தமிழில் தேட.....

Thursday, October 3, 2019

ஆலோலம் கிளி தோப்பிலே - சிறைச்சாலை பாடல் வரிகள்



படம் : சிறைச்சாலை
இசை: இளையராஜா

*********************************

குழு :
ஹே ல லா லா லா லா ல லா
லா லா லா லா லா லா
லா லா லா லா லா லா

பெண்:
ஆலோலம் கிளி தோப்பிலே
தங்கிடும் கிளி தங்கமே
இல்லாததை சொல்லாதடி ஓல வாயி
விளையாடிட கூடாதடி கூத்துக்காரி

ஆண் :
ஆற்றில் குளித்த தென்றலே
சொல்லுமே கிளி சொல்லுமே
துள்ளாதடி துவளாதடி வம்புக்காரி
கொஞ்சாதடி குலுங்காதடி குறும்புக்காரி

பெண் :
நெஞ்சிலொரு தும்பி பறக்கும்
ஹைய்யோ ஹையய்யோ

ஆண் :
செல்லக்கிளி சிந்து படிக்கும்
ஹைய்யோ ஹையய்யோ

பெண் :
ஆலோலம் கிளி தோப்பிலே
தங்கிடும் கிளி தங்கமே
இல்லாததை சொல்லாதடி ஓல வாயி
விளையாடிடக் கூடாதடி கூத்துக்காரி

*********************************

ஆண் :
கடல் கடக்குது இதயம்
உன் கண்ணில் நீந்தித்தானோ ஹோய்

பெண் :
துடிதுடிக்கிற நெஞ்சில்
இனி தூவானம் மழைதானோ

ஆண் :
காதல் விழாக் காலம்
கைகளில் வாவா
ஈர நிலாப் பெண்ணே

பெண் :
தெம்மாங்கை ஏந்த வரும் பூங்காற்றே
என் கூந்தல் பொன்னூஞ்சல் ஆடி வா

ஆண் :
வீணை புது வீணை சுதி சேர்த்தவன்
நானே நம் காதலின் கீதங்களில்
வானம் வளைப்பேனே

பெண் :
ஆலோலம் கிளி தோப்பிலே
தங்கிடும் கிளி தங்கமே
இல்லாததை சொல்லாதடி ஓல வாயி
விளையாடிடக் கூடாதடி கூத்துக்காரி

*********************************

பெண் :
கனவு கொடுத்த நீயே
என் உறக்கம் வாங்கலாமோ

ஆண் :
கவிதை விழிக்கும் நேரம்
நீ உறங்கப் போகலாமோ ஹோய்

பெண் :
பூவிழியின் ஓரம் வானவில் கோலம்
பொன்மகளின் நாணம்

ஆண் :
நிலாவின் பிள்ளை இங்கு நீதானோ
பூஞ்சோலை பூக்களுக்குத் தாய்தானோ

பெண் :
ஆசை அகத்திணையா
வார்த்தை கலித்தொகையா
அன்பே நீ வாவா
புதுக்காதல் குறுந்தொகையா

ஆண் :
ஆற்றில் குளித்த தென்றலே
சொல்லுமே கிளி சொல்லுமே
துள்ளாதடி துவளாதடி வம்புக்காரி
கொஞ்சாதடி குலுங்காதடி குறும்புக்காரி

பெண் :
நெஞ்சிலொரு தும்பி பறக்கும்
ஹைய்யோ ஹையய்யோ

ஆண் :
செல்லக்கிளி சிந்து படிக்கும்
ஹைய்யோ ஹையய்யோ

பெண் :
ஆலோலம் கிளி தோப்பிலே
தங்குமே கிளி தங்குமே
இல்லாததை சொல்லாதடி ஓல வாயி
விளையாடிடக் கூடாதடி கூத்துக்காரி

*********************************

No comments:

Post a Comment

உங்கள் கருத்து...