படம் : வைதேகி காத்திருந்தாள்
இசை: இளையராஜா
*********************************
லா லா லா லா
லா லா லா லா
லா லா ல லா லா
லா லா ல லா லா
லா லா லா லா லா லா
ராசாவே உன்ன
காணாத நெஞ்சு
காத்தாடி போலாடுது
ராசாவே உன்ன
காணாத நெஞ்சு
காத்தாடி போலாடுது
ஸ்ரீ ராமனோட
பூ மாலை போட
வைதேகி உள்ளம் வாடுது
ராசாவே உன்ன
காணாத நெஞ்சு
காத்தாடி போலாடுது
*********************************
கண்ணுகொரு வண்ணக்கிளி
காதுக்கொரு கானக்குயில்
நெஞ்சுக்கொரு வஞ்சிக்கொடி
நான்தானையா
கண்ணுக்கொரு வண்ணக்கிளி
காதுக்கொரு கானக் குயில்
நெஞ்சுக்கொரு வஞ்சிக்கொடி
நான்தானையா
தத்தித் தவழும்
தங்கச் சிமிழ் நான்
பொங்கி பெருகும்
சங்கத் தமிழ் நான்
முத்தம் தர நித்தம் வரும்
நட்சத்திரம்
யாரோடு இங்கு எனக்கென்ன பேச்சு
நீ தானே கண்ணா நான் வாங்கும் மூச்சு
வாழ்ந்தாக வேண்டும் வா வா கண்ணா
ராசாவே உன்ன
காணாத நெஞ்சு
காத்தாடி போலாடுது
ஸ்ரீ ராமனோட பூ மாலை போட
வைதேகி உள்ளம் வாடுது
ராசாவே உன்ன காணாத நெஞ்சு
காத்தாடி போலாடுது
*********************************
மங்கை ஒரு கங்கை என
மன்னன் ஒரு கண்ணன் என
காதில் ஒரு காதல் கதை
சொன்னால் என்ன
மங்கை ஒரு கங்கை என
மன்னன் ஒரு கண்ணன் என
காதில் ஒரு காதல் கதை
சொன்னால் என்ன
அத்தை மகனோ மாமன் மகனோ
சொந்தம் எதுவோ பந்தம் எதுவோ
சந்தித்ததும் சிந்தித்ததும்
தித்தித்திட
அம்மாடி நீதான் இல்லாத நானும்
வெண்மேகம் வந்து நீந்தாத வானம்
தாங்காத ஏக்கம் போதும் போதும்
ராசாவே உன்ன
காணாத நெஞ்சு
காத்தாடி போலாடுது
ஸ்ரீ ராமனோட
பூ மாலை போட
வைதேகி உள்ளம்
வாடுது
ராசாவே உன்ன
காணாத நெஞ்சு
காத்தாடி போலாடுது
காத்தாடி போலாடுது
*********************************
No comments:
Post a Comment
உங்கள் கருத்து...