தமிழில் தேட.....

Wednesday, September 11, 2019

என்ன சொல்லி பாடுவதோ - என் மன வானில் பாடல் வரிகள்



படம்: என் மன வானில்
இசை: இளையராஜா

******************************************

பெண்:
என்ன சொல்லி பாடுவதோ
என்ன வார்த்தை தேடுவதோ
என்ன சொல்லி பாடுவதோ
என்ன வார்த்தை தேடுவதோ
வண்ணம் தரும் தூரிகையே
எண்ணங்களை சொல்லிடதோ
என் ஓவியமே
என்ன சொல்லி பாடுவதோ

ஆண்:
என்ன சொல்லி பாடுவதோ
என்ன வார்த்தை தேடுவதோ
என்ன சொல்லி பாடுவதோ
என்ன வார்த்தை தேடுவதோ
வண்ணம் தரும் தூரிகையே
எண்ணங்களை சொல்லிடதோ
என் ஓவியமே
என்ன சொல்லி பாடுவதோ

******************************************

பெண்:
கோடி குயில் கூடி
எந்தன் நெஞ்சில் கூவி
மௌனம் ஏனோ என்று கேட்குதே

ஆண்:
ராகம் தொடும் நேரம் ,
வானம் தொடும் மேகம்
என்னில் உந்தன் எண்ணம் மீட்டுதே

பெண்:
நெஞ்சுக்குள் காதல் சுழல்  ஒ
மூச்சுக்குள் புல்லாங்குழல்

ஆண்:
நெஞ்சுக்குள் காதல் சுழல்  ஒ
மூச்சுக்குள் புல்லாங்குழல்

பெண்:
வெறும் கற்று இசையாக
மாறுகின்ற மாயங்களை
என்ன சொல்லி பாடுவதோ
என்ன வார்த்தை தேடுவதோ

ஆண்:
என்ன சொல்லி பாடுவதோ
******************************************

ஆண்:
அந்திப் பிறை வந்து
மஞ்சள் வானில் நின்று
உன்னழகின் வண்ணம் சொல்லுதே ஒ

பெண்:
பூவின் மடி தூங்கி , தென்றல் மொழி வாங்கி
பூவை நெஞ்சின் ஓசை சொல்லுதே

ஆண்:
தீராத தேடல் ஒன்று  ஒ
தேடட்டும் நெஞ்சம் இரண்டு

பெண்:
தீராத தேடல் ஒன்று  ஒ
தேடட்டும் நெஞ்சம் இரண்டு

ஆண்:
சொல்லாமல் நில்லாமல் மனம்
கொள்ளும் இன்பத்துன்பம் தன்னை
என்ன சொல்லி பாடுவதோ
என்ன வார்த்தை தேடுவதோ

பெண்:
என்ன சொல்லி பாடுவதோ
என்ன வார்த்தை தேடுவதோ

ஆண்:
வண்ணம் தரும் தூரிகையே
எண்ணங்களை சொல்லிடதோ
என் ஓவியமே
என்ன சொல்லி பாடுவதோ

பெண்:
என்ன சொல்லி பாடுவதோ
என்ன வார்த்தை தேடுவதோ

******************************************

No comments:

Post a Comment

உங்கள் கருத்து...