தமிழில் தேட.....

Showing posts with label இதோ இதோ என் பல்லவி. Show all posts
Showing posts with label இதோ இதோ என் பல்லவி. Show all posts

Monday, September 30, 2019

இதோ இதோ என் பல்லவி - சிகரம் பாடல் வரிகள்



படம் : சிகரம்
இசை: எஸ். பி. பாலசுப்ரமணியம்

*********************************

ஆண் :
இதோ இதோ என் பல்லவி
எப்போது கீதம் ஆகுமோ
இவள் உந்தன் சரணமென்றால்
அப்போது வேதம் ஆகுமோ

இதோ இதோ என் பல்லவி

*********************************

பெண் :
என் வானமெங்கும் பௌர்ணமி
இது என்ன மாயமோ
என் காதலா உன் காதலால்
நான் காணும் கோலமோ

ஆண் :
என் வாழ்க்கை என்னும் கோப்பையில்
இது என்ன பானமோ
பருகாமலே ருசியேறுதே
இது என்ன ஜாலமோ

பெண் :
பசியென்பதே ருசியல்லவா
அது என்று தீருமோ

இதோ இதோ என் பல்லவி
எப்போது கீதம் ஆகுமோ
இவள் உந்தன் சரணமென்றால்
அப்போது வேதம் ஆகுமோ

இதோ இதோ என் பல்லவி

*********************************

ஆண் :
அந்த வானம் தீர்ந்து போகலாம்
நம் வாழ்க்கை தீருமா
பருவங்களும் நிறம் மாறலாம்
நம் பாசம் மாறுமா

பெண் :
ஒரு பாடல் பாட வந்தவள்
உன் பாடலாகிறேன்
விதி மாறலாம் உன் பாடலில்
சுதி மாறக் கூடுமா

ஆண் :
நீ கீர்த்தனை நான் பிரார்த்தனை
பொருந்தாமல் போகுமா

இதோ இதோ என் பல்லவி
எப்போது கீதம் ஆகுமோ

பெண் :
இவள் உந்தன் சரணமென்றால்
அப்போது வேதம் ஆகுமோ

ஆண் :  இதோ
பெண் : ஹ்ம்ம்
ஆண் :  இதோ
பெண் :  ஹ்ம்ம்
ஆண் : என் பல்லவி
பெண் : ஹ்ம்ம் ஹ்ம்ம்

*********************************