படம்: முத்துகாளை
இசை: இளையராஜா
******************************************
ஆண்:
புன்னை வனத்து குயிலே நீ
என்னை நினைத்து இசை பாடு
பெண்:
முல்லை வனத்து குளிரே நீ
என்னை அணைத்து உறவாடு
ஆண்:
வேங்குழலின் ஓசை எழ
பெண்:
பாய் விரிக்கும் ஆசை எழ
ஆண்:
மார்மீதும் தோள்மீதும்
சாய்ந்திருக்க
பெண்:
ஓ பாலாரும் தேனாரும்
பாய்ந்திருக்க
ஆண்:
புன்னை வனத்து குயிலே நீ
என்னை நினைத்து இசை பாடு
******************************************
ஆண்:
மைப்பூசும் கண்ணொடும் பேசும்
நேரம் இன்று
அதை பொய் பேச வைக்கதே இங்கு
நாணம் என்று
பெண்:
அம்மாடி ஆகாதா வேகம்
நெஞ்சில் கொண்டு
என்னை அள்ளாதே ஆவரம் பூவும்
நானும் ஒன்று
ஆண்:
கண் வைத்த பின்னாலே
கை வைக்கக் கூடாதா
பெண்:
கை வைத்தால் அங்கங்கே
மின்சாரம் ஓடாதா
ஆண்:
என்னென்ன ஆனால் என்ன
ஆவல் கொண்ட போது
பெண்:
என்றாலும் எல்லைக்குள்ளே
நின்றால் தானே மாது
ஆண்:
மார்மீதும் தோள்மீதும்
சாய்ந்திருக்க
பெண்:
ஒ பாலாரும் தேனாரும்
பாய்ந்திருக்க
ஆண்:
புன்னை வனத்து குயிலே நீ
என்னை நினைத்து இசை பாடு
பெண்:
முல்லை வனத்து குளிரே நீ
என்னை அணைத்து உறவாடு
******************************************
பெண்:
என் மீது தூரல்கள் போட
மேகம் வர
அட அப்போது ராசாவே உந்தன்
மோகம் வர
ஆண்:
முப்பலுக் கப்பாலும் போகும்
எண்ணங்களே
ஒரு முத்தாரம் வைத்தாலும் போதும்
கன்னத்திலே
பெண்:
நீ ஒன்று வைத்தாலே
நான் ஒன்று வைப்பேனே
ஆண்:
நெஞ்சத்தை நெஞ்சோடு
நான் வைத்து தைப்பேனே
பெண்:
மிச்சத்தை மீதம் தன்னை
மாலை இட்டு பார்ப்போம்
ஆண்:
இன்பத்தை நானும் நீயும்
அள்ளி அள்ளி சேர்ப்போம்
பெண்:
மார்மீதும் தோள்மீதும்
சாய்ந்திருக்க
ஆண்:
ஒ ஒ ஒ பாலாரும் தேனாரும்
பாய்ந்திருக்க
பெண்:
முல்லை வனத்து குளிரே நீ
என்னை அணைத்து உரவாடு
ஆண்:
வேங்குழலின் ஓசை எழ
பெ:
பாய் விரிக்கும் ஆசை எழ
ஆண்:
மார்மீதும் தோள்மீதும்
சாய்ந்திருக்க
பெண்:
ஒ பாலாரும் தேனாரும்
பாய்ந்திருக்க
ஆண்:
புன்னை வனத்து குயிலே நீ
என்னை நினைத்து இசை பாடு
பெண்:
முல்லை வனத்து குளிரே நீ
என்னை அணைத்து உறவாடு
******************************************
No comments:
Post a Comment
உங்கள் கருத்து...