தமிழில் தேட.....

Sunday, September 22, 2019

மாலை சூடும் வேளை - நான் மகான் அல்ல பாடல் வரிகள்



படம்: நான் மகான் அல்ல
இசை: இளையராஜா

******************************************

பெண்:
ஆ ஆ ஆ...
ஆ ஆ ஆ ஆஆஆ

ஆண்:
மாலை சூடும் வேளை
அந்தி மாலை தோறும் லீலை
இன்ப மாலை சூடும் வேளை
அந்தி மாலை தோறும் லீலை
ஏகாந்த மோகங்கள் ஏராளம் உண்டு
கண்ணாடி கன்னம் உண்டு
மாலை சூடும் வேளை
அந்தி மாலை தோறும் லீலை

******************************************

பெண்:
காயும் வெயில் காலம்
பாயும் மழை நீயோ
காயும் வெயில் காலம்
பாயும் மழை நீயோ

ஆண்:
கோடையில் நான் ஓடை தானே
வாடையில் நான் போர்வை தானே
கோடையில் நான் ஓடை தானே
வாடையில் நான் போர்வை தானே

பெண்: நீ கொஞ்ச நான் கெஞ்ச வேறென்ன இன்பம்
ஆண்: நீண்ட நேரம் தோன்றுமோ

ஆண்:
மாலை சூடும் வேளை
அந்தி மாலை தோறும் லீலை
ஏகாந்த மோகங்கள் ஏராளம் உண்டு
கண்ணாடி கன்னம் உண்டு
மாலை சூடும் வேளை
அந்தி மாலை தோறும் லீலை

******************************************

பெண்:
சோலை மஞ்சள் சேலை
சூடும் அந்தி வேளை
சோலை மஞ்சள் சேலை
சூடும் அந்தி வேளை

ஆண்:
மாங்கனியாய் நீ குலுங்க
ஆண் கிளியாய் நான் நெருங்க
மாங்கனியாய் நீ குலுங்க
ஆண் கிளியாய் நான் நெருங்க

பெண்: அம்மம்மா அப்பப்பா என்னாகும் தேகம்
ஆண்: ஆடை கொண்டு மூடுமோ

பெண்:
மாலை சூடும் வேளை
அந்தி மாலை தோறும் லீலை

ஆண்:
ஏகாந்த மோகங்கள் ஏராளம் உண்டு
கண்ணாடி கன்னம் உண்டு

இருவரும்:
மாலை சூடும் வேளை
அந்தி மாலை தோறும் லீலை


******************************************

No comments:

Post a Comment

உங்கள் கருத்து...