தமிழில் தேட.....

Friday, October 25, 2019

என்னைத் தொடர்ந்தது - மாமியார் வீடு பாடல் வரிகள்



படம்: மாமியார் வீடு
இசை: இளையராஜா

******************************************

ஆண்:
என்னைத் தொடர்ந்தது கையில் கிடைத்தது
நந்தவனமா ஒரு சொந்த வனமா

பெண்:
தொட்டுப் படர்ந்தது தோளில் விழுந்தது
முத்துச்சரமா ஒரு முல்லைச்சரமா

ஆண்:
ஒரு நாள் மாலை மெதுவாய் சோலை
வழியே தனித்து நான் நடக்க
என்னைத் தொடர்ந்தது கையில் கிடைத்தது
நந்தவனமா ஒரு சொந்த வனமா

******************************************

பெண்:
நாள்தோறும் நினைவில்
நான் வளர்த்தேன் கனவை
நீதானே மனதில் நான் சுமக்கும் சிலுவை

ஆண்:
தினமும் காலை மாலையும்
வணங்கும் தேவன் ஆலயம்
நாம் கொண்ட உறவைப்போற்றிடும்
நேசங்கள் விளங்க வாழ்த்திடும்

பெண்:
இதழ்த்தேன் வழங்க நான் மயங்க
தொட்டுப் படர்ந்தது தோளில் விழுந்தது
முத்துச்சரமா ஒரு முல்லைச்சரமா
ஒரு நாள் மாலை மெதுவாய் சோலை
வழியே தனித்து நான் நடக்க

ஆண்:
என்னைத் தொடர்ந்தது கையில் கிடைத்தது
நந்தவனமா ஒரு சொந்த வனமா

******************************************

ஆண்:
கேட்காமல் உறவாய்
கிடைத்தவள் நீ எனக்கு
காற்றாய் நீ அணைக்க
கேள்வி எல்லாம் எதற்கு

பெண்:
பிறவி தோறும் கூடுவேன்
உறவு ராகம் பாடுவேன்
நீயின்றி எனது ஜீவிதம்
நீருக்குள் விழுந்த காகிதம்

ஆண்:
அந்த ஏழ் பிறப்பும் சேர்ந்திருக்க
என்னைத் தொடர்ந்தது கையில் கிடைத்தது
நந்தவனமா ஒரு சொந்த வன மா

பெண்:
தொட்டுப் படர்ந்தது தோளில் விழுந்தது
முத்துச்சரமா ஒரு முல்லைச்சரமா

ஆண்:
ஒரு நாள் மாலை மெதுவாய் சோலை
வழியே தனித்து நான் நடக்க
என்னைத் தொடர்ந்தது கையில் கிடைத்தது
நந்தவனமா ஒரு சொந்த வனமா
நந்தவனமா ஒரு சொந்த வனமா

******************************************

No comments:

Post a Comment

உங்கள் கருத்து...