படம் : சிகரம்
இசை: எஸ். பி. பாலசுப்ரமணியம்
*********************************
ஆண் :
இதோ இதோ என் பல்லவி
எப்போது கீதம் ஆகுமோ
இவள் உந்தன் சரணமென்றால்
அப்போது வேதம் ஆகுமோ
இதோ இதோ என் பல்லவி
*********************************
பெண் :
என் வானமெங்கும் பௌர்ணமி
இது என்ன மாயமோ
என் காதலா உன் காதலால்
நான் காணும் கோலமோ
ஆண் :
என் வாழ்க்கை என்னும் கோப்பையில்
இது என்ன பானமோ
பருகாமலே ருசியேறுதே
இது என்ன ஜாலமோ
பெண் :
பசியென்பதே ருசியல்லவா
அது என்று தீருமோ
இதோ இதோ என் பல்லவி
எப்போது கீதம் ஆகுமோ
இவள் உந்தன் சரணமென்றால்
அப்போது வேதம் ஆகுமோ
இதோ இதோ என் பல்லவி
*********************************
ஆண் :
அந்த வானம் தீர்ந்து போகலாம்
நம் வாழ்க்கை தீருமா
பருவங்களும் நிறம் மாறலாம்
நம் பாசம் மாறுமா
பெண் :
ஒரு பாடல் பாட வந்தவள்
உன் பாடலாகிறேன்
விதி மாறலாம் உன் பாடலில்
சுதி மாறக் கூடுமா
ஆண் :
நீ கீர்த்தனை நான் பிரார்த்தனை
பொருந்தாமல் போகுமா
இதோ இதோ என் பல்லவி
எப்போது கீதம் ஆகுமோ
பெண் :
இவள் உந்தன் சரணமென்றால்
அப்போது வேதம் ஆகுமோ
ஆண் : இதோ
பெண் : ஹ்ம்ம்
ஆண் : இதோ
பெண் : ஹ்ம்ம்
ஆண் : என் பல்லவி
பெண் : ஹ்ம்ம் ஹ்ம்ம்
*********************************
what a lovely song More Tamil song lyrics here
ReplyDelete