தமிழில் தேட.....

Showing posts with label சின்ன மாப்ளே. Show all posts
Showing posts with label சின்ன மாப்ளே. Show all posts

Thursday, October 24, 2019

காட்டுக்குயில் பாட்டுச்சொல்ல - சின்ன மாப்ளே பாடல் வரிகள்



படம்: சின்ன மாப்ளே
இசை: இளையராஜா

*********************************

பெண் :
காட்டுக்குயில் பாட்டுச்சொல்ல
வீட்டுகிளி கேட்டுக்கொள்ள
ஒட்டி வந்த தாளமே
கொட்டும் கெட்டி மேளமே
தொட்டணைக்க வேணுமே
பட்டு கிளி நாணுமே

ஆண் :
காட்டுக்குயில் பாட்டுச்சொல்ல
வீட்டுகிளி கேட்டுக்கொள்ள
ஒட்டி வந்த தாளமே
கொட்டும் கெட்டி மேளமே
தொட்டணைக்க வேணுமே
பட்டு கிளி நாணுமே


*********************************

பெண் :
மனசுல திறந்தது மணிக்கதவு
மரகத பதுமையை இனி தழுவு

ஆண் :
இடையில விழுந்தது இள மனசு
இருக்கிற சுகமது பல தினுசு

பெண் :
நாளெல்லாம் ராகம்
பாடுதே தேகம்

ஆண் :
வாழ்வெல்லாம் யோகம்
வாழ்த்துதே யாவும்

பெண் :
விதவிதமா விருந்து வச்சு
விழிவழியே மருந்து வச்சு
விரல் தொட அதில் பல
சுகம் வரும் பொழுதாச்சு

ஆண் :
காட்டுக்குயில் பாட்டுச்சொல்ல
வீட்டுகிளி கேட்டுக்கொள்ள
ஒட்டி வந்த தாளமே
கொட்டும் கெட்டி மேளமே
தொட்டணைக்க வேணுமே
பட்டு கிளி நாணுமே

பெண் :
காட்டுக்குயில் பாட்டுச்சொல்ல
வீட்டுகிளி கேட்டுக்கொள்ள


*********************************

ஆண் :
விழியிலே தெரியுது புது கணக்கு
விடியற வரையிலும் அது எனக்கு

பெண் :
தடைகளை கடந்தது மலையருவி
தனிமையை மறந்தது இளம் குருவி

ஆண் :
தேகமே தேனா
தேடினேன் நானா

பெண் :
மோகம்தான் வீணா
மூடுதே தானா

ஆண் :
தொடதொடதான் தொடர்கதையா
படப் படத்தான் பல சுவையா
அடிக்கடி மயங்குற வயசிது தெரியாதா

பெண் :
காட்டுக்குயில் பாட்டுச்சொல்ல
வீட்டுகிளி கேட்டுக்கொள்ள
ஒட்டி வந்த தாளமே
கொட்டும் கெட்டி மேளமே
தொட்டணைக்க வேணுமே
பட்டு கிளி நாணுமே

ஆண் :
காட்டுக்குயில் பாட்டுச்சொல்ல
வீட்டுகிளி கேட்டுக்கொள்ள
ஒட்டி வந்த தாளமே
கொட்டும் கெட்டி மேளமே
தொட்டணைக்க வேணுமே
பட்டு கிளி நாணுமே
*********************************

Thursday, June 13, 2019

காதோரம் லோலாக்கு - சின்ன மாப்ளே பாடல் வரிகள்



படம்: சின்ன மாப்ளே
இசை: இளையராஜா

******************************************

பெண்:
காதோரம் லோலாக்கு கத சொல்லுதையா
காத்தாடும் மேலாக்கு ஒன பின்னுதையா

ஆண்:
காதோரம் லோலாக்கு கத சொல்லுதடி
காத்தாடும் மேலாக்கு எனை பின்னுதடி

பெண்:
ஓம் முகத்த பாக்கையில
ஏம் முகத்த நான் மறந்தேன்

ஆண்:
காதோரம் லோலாக்கு கத சொல்லுதடி
காதோரம் லோலாக்கு

******************************************

பெண்:
நான் விரும்பும் மாப்பிளைக்கு
நாள் கணக்கா காத்திருந்தேன்
நான் விரும்பும் மாப்பிளைக்கு
நாள் கணக்கா காத்திருந்தேன்
வந்தாயே நீயும் வாசலத் தேடி
கண்டேனே நானும் எனக்கொரு ஜோடி

ஆண்:
உன்னாட்டம் தான் தங்கத் தேரு
கண்டதில்ல எங்க ஊரு
காதல் போதை தந்த கள்ளி
கந்தன் தேடி வந்த வள்ளி

பெண்:
நீ தொடத் தானே நான் பொறந்தேன்
நாளொரு வண்ணம் நான் வளந்தேன்

ஆண்:
காதோரம் லோலாக்கு கத சொல்லுதடி
காத்தாடும் மேலாக்கு எனை பின்னுதடி

பெண்:
காதோரம் லோலாக்கு கத சொல்லுதையா
காதோரம் லோலாக்கு

******************************************

ஆண்:
வான வில்ல வெல கொடுத்து
வாங்கிடத் தான் காசிருக்கு
வான வில்ல வெல கொடுத்து
வாங்கிடத் தான் காசிருக்கு
என் கூட உன் போல் ஓவியப் பாவை
இல்லாமல் போனால் நானொரு ஏழை

பெண்:
எந்நாளும் நான் உந்தன் சொத்து
இஷ்டம் போல அள்ளிக் கட்டு
மேலும் கீழும் மெல்லத் தொட்டு
மேளம் போல என்னத் தட்டு

ஆண்:
நானதுக்காக காத்திருந்தேன்
நீ வரும் பாத பாத்திருந்தேன்

பெண்:
காதோரம் லோலாக்கு கத சொல்லுதையா
காத்தாடும் மேலாக்கு ஒன பின்னுதையா

ஆண்:
ஓம் முகத்த பாக்கையில
ஏம் முகத்த நான் மறந்தேன்

பெண்:
காதோரம் லோலாக்கு கத சொல்லுதையா
காத்தாடும் மேலாக்கு ஒன பின்னுதையா

ஆண்:
காதோரம் லோலாக்கு கத சொல்லுதடி
காத்தாடும் மேலாக்கு எனை பின்னுதடி

******************************************