தமிழில் தேட.....

Saturday, September 7, 2019

அதோ மேக ஊர்வலம் - ஈரமான ரோஜாவே பாடல் வரிகள்



படம்: ஈரமான ரோஜாவே
இசை: இளையராஜா

******************************************

குழு :
ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ
ஆஆஆ ஆஆ ஆஆ ஆஆஆஆஆஆ

ஆண் :
அதோ மேக ஊர்வலம்
அதோ மின்னல் தோரணம்
அங்கே
இதோ காதல் ஊர்வலம்
இதோ காமன் உற்சவம்
இங்கே

ஒரே நாள் அழகிய முகம் பார்த்தேன்
இதோ நான் உயிரினில் உனைச் சேர்த்தேன்
வா

அதோ மேக ஊர்வலம்
அதோ மின்னல் தோரணம்
அங்கே

******************************************

ஆண் :
உனது பாதம்
அடடடா இலவம் பஞ்சு
நடக்கும் போது
துடித்தது எனது நெஞ்சு

இரண்டு வாழைத் தண்டிலே ராஜ கோபுரம்
நானும் இன்று கேட்கிறேன் உன்னை ஓர் வரம்

தேகம் தன்னை மூடவே
கூந்தல் போதும் போதுமே
ஆடை இங்கு வேண்டுமா
நாணம் என்ன
வா வா

அதோ மேக ஊர்வலம்
அதோ மின்னல் தோரணம்
அங்கே

******************************************

பெண்:
ஆ ஆஆஆ ஆஆஆ
ஆ ஆஆஆஆஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ
ஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆஆ


ஆண் :
குழலைப் பார்த்து
முகிலென மயில்கள் ஆடும்
முகத்தைப் பார்த்து
அடிக்கடி நிலவு தேயும்

தென்னம்பாண்டி முத்தைப் போல்
தேவி புன்னகை
வண்டு ஆடச் சொல்லுமே
செண்டு மல்லிகை

உன்னைச் செய்த பிரம்மனே
உன்னைப் பார்த்து ஏங்குவான்
காதல் பிச்சை வாங்குவான்
இன்னும் என்ன சொல்ல

அதோ மேக ஊர்வலம்
அதோ மின்னல் தோரணம்
அங்கே
இதோ காதல் ஊர்வலம்
இதோ காமன் உற்சவம்
இங்கே

ஒரே நாள் அழகிய முகம் பார்த்தேன்
இதோ நான் உயிரினில் உனைச் சேர்த்தேன்
வா

அதோ மேக ஊர்வலம்
அதோ மின்னல் தோரணம்
அங்கே

******************************************

No comments:

Post a Comment

உங்கள் கருத்து...