தமிழில் தேட.....

Showing posts with label எஜமான். Show all posts
Showing posts with label எஜமான். Show all posts

Friday, July 12, 2019

ஆலப்போல் - எஜமான் பாடல் வரிகள்



படம்: எஜமான்
இசை: இளையராஜா

******************************************

பெண்:
ஆலப்போல் வேலப்
போல் ஆலம் விழுது போல்
மாமன் நெஞ்சில் நான் இருப்பேனே
நாலுப் போல் ரெண்ட போல
நாளும் பொழுதுப் போல்
நானும் அங்கு நின்று இருப்பேனே
பதில் கேளு அடி கண்ணம்மா...ஆ..ஆ...
நல்ல நாளு கொஞ்சம் சொல்லம்மா
என்னம்மா கண்ணம்மா ஹோய்

பெண்:
ஆலப்போல் வேலப் போல்
ஆலம் விழுது போல்
மாமன் நெஞ்சில் நான் இருப்பேனே

பெண் கோரஸ் :  தும்தும் தும்தும் தும்தும்
தும்தும் தும்துதா தும்தும்
தும்தும்தும்துதா தும்தும்
தும்துதா தும்தும் தும்தும்

******************************************

பெண்:
எம்மனச மாமனுக்கு
பத்திரமா கொண்டு செல்லு
இன்னும் என்ன வேணுமுன்னு
உத்தரவு போடச் சொல்லு

பெண் கோரஸ் :
ஓ...ஓ...ஓ...ஓ...ஓ...ஓ...ஓ...ஒ...ஓ...ஒ...

ஆண்:
கொத்து மஞ்சள் தான் அரைச்சி
நித்தமும் நீராடச் சொல்லு
மீனாட்சிக் குங்குமத்தை...
நெத்தியிலே சூடச் சொல்லு

பெண்:
சொன்னத நானும் கேட்குறேன்
சொர்ணமே அங்கபோய் கூறிடு

ஆண்:
அஞ்சல மாலை போடுறேன்
அன்னத்தின் காதுல ஓதிடு

பெண்:
மாமன் நெனைப்புத்தான்
மாசக்கணக்கிலே பாடா படுத்துது என்னையே
புது பூவா வெடிச்ச பின்னையே

ஆண்:
ஆலப்போல் வேலப் போல்
ஆலம் விழுது போல்
ஆசைநெஞ்சில் நான் இருப்பேனே

பெண்:
நாலுப் போல் ரெண்ட போல்
நாளும் பொழுதுப் போல்
நானும் அங்கு நின்று இருப்பேனே

******************************************

ஆண்:
வேலங்குச்சி நான் வளைச்சி
வில்லுவண்டி செய்ஞ்சி தாறேன்
வண்டியிலே வஞ்சி வந்தா
வளைச்சி கட்டி கொஞ்ச வார்றேன்

பெண்:
ஆலங்குச்சி நான் வளைச்சி
பல்லக்கொன்னு செய்ஞ்சித்தார்றேன்
பல்லக்குல மாமன் வந்தா
பகல் முடிஞ்சி கொஞ்ச வார்றேன்

ஆண்:
வட்டமாய் காயும் வெண்ணிலா
கொல்லுதே கொல்லுதே ராத்திரி

பெண்:
கட்டிலில் போடும் பாயும்தான்
குத்துதே குத்துஊசி மாதிரி

ஆண்:
ஊரும் உறங்கட்டும்
ஒசை அடங்கட்டும்
காத்தா பறந்து வருவவேன்
புதுபாட்டா படிச்சி தருவேன்

பெண்:
ஆலப்போல் வேலப் போல்
ஆலம் விழுது போல்
மாமன் நெஞ்சில் நான் இருப்பேனே
நாலுப் போல் ரெண்ட போல்
நாளும் பொழுதுப் போல்
நானும் அங்கு நின்று இருப்பேனே

ஆண்:
பதில் கேளு அடி கண்ணம்மா...ஆ...
நல்ல நாளு கொஞ்சம் சொல்லம்மா
என்னம்மா கண்ணம்மா ஹோய்

ஆண்:
ஆலப்போல் வேலப்
போல் ஆலம் விழுது போல்
ஆசைநெஞ்சில் நான் இருப்பேனே

பெண்:
நாலுப் போல் ரெண்ட போல்
நாளும் பொழுதுப் போல்
நானும் அங்கு நின்று இருப்பேனே

******************************************

Sunday, February 17, 2019

நிலவே முகங்காட்டு - (எஜமான்)

படம்: எஜமான்
இசை: இளையராஜா

*********************************

ஆண்:
ம் ம் ம் ம் ம் ம்
ம் ம் ம் ம்
ம் ம் ம் ம் ம் ம்
ம் ம் ம் ம் ம்...

ஆண்:
நிலவே முகங்காட்டு
எனைப் பார்த்து ஒளி வீசு
அலை போல் ச்ரூதி மீட்டு
இனிதான மொழி பேசு
இளம் பூங்கொடியே
இது தாய் மடியே

பெண்:
நிலவே முகங்காட்டு
எனைப் பார்த்து ஒளி வீசு
அலை போல் ச்ரூதி மீட்டு
இனிதான மொழி பேசு
அணைத்தேன் உனையே
இது தாய் மடியே

ஆண்:
நிலவே முகங்காட்டு

*********************************

பெண்:
பனி போல நீரின் ஓடையே
கலங்கியதென்ன மாமா
இனிதான தென்றல் உன்னையே
ஊரும் குறை சொல்லலாமா

ஆண்:
காலம் மாறும் கலக்கம் ஏனம்மா
இரவில்லாமல் பகலும் ஏதம்மா
நான் உன் பிள்ளை தானம்மா

பெண்:
நானும் கண்ட கனவு நூறய்யா
எனது தாயும் நீங்கள் தானய்யா
இனி உன் துணை நானய்யா

ஆண்:
எனை சேர்ந்தது கொடி முல்லையே
இது போலே துணையும் இல்லையே
இனி நீ என் தோளில் பிள்ளையே

நிலவே முகங்காட்டு
எனைப் பார்த்து ஒளி வீசு

பெண்:
அணைத்தேன் உனையே
இது தாய் மடியே

*********************************

ஆண்:
சுமை போட்டு பேசும் ஊரென்றால்
மனம் தவித்திடும் மானே
இமை நீரும் கண்ணின் நீரென்றால்
தினம் குடிப்பவன் நானே

பெண்:
மாலையோடு நடக்கும் தேரைய்யா
நடக்கும் போது வணங்கும் ஊரைய்யா
உன்னை மீற யாரைய்யா

ஆண்:
மாமன் தோளில் சாய்ந்த முல்லையே
மயங்கி மயங்கி பேசும் கிள்ளையே
நீ என் வாழ்வின் எல்லையே

பெண்:
இதை மீறிய தவம் இல்லையே
இனி எந்தக் குறையுமில்லையே
தினம் தீரும் தீரும் தொல்லையே
நிலவே முகங்காட்டு
எனைப் பார்த்து ஒளி வீசு
அலை போல் ச்ரூதி மீட்டு
இனிதான மொழி பேசு

ஆண்:
இளம் பூங்கொடியே
இது தாய் மடியே
நிலவே முகங்காட்டு
எனைப் பார்த்து ஒளி வீசு...

*********************************