படம்: சின்ன மாப்ளே
இசை: இளையராஜா
*********************************
பெண் :
காட்டுக்குயில் பாட்டுச்சொல்ல
வீட்டுகிளி கேட்டுக்கொள்ள
ஒட்டி வந்த தாளமே
கொட்டும் கெட்டி மேளமே
தொட்டணைக்க வேணுமே
பட்டு கிளி நாணுமே
ஆண் :
காட்டுக்குயில் பாட்டுச்சொல்ல
வீட்டுகிளி கேட்டுக்கொள்ள
ஒட்டி வந்த தாளமே
கொட்டும் கெட்டி மேளமே
தொட்டணைக்க வேணுமே
பட்டு கிளி நாணுமே
*********************************
பெண் :
மனசுல திறந்தது மணிக்கதவு
மரகத பதுமையை இனி தழுவு
ஆண் :
இடையில விழுந்தது இள மனசு
இருக்கிற சுகமது பல தினுசு
பெண் :
நாளெல்லாம் ராகம்
பாடுதே தேகம்
ஆண் :
வாழ்வெல்லாம் யோகம்
வாழ்த்துதே யாவும்
பெண் :
விதவிதமா விருந்து வச்சு
விழிவழியே மருந்து வச்சு
விரல் தொட அதில் பல
சுகம் வரும் பொழுதாச்சு
ஆண் :
காட்டுக்குயில் பாட்டுச்சொல்ல
வீட்டுகிளி கேட்டுக்கொள்ள
ஒட்டி வந்த தாளமே
கொட்டும் கெட்டி மேளமே
தொட்டணைக்க வேணுமே
பட்டு கிளி நாணுமே
பெண் :
காட்டுக்குயில் பாட்டுச்சொல்ல
வீட்டுகிளி கேட்டுக்கொள்ள
*********************************
ஆண் :
விழியிலே தெரியுது புது கணக்கு
விடியற வரையிலும் அது எனக்கு
பெண் :
தடைகளை கடந்தது மலையருவி
தனிமையை மறந்தது இளம் குருவி
ஆண் :
தேகமே தேனா
தேடினேன் நானா
பெண் :
மோகம்தான் வீணா
மூடுதே தானா
ஆண் :
தொடதொடதான் தொடர்கதையா
படப் படத்தான் பல சுவையா
அடிக்கடி மயங்குற வயசிது தெரியாதா
பெண் :
காட்டுக்குயில் பாட்டுச்சொல்ல
வீட்டுகிளி கேட்டுக்கொள்ள
ஒட்டி வந்த தாளமே
கொட்டும் கெட்டி மேளமே
தொட்டணைக்க வேணுமே
பட்டு கிளி நாணுமே
ஆண் :
காட்டுக்குயில் பாட்டுச்சொல்ல
வீட்டுகிளி கேட்டுக்கொள்ள
ஒட்டி வந்த தாளமே
கொட்டும் கெட்டி மேளமே
தொட்டணைக்க வேணுமே
பட்டு கிளி நாணுமே
*********************************
No comments:
Post a Comment
உங்கள் கருத்து...