தமிழில் தேட.....

Friday, September 6, 2019

இளமனது பல கனவு - செல்வி பாடல் வரிகள்



படம்: செல்வி
இசை: இளையராஜா

******************************************

ஆண்: இளமனது பல கனவு
விழிகளிலே வழிகிறதே

பெண்: சிறு வயது புது உறவு
அருகினிலே வருகிறதே

ஆண்:இந்த மனதுக்கும் வயதுக்கும்
சுகம் என்னவோ
இங்கு புரியட்டும் புரியட்டுமே

பெண்: அது இரவுக்கும் பகலுக்கும்
பொது அல்லவோ
இன்று தெரியட்டும் தெரியட்டுமே

ஆண் : இளமனது பல கனவு
விழிகளிலே வழிகிறதே

பெண்: சிறு வயது புது உறவு
அருகினிலே வருகிறதே

******************************************

குழு:
லா ல ல லா
லல்ல லலா லல்ல லலா லல்ல லலா லல்ல லலா
லா ல ல லா
லல்ல லலா லல்ல லலா லல்ல லலா லல்ல லலா
லலலல லா லலலல லா
லலலல லா லலலல லா

ஆண்: கொடியிடை நாணத்தில் நெளிகிறதோ
கனிகளின் பாரத்தில் வளைகிறதோ

பெண்: மன மொரு மோகத்தில் விழுகிறதோ
மருவிடும் ஆசைகள் வருகிறதோ

ஆண்: விரல் பட்டு இளமொட்டு விரியட்டுமே
வெட்கம் - விலகட்டும் விலகட்டுமே…

பெண்: இரு கண்ணும் இரு கையும்
இள நெஞ்சமும் அன்பை
எழுதட்டும் எழுதட்டுமே

ஆண் : புதுமலரை முதன் முதலாய்
தொடுவதினால் சுடுகிறதோ

பெண்: புதுமலரை முதன் முதலாய்
தொடுவதினால் சுடுகிறதே

ஆண்: இளமனது
பெண்: பல கனவு
ஆண்: விழிகளிலே
பெண்: வழிகிறதே
ஆண்: சிறு வயது
பெண்: புது உறவு
ஆண்: அருகினிலே
பெண்: வருகிறதே

ஆண்: இந்த மனதுக்கும் வயதுக்கும்
சுகம் என்னவோ
இங்கு புரியட்டும் புரியட்டுமே

பெண்: அது இரவுக்கும் பகலுக்கும்
பொது அல்லவோ
இன்று தெரியட்டும் தெரியட்டுமே

ஆண்: இளமனது
பெண்: பல கனவு
ஆண்: விழிகளிலே
பெண்: வழிகிறதே
ஆண்: சிறு வயது
பெண்: புது உறவு
ஆண்: அருகினிலே
பெண்: வருகிறதே

******************************************

குழு:
தந்தனன தந்தனன தந்தனன தந்தனன தானா
தந்தனன தந்தனன தந்தனன தந்தனன தானா
தந்தனன தந்தனன தந்தனனா
தந்தனன தந்தனன தந்தனனா
தந்தனன தந்தனன தந்தனனா
தந்தனன தந்தனன தந்தனனா
தந்தனனா தந்தனனா தந்தனனா

பெண்: அழகிய வாசல்கள் திறந்திடுமோ
அதிலோர் ஆனந்தம் பிறந்திடுமோ

ஆண்: தலையணை வேதங்கள் விளங்கிடுமோ
தொடங்கிய ராகங்கள் தொடர்ந்திடுமோ

பெண்: இளமைக்குள் விளைகின்ற எழில் வண்ணமே
இங்கு மலரட்டும் மலரட்டுமே

ஆண்: தனிமைக்குள் எரிகின்ற துயர் வெள்ளமே
இங்கு வடியட்டும் வடியட்டுமே

பெண்: புது உலகம் அதிசயமாய்
விழிகளிலே விரிகிறதோ

ஆண்: புது உலகம் அதிசயமாய்
விழிகளிலே விரிகிறது

பெண் : இளமனது பல கனவு
விழிகளிலே வழிகிறதே

ஆண்: சிறு வயது புது உறவு
அருகினிலே வருகிறதே

பெண்: இந்த மனதுக்கும் வயதுக்கும்
சுகம் என்னவோ
இங்கு புரியட்டும் புரியட்டுமே

ஆண் : அது இரவுக்கும் பகலுக்கும்
பொது அல்லவோ
இன்று தெரியட்டும் தெரியட்டுமே

பெண்: இளமனது
ஆண்: பல கனவு
பெண்: விழிகளிலே
ஆண்: வழிகிறதே
பெண்:சிறு வயது
ஆண்: புது உறவு
பெண்: அருகினிலே
ஆண்: வருகிறதே

******************************************

No comments:

Post a Comment

உங்கள் கருத்து...