தமிழில் தேட.....

Showing posts with label கரகாட்டக்காரன். Show all posts
Showing posts with label கரகாட்டக்காரன். Show all posts

Tuesday, July 23, 2019

இந்த மான் உந்தன் சொந்த மான் - கரகாட்டக்காரன் பாடல் வரிகள்



படம்: கரகாட்டக்காரன்
இசை: இளையராஜா

******************************************

பெண்:
இந்த மான் உந்தன் சொந்த மான்
பக்கம் வந்து தான் சிந்து பாடும்
இந்த மான் உந்தன் சொந்த மான்
பக்கம் வந்து தான் சிந்து பாடும்

ஆண்:
சிந்தைக்குள் ஆடும் ஜீவனே
கண்மணியே
சந்திக்க வேண்டும் தேவியே
என்னுயிரே

பெண்: இந்த மான் உந்தன் சொந்த மான்
பக்கம் வந்த மான்

******************************************

ஆண்:
வேல் விழி போடும் தூண்டிலே
நான் விழலானேன் தோளிலே

பெண்:
நூலிடை தேயும் நோயிலே
நான் வரம் கேட்கும் கோயிலே

ஆண்:
அன்னமே ஆஆஆஆஆ
அன்னமே எந்தன் சொர்ணமே
உந்தன் எண்ணமே வானவில் வண்ணமே
கன்னமே மது கிண்ணமே
அதில் பொன்மணி வைரங்கள் மின்னுமே

பெண்:
எண்ணமே தொல்லை பண்ணுமே
பெண் என்னும் கங்கைக்குள் பேரின்பமே
இந்த மான் உந்தன் சொந்த மான்

ஆண்:
பக்கம் வந்து தான் சிந்து பாடும்

பெண்:
சிந்தைக்குள் ஆடும் ஜீவனே
ஆண்:
கண்மணியே

பெண்:
சந்திக்க வேண்டும் தேவனே
ஆண்:
என்னுயிரே

******************************************

பெண்:
பொன்மணி மேகலை ஆடுதே
உன் விழிதான் இடம் தேடுதே

ஆண்:
பெண் உடல் பார்த்ததும் நாணுதே
இன்பத்தில் வேதனை ஆனதே

பெண்:
என்னத்தான் ஆஆஆஆஆ
என்னத்தான் உன்னை எண்ணிதான்
உடல் மின்னத்தான் வேதனை பின்னத்தான்
சொல்லித்தான் நெஞ்சை கிள்ளித்தான்
என்னை சொர்கத்தில் தேவனும் சோதித்தான்

ஆண்:
மோகம் தான் சிந்தும் தேகம் தான்
தாகத்தில் நான் நிற்க ஆனந்தம்தான்
இந்த மான்

பெண்:
உந்தன் சொந்த மான்

ஆண்:
பக்கம் வந்து தான்

பெண்:
சிந்து பாடும்
இந்த மான்

ஆண்:
எந்தன் சொந்த மான்

பெண்:
பக்கம் வந்து தான்

ஆண்:
சிந்து பாடும்

பெண்:
சிந்தைக்குள் ஆடும் ஜீவனே

ஆண்:
கண்மணியே
சந்திக்க வேண்டும் தேவியே

பெண்:
என்னவனே

******************************************

Tuesday, July 2, 2019

மாங்குயிலே பூங்குயிலே - கரகாட்டக்காரன் பாடல் வரிகள்



படம்: கரகாட்டக்காரன்
இசை: இளையராஜா

******************************************

ஆண்:
மாங்குயிலே பூங்குயிலே
சேதி ஒண்ணு கேளு
ஒன்ன மாலையிடத் தேடி வரும்
நாளு எந்த நாளு

பெண்:
மாங்குயிலே பூங்குயிலே
சேதி ஒண்ணு கேளு
ஒன்ன மாலையிடத் தேடி வரும்
நாளு எந்த நாளு

ஆண்:
முத்து முத்துக் கண்ணாலே
நான் சுத்தி வந்தேன் பின்னாலே

பெண்:
முத்து முத்துக் கண்ணாலே
நான் சுத்தி வந்தேன் பின்னாலே

ஆண்:
மாங்குயிலே பூங்குயிலே
சேதி ஒண்ணு கேளு

பெண்:
ஒன்ன மாலையிடதேடி வரும்
நாளு எந்த நாளு

******************************************

ஆண்:
காலைத்தழுவி நிக்கும்
கனகமணி கொலுசு
யம்மா நானாக மாற இப்போ
நெனக்குதம்மா மனசு

பெண்:
உள்ளே இருக்குறீக
வெளிய என்ன பேச்சு
ஐயா ஒண்ணும் புரியவில்ல
மனசு எங்கே போச்சு

ஆண்:
இந்த மனசு நஞ்சே நெலந்தான்
வந்து விழுந்த நல்ல வெததான்
சந்திரனத்தான் சாட்சியும் வெச்சு
சொன்ன கததான் சொந்த கததான்

பெண்:
தோள தொட்டு ஆட
ஐயா சொர்க்கத்துல சேர
மால வந்து ஏற
பொண்ணு சம்மதத்தக் கூற

ஆண்:
சந்தனங்கரசசுப் பூசணும் எனக்கு
முத்தையன் கணக்கு மொத்தமும் ஒனக்கு

பெண்:
மாங்குயிலே பூங்குயிலே
சேதி ஒண்ணு கேளு

ஆண்:
ஒன்ன மாலையிடதேடி வரும்
நாளு எந்த நாளு

******************************************

பெண்:
மாமரத்து கீழே நின்னு
மங்கையவ பாட
அந்த மங்கை குரலில் மனம்
மயங்கியது யாரோ

ஆண்:
பூமரத்து கீழிருந்து
பொண்ணூ அவ குளிக்க
அந்த பூமரத்து மேலிருந்து
புலம்பியது யாரோ

பெண்:
கன்னி மனசு ஒன்ன நெனச்சு
தன்னந்தனியே எண்ணித் தவிக்கும்
பொன்னை எடுத்து அள்ளிக் கொடுத்து
வண்ணக் கனவு அள்ளித் தெளிக்கும்

ஆண்:
கூரைப் பட்டுச் சேலை
அம்மா கூட ஒரு மால
வாங்கி வரும் வேள
பொண்ணு வாசமுள்ள சோல

பெண்:
தாலிய முடிக்கும் வேளைய நெனச்சு
தேடுது மனசு பாடுது வயசு

ஆண்:
மாங்குயிலே பூங்குயிலே
சேதி ஒண்ணு கேளு

பெண்:
ஒன்ன மாலையிடதேடி வரும்
நாளு எந்த நாளு

ஆண்:
முத்து முத்துக் கண்ணாலே
நான் சுத்தி வந்தேன் பின்னாலே

பெண்:
முத்து முத்துக் கண்ணாலே
நான் சுத்தி வந்தேன் பின்னாலே

ஆண்:
மாங்குயிலே பூங்குயிலே
சேதி ஒண்ணு கேளு

பெண்:
ஒன்ன மாலையிடதேடி வரும்
நாளு எந்த நாளு

******************************************