படம்: மீரா
இசை: இளையராஜா
******************************************
ஓ பட்டர் ஃப்லை பட்டர் ஃப்லை
நீ எனக்கோர் குழந்தை
ஓ பட்டர் ஃப்லை பட்டர் ஃப்லை
நீ எனக்கோர் குழந்தை
அன்பே ஓ பட்டர்ஃப்லை பட்டர்ஃப்லை
நீ எனக்கோர் குழந்தை
மடியில் நான் உனைத் தாங்கி
படிப்பேனே புதிதாய் இனிதாய் கவிதை
ஓ பட்டர்ஃப்லை பட்டர்...ஃப்லை
******************************************
இருவர் வாழ்வில் இணையும்போது
விளையும் சோகங்கள்
இனிய காற்று வீசும்போது கலையும் மேகங்கள்
இலை உதிர்ந்த பின்பு மீண்டும்
பூக்கும் வசந்த காலங்கள்
அன்று உனது கண்கள் எழுதி
பார்க்கும் இளமை கோலங்கள்
இனிமேல் சொர்க்கம் தான்
அது நம் பக்கம் தான்
இணைந்தே புது பாடல்
இசைப்போம் குயிலே
பட்டர்ஃப்லை பட்டர்ஃப்லை
அன்பே ஓ பட்டர்ஃப்லை பட்டர்ஃப்லை
******************************************
அணைகள் தாண்டி அலைகள்
பாயும் நதிகள் அல்லவா
துணிவு என்னும் துணையை
கொண்டு விதியை வெல்லவா
இங்கு இனிமை பாதி கொடுமை
பாதி மனிதர் வாழ்விலே
என்றும் மழையும் தோன்றும்
வெயிலும் தோன்றும் நெடிய வானிலே
கலங்கும் கண்ணென்ன மயங்கும் நெஞ்சென்ன
நினைத்தால் நிறைவேறும்
திருநாள் வரலாம் பட்டர்ஃப்லை பட்டர்ஃப்லை
அன்பே ஓ பட்டர்ஃப்லை பட்டர்ஃப்லை
நீ எனக்கோர் குழந்தை
அன்பே ஓ பட்டர்ஃப்லை பட்டர்ஃப்லை
நீ எனக்கோர் குழந்தை
மடியில் நான் உனைத் தாங்கி
படிப்பேனே புதிதாய் இனிதாய் கவிதை
அன்பே ஓ பட்டர்ஃப்லை பட்டர்...ஃப்லை
******************************************
No comments:
Post a Comment
உங்கள் கருத்து...