தமிழில் தேட.....

Sunday, September 22, 2019

அடடா இதுதான் சுகமோ - துடிக்கும் கரங்கள் பாடல் வரிகள்



படம்: துடிக்கும் கரங்கள்
இசை: எஸ் பி பாலசுப்ரமணியம்

******************************************

பெண் :
அடடா இதுதான் சுகமோ
மலர்களின் இதழ் வழி பனிமழை
விழும் சுகமோ
இனிமேல்
தினமும் விழாக்கோலமே

ஆண் :
அடடா இதுதான் சுகமோ
மலர்களின் இதழ் வழி பனிமழை
விழும் சுகமோ
இனிமேல்
தினமும் விழாக்கோலமே

******************************************

பெண் : விழிகளும் விழிகளும்
தழுவிடும் பொழுதினில்
ஏதோ ஏதோ லீலைகள்

ஆண் : விரல்களும் விரல்களும்
உரசிடும் பொழுதினில்
காதல் தீயின் ஜூவாலைகள்

பெண் :
கன்னங்களில் தாமரை
தாது தூவும்
சின்னங்களில் தேன்மழை சாரல் வீசும்

ஆண் : கருங்கூந்தலின்
ஊஞ்சலில் பூக்கள் ஆ டும்

பெண் : அடடா
ஆண் : ஆஹா ஹ ஹா

பெண் : இதுதான்
ஆண் : ஓஹோ ஹோ ஹோ

பெண் : சுகமோ

ஆண் – ஹ மலர்களின் இதழ் வழி பனிமழை
விழும் சுகமோ

பெண் : இனிமேல்

இருவரும் - தினமும் விழாக்கோலமே

******************************************

ஆண் :
ஒரு கொடி இடையினில் இருகுடை
பிடித்தது ஏனோ ஏனோ கண்மணி

பெண் :
தழுவிடும் இருவரின்
நிலவொளி சுடவரும்
நேரம் இதோ பௌர்ணமி

ஆண் :
நீலோர்பலம் கண்ணிலே ஜாடை காட்டும்
நான் தொட்டதும் குங்குமம்
சாயம் தீட்டும்

பெண் : உடல் வீணையின்
தந்திகள் என்னை மீட்டும்

ஆண் : அடடா
பெண் : ஆஹா ஹ ஹா

ஆண் : இதுதான்
பெண் : ஓஹோ… ஹோ ஹோ

ஆண் : சுகமோ

பெண் : மலர்களின் இதழ் வழி பனிமழை
விழும் சுகமோ

ஆண் : இனிமேல்

இருவரும் - தினமும் விழாக்கோலமே
லலாலலலா ஆ
லலாலலலா ஆ

******************************************

No comments:

Post a Comment

உங்கள் கருத்து...