தமிழில் தேட.....

Showing posts with label கோபுர வாசலிலே. Show all posts
Showing posts with label கோபுர வாசலிலே. Show all posts

Monday, August 5, 2019

கேளடி என் பாவையே - கோபுர வாசலிலே பாடல் வரிகள்



படம்: கோபுர வாசலிலே
இசை: இளையராஜா

******************************************

கேளடி என் பாவையே
ஆடவன் உன் தேவையே
மோகம் கொண்ட போதும் தாகம் வந்த போதும்
ஆண்மை தானே காவல் காக்க வேண்டும்
ஆசையோடு அள்ளிச் சேர்க்க வேண்டும்
ஆண்மை தானே காவல் காக்க வேண்டும்
ஆசையோடு அள்ளிச் சேர்க்க வேண்டும்
கேளடி என் பாவையே
ஆடவன் உன் தேவையே
மோகம் கொண்ட போதும் தாகம் வந்த போதும்
ஆண்மை தானே காவல் காக்க வேண்டும்
ஆசையோடு அள்ளிச் சேர்க்க வேண்டும்
ஆண்மை தானே காவல் காக்க வேண்டும்
ஆசையோடு அள்ளிச் சேர்க்க வேண்டும்

******************************************

தன்னைத்தானே சுற்றி வாழும் பூமி போலே
என்னை நானும் சுற்றி வந்த வாழ்விலே
நித்தம் பூமி சுற்றி ஓடும் சூரியன் போல்
பாவை உன்னை நானும் சுற்றி வந்ததே
ஒன்றில் ஒன்று சேர்த்து வைக்கும் சாமி தானம்மா
உன்னை என்னை சேர்த்து வைக்க கோவம் ஏனம்மா ஹ ஹ
ஒன்றில் ஒன்று சேர்த்து வைக்கும் சாமி தானம்மா
உன்னை என்னை சேர்த்து வைக்க கோவம் ஏனம்மா
என் சொந்தமேஎன் சொர்கமே இணைந்திடம்மா
கனிந்திடு கலந்திடு ஓ இன்பம் பொங்கும் என்றுமே

கேளடி என் பாவையே
ஆடவன் உன் தேவையே
மோகம் கொண்ட போதும் தாகம் வந்த போதும்
ஆண்மை தானே காவல் காக்க வேண்டும்
ஆசையோடு அள்ளிச் சேர்க்க வேண்டும்
லா ல லல்ல லல்ல லல்ல வேண்டும்
ர ர ர ர ரி ர ரா ரா வேண்டும்
கேளடி என் பாவையே ஹா
ஆடவன் உன் தேவையே

******************************************

கானம் பாடும் வீணை நாளும் வாடலாமா
மீட்டும் வேளை ராகம் இன்றி போகுமா
வானம் பார்த்த பூமி போல ஆகலாமா
தென்றல் தேடும் பூவைப் போன்ற பூவையே
சேவல் இன்றி பெட்டை ஒன்று வீணில் வாடுதே
காவல் இன்றி கன்னி இங்கு கானம் பாடுதே
சேவல் இன்றி பெட்டை ஒன்று வீனில் வாடுதே
காவல் இன்றி கன்னி இங்கு கானம் பாடுதே
நினைத்தது நடந்தது தொடர்ந்ததம்மா
சிலிர்த்தது சிலிர்த்தது ஹ இன்னும் இங்கு வெட்கமா

கேளடி என் பாவையே
ஆடவன் உன் தேவையே
மோகம் கொண்ட போதும் தாகம் வந்த போதும்
ஆண்மை தானே காவல் காக்க வேண்டும்
ஆசையோடு அள்ளிச் சேர்க்க வேண்டும்
ஆண்மை தானே காவல் காக்க வேண்டும்
ஆசையோடு அள்ளிச் சேர்க்க வேண்டும்
கேளடி என் பாவையே ஹ ஹ ஹ ஹ
ஆடவன் உன் தேவையே
ரூ ரூ ரூ ரூ ரூ

