தமிழில் தேட.....

Monday, September 9, 2019

வா வா அன்பே பூஜை - ஈரமான ரோஜாவே பாடல் வரிகள்



படம்: ஈரமான ரோஜாவே
இசை: இளையராஜா

******************************************

பெண் :
ஓ ஓ ஓஓ ஓ ஓ ஓ ஓ
ஓ ஓ ஓ
ஓ ஓ ஓ

ஓ ஓ ஓ
ஓ ஓ ஓ

நா நா நா நா ந நா
ந ந நா நா நா
நா நா நா நா ந நா
ந ந நா நா நா


ஆண் :
வா வா அன்பே பூஜை உண்டு
பூஜைக்கேற்ற பூக்கள் ரெண்டு

பெண் :
பறவை அழைத்தது
அதற்கொரு துணையும் கிடைத்தது
சிறகை விரித்தது
வலம் வரத்தான்

ஆண் :
வா வா அன்பே பூஜை உண்டு
வா வா அன்பே

******************************************

ஆண் :
மாலை நேர சூரியன்
மேற்கிலிருந்து பார்க்கிறான்
வேலி ஓர பூக்களின்
வசந்த கீதம் கேட்கிறான்

பெண் :
அந்தி வெயில் வேளைதான்
ஆசை பூக்கும் நேரம்
புல்லின் மீது வாடைதான்
பனியை மெல்ல தூவும்

ஆண் : போதும் போதும் தீர்ந்தது வேதனை

பெண் : வண்ண மானும்தான் சேர்ந்தது நாதனை

ஆண் : விரலை கண்டதும் மீட்ட சொன்னது வீணை

பெண் :
வா வா அன்பே பூஜை உண்டு
பூஜைக்கேற்ற பூக்கள் ரெண்டு

ஆண் :
பறவை அழைத்தது
அதற்கொரு
துணையும் கிடைத்தது
சிறகை விரித்தது
வலம் வரத்தான்

பெண் :
வா வா அன்பே பூஜை உண்டு
வா வா அன்பே

******************************************

பெண் :
நீலம் பூத்த பார்வைகள்
நூறு கடிதம் போட்டது
நீயும் நானும் சேர்ந்திட
நேரம் பொழுது கேட்டது

ஆண் :
மலரை வண்டு மொய்த்திட
மாதம் தேதி ஏது
மீன மேஷம் பார்ப்பதோ
காதல் தோன்றும் போது

பெண் :
காலை மாலை
ஏங்கினேன் ஏங்கினேன்

ஆண் :
கையில் நான்
உன்னை வாங்கினேன் வாங்கினேன்

பெண் :
நீயும் நீயல்ல
நானும் நானல்ல
கண்ணா

ஆண் :
வா வா அன்பே பூஜை உண்டு
பூஜைக்கேற்ற பூக்கள் ரெண்டு

பெண் :
பறவை அழைத்தது அதற்கொரு
துணையும் கிடைத்தது
சிறகை விரித்தது
வலம் வரத்தான்

ஆண் :
வா வா அன்பே பூஜை உண்டு
வா வா அன்பே

******************************************

No comments:

Post a Comment

உங்கள் கருத்து...