படம் : சிகரம்
இசை: எஸ். பி. பாலசுப்ரமணியம்
*********************************
பெண் :
முத்தம்மா
என்னை மூடி வைக்க
வேண்டும் என்று சட்டம்மா
வந்து கொள்ளை கொண்டு
போங்கள் என்ன குற்றம்மா
இதில் ஆண் என்ன பெண் என்ன சும்மா
ஆண் :
முத்தம்மா
உன்னை மூடி வைக்க
வேண்டும் என்று சட்டம்மா
உன்னை கொள்ளை கொள்ள
வேண்டும் என்ன குற்றம்மா
இதில் ஆண் என்ன பெண் என்ன சும்மா
*********************************
ஆண் :
தேவதைக்கும் அச்சம் உண்டு
தீர்ந்த பின்னும் மிச்சம் உண்டு
தித்திக்கும் சங்கீதம் உண்டு
பெண்கள் இல்லாத ஸ்வர்கத்தின்
பேரை மாற்றுங்களேன் ஆஹா
பெண் :
பக்தி இந்த பெண்ணில் உண்டு
முக்தி இந்த கண்ணில் உண்டு
பேர் இன்பம் வேறு எங்கே ராஜா
தேகம் இப்போது சூடாச்சு
தேனை ஊற்றுங்களேன்
ஆண் :
எங்கு சென்ற போதும் கற்கள் மண்ணோடு
என்ன சொன்ன போதும் ஆண்மை பெண்ணோடு
முத்தம் என்ற முத்தெடுக்க போராடு
முக்குளித்து மூச்சு முட்ட போராடு
பெண் :
கங்கை போகும் போக்கில்
கடலை தானே போடும்
சத்தங்கள் யார் செய்வது
ஆண் :
முத்தம்மா
என்னை மூடி வைக்க
வேண்டும் என்று சட்டம்மா
வந்து கொள்ளை கொண்டு
போங்கள் என்ன குற்றம்மா
இதில் ஆண் என்ன பெண் என்ன சும்மா
*********************************
பெண் :
அச்சம் பாதி நாணம் பாதி
அந்த காலம் பெண்ணின் தேதி
இப்போது ஏன் அந்த நீதி
வெட்க பட்டாலே இந்நாளில்
வெட்க கேடல்ல்லவா
ஆண் :
காதல் பாதி காமம் பாதி
அன்பு பாதி ஆசை பாதி
இல்லை என்று யார் சொல்ல கூடும்
முத்தம் யார் இங்கே தந்தாலும்
இன்பம் ஒன்றல்லவா
பெண் :
பத்தினிக்கும் ஆசை உண்டு வாழட்டும்
பத்தியங்கள் தேவை இல்லை தீரட்டும்
ஆடை என்ற பொய்மை இங்கே போகட்டும்
தேகம் என்னும் உண்மை மட்டும் வாழட்டும்
ஆண் :
மண்ணில் விண்ணை கண்டு
விண்ணில் மண்ணை கண்டு
பூலோகம் தடு மாறட்டும்
பெண் :
முத்தம்மா
என்னை மூடி வைக்க
வேண்டும் என்று சட்டம்மா
வந்து கொள்ளை கொண்டு
போங்கள் என்ன குற்றம்மா
இதில் ஆண் என்ன பெண் என்ன சும்மா
ஆண் :
முத்தம்மா
உன்னை மூடி வைக்க
வேண்டும் என்று சட்டம்மா
உன்னை கொள்ளை கொள்ள
வேண்டும் என்ன குற்றம்மா
இதில் ஆண் என்ன பெண் என்ன சும்மா
*********************************
No comments:
Post a Comment
உங்கள் கருத்து...