண்:
காதல் கண்ணில் தூக்கமில்லை
கவிஞர் சொன்னது
பெண்:
இரு கண்ணில் உன் பேரை
எழுதி பார்க்கிறேன்
ஆண்:
உறங்காமல் இருந்தாலும்
கனவு காண்கிறேன்
பெண்:
எந்த நாளும் எந்தன் ஜீவன்
ஆண்:
எந்த நாளும் எந்தன் ஜீவன்
இருவரும்: நீயே
பெண்:
ராக ராஜனே
நீ எந்தன் ஜீவனே
இதயம் துடிக்கும்
இசையில் சுருதி சேர்க்கும்
ராக ராஜனே
நீ எந்தன் ஜீவனே
******************************************
ஆண்:
நாணம் கொண்டு போகும் பெண்மை
என்னை மீறி போகுமா
பெண்:
வேகமாக போகும் மேகம்
வானம் தாண்டி போகுமா
ஆண்:
மடிமீது தலை வைத்து
மயங்க போகிறேன்
பெண்:
விழியோடு இமை வைத்து
உறங்க போகிறேன்
ஆண்:
உன்னை அள்ளி கொண்ட பின்பு
பெண்:
என்னை அள்ளி தந்த பின்பு
இருவரும்: பிரிவேது
ஆண்:
ராஜ மோகினி
சுக ராக தேவி நீ
ராஜ மோகினி
சுக ராக தேவி நீ
பெண்:
இதயம் துடிக்கும்
இசையில் சுருதி சேர்க்கும்
ராக ராஜனே
ஆண்:
சுக ராக தேவி நீ
******************************************
No comments:
Post a Comment
உங்கள் கருத்து...