தமிழில் தேட.....

Showing posts with label ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான். Show all posts
Showing posts with label ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான். Show all posts

Tuesday, August 13, 2019

ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான் - நான் அடிமை இல்லை பாடல் வரிகள்



படம்: நான் அடிமை இல்லை
இசை: விஜய் ஆனந்த்

******************************************

ஆண்: ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான்
ஓயாமல் இசைக்கின்றது

பெண்: இரு கண்ணிலும் உன் ஞாபகம்
உறங்காமல் இருக்கின்றது

ஆண்: பாசங்களும் பந்தங்களும்
பிரித்தாலும் பிரியாதது

பெண்: காலங்களும் நேரங்களும்
கலைத்தாலும் கலையாதது

ஆண்: ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான்
ஓயாமல் இசைக்கின்றது

******************************************

ஆண்: ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும்
உனைச் சேருவேன் ஹோ...

பெண்: வேறாரும் நெருங்காமல்
மன வாசல் தனை மூடுவேன்

ஆண்: உருவானது நல்ல சிவரஞ்சனி

பெண்: உனக்காகத்தான் இந்த கீதாஞ்சலி

ஆண்: ராகங்களின் ஆலாபனை

பெண்: மோகங்களின் ஆராதனை

ஆண்: உடலும் மனமும்
தழுவும் பொழுதில் உருகும்
ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான்
ஓயாமல் இசைக்கின்றது

******************************************

பெண்: காவேரி கடல் சேர
அணை தாண்டி வரவில்லையா

ஆண்: ஆசைகள் அலைபாய ஆனந்தம் பெறவில்லையா

பெண்: வரும் நாளெல்லாம் இனி மதனோற்சவம்

ஆண்: வளையோசை தான் நல்ல மணிமந்திரம்

பெண்: நான் தானையா நீலாம்பரி

ஆண்: தாலாட்டவா ..ஹ ..ஹ ..நடு ராத்திரி

பெண்: ஸ்ருதியும் லயமும்
சுகமாய் இணையும் தருணம்
ஒரு ஜீவன் தான்
(overlap) ஆண்: ம்ம்ம்ம்
பெண்: உன் பாடல் தான்
(overlap) ஆண்: ஆ....
ஓயாமல் இசைக்கின்றது

ஆண்: இரு கண்ணிலும் உன் ஞாபகம்
உறங்காமல் இருக்கின்றது

பெண்: பாசங்களும் பந்தங்களும்
பிரித்தாலும் பிரியாதது

ஆண்: காலங்களும் நேரங்களும்
கலைத்தாலும் கலையாதது

******************************************