படம் : சிகரம்
இசை: எஸ். பி. பாலசுப்ரமணியம்
*********************************
உன்னை கண்ட பின்பு தான்
என்னை கண்டு கொண்டேன்
உன் கண்ணை கண்ட பின்பு தான்
காதல் கண்டு கொண்டேன்
காதல் கண்டு கொண்டேன்
உன்னை கண்ட பின்பு தான்
என்னை கண்டு கொண்டேன்
உன் கண்ணை கண்ட பின்பு தான்
காதல் கண்டு கொண்டேன்
காதல் கண்டு கொண்டேன்
*********************************
நேற்று முதல் புத்தி மாறி
பேதலிக்கிறேன்
நானும் நிறை குடத்தை வைத்துக்கொண்டு
நீர் இறைக்கிறேன்
நேற்று முதல் புத்தி மாறி
பேதலிக்கிறேன்
நானும் நிறை குடத்தை வைத்துக்கொண்டு
நீர் இறைக்கிறேன்
பூ பறிக்க போன நானும்
இலை பறிக்கிறேன்
பூ பறிக்க போன நானும்
இலை பறிக்கிறேன் இன்று
பால் குடித்த பின்பு
தானே பல் துலக்கிறேன்
உன்னை கண்ட பின்பு தான்
என்னை கண்டு கொண்டேன்
உன் கண்ணை கண்ட பின்பு தான்
காதல் கண்டு கொண்டேன்
காதல் கண்டு கொண்டேன்
*********************************
புடவையோடு விரலை சேர்த்து
தைத்து கொள்கிறேன்
சாந்து பொட்டெடுத்து மூக்கின்
மீது வைத்து கொள்கிறேன்
புடவையோடு விரலை சேர்த்து
தைத்து கொள்கிறேன்
சாந்து பொட்டெடுத்து மூக்கின்
மீது வைத்து கொள்கிறேன்
தனிமையோடு சத்தமாக
பேசி கொள்கிறேன்
தனிமையோடு சத்தமாக
பேசி கொள்கிறேன்
ஒரு சபை நிறைந்த வேளையிலே
மௌனம் ஆகிறேன்
உன்னை கண்ட பின்பு தான்
என்னை கண்டு கொண்டேன்
உன் கண்ணை கண்ட பின்பு தான்
காதல் கண்டு கொண்டேன்
காதல் கண்டு கொண்டேன்
*********************************
No comments:
Post a Comment
உங்கள் கருத்து...