******************************************

Friday, July 26, 2019

தாலாட்டும் பூங்காற்று - கோபுர வாசலிலே பாடல் வரிகள்



படம்: கோபுர வாசலிலே
இசை: இளையராஜா

******************************************

அ ஆஆஆஆ
ஆஆஆஆ  ஆஆ

தாலாட்டும் பூங்காற்று நானல்லவா
நீ கேட்டுப் பாராட்டு ஓ மன்னவா
வருவாயோ வாராயோ
ஓ நெஞ்சமே ஓ நெஞ்சமே
என் நெஞ்சமே உன் தஞ்சமே

தாலாட்டும் பூங்காற்று நானல்லவா
நீ கேட்டுப் பாராட்டு ஓ மன்னவா

******************************************

நள்ளிரவில் நான் கண்விழிக்க
உன் நினைவில் என் மெய்சிலிர்க்க

பஞ்சணையில் நீ முள் விரித்தாய்
பெண் மனதை நீ ஏன் பறித்தாய்

ஏக்கம் தீயாக ஏதோ நோயாக
காணும் கோலங்கள் யாவும் நீயாக
வாசலில் மன்னா உன் தேர் வர
ஆடுது பூந்தோரணம்

தாலாட்டும் பூங்காற்று நானல்லவா
நீ கேட்டுப் பாராட்டு ஓ மன்னவா

******************************************

எப்பொழுதும் உன் சொப்பனங்கள்
முப்பொழுதும் உன் கற்பனைகள்

சிந்தனையில் நம் சங்கமங்கள்
ஒன்றிரண்டா என் சஞ்சலங்கள்

காலை நான் பாடும் காதல் பூபாளம்
காதில் கேட்காதோ கண்ணா எந்நாளும்
ஆசையில் நாள்தோறும் நான் தொழும்
ஆலயம் நீயல்லவா

தாலாட்டும் பூங்காற்று நானல்லவா
நீ கேட்டுப் பாராட்டு ஓ மன்னவா

வருவாயோ வாராயோ
ஓ நெஞ்சமே ஓ நெஞ்சமே
என் நெஞ்சமே உன் தஞ்சமே

தாலாட்டும் பூங்காற்று நானல்லவா
நீ கேட்டுப் பாராட்டு ஓ மன்னவா

******************************************

பிரியசகி ஓ பிரியசகி - கோபுர வாசலிலே பாடல் வரிகள்



படம்: கோபுர வாசலிலே
இசை: இளையராஜா

******************************************

ஆண்: பிரியசகி
பிரியசகி
வருவேன் வாசல் தேடி
வருத்தம் ஏனடி
தருவேன் பாடல் கோடி தனிமை ஏதடி
இளைய தேகம் ஓ இணைய வேண்டும்

பெண் : பிரியசகி நான் பிரியசகி
பிரியசகி உன் பிரியசகி
வருவாய் வாசல் தேடி
வருந்தும் பூங்கொடி
தருவாய் பாடல் கோடி தவிக்கும் பைங்கிளி
இளைய தேகம் ஓ இணைய வேண்டும்
இனிய ராகம் ஓ புனைய வேண்டும்

ஆண்: பிரியசகி ஓ பிரியசகி

******************************************

குழு : ஹஹா ஹஹா ஹஹா ஹஹா ஹஹா ஹஹா
ஹஹா ஹஹா ஹஹா ஹஹா ஹஹா ஹஹா
ஹஹா ஹஹா ஹஹா ஹஹா ஹஹா ஹஹா
ஹஹா ஹஹா ஹஹா ஹஹா ஹஹா ஹஹா


பெண் : காதலன் வீரமிகு ஆண்மகன் ஆண்மகன்
காவலை மீறிவரும் நாயகன் நாயகன்
காதலன் வீரமிகு ஆண்மகன் ஆண்மகன்
காவலை மீறிவரும் நாயகன் நாயகன்

ஆண்: பார்வை ஒன்று காட்டு கண்மணி
பூமி தன்னைக் கையில் ஏந்துவேன்
வார்த்தை ஒன்று பேசு பொன்மணி
மேகம் போல வானில் நீந்துவேன்
பெண் : வானமும் வையமும் வாழ்த்துமே ஓ

ஆண்: பிரியசகி ஓ பிரியசகி
பிரியசகி ஓ பிரியசகி

******************************************

ஆ&பெ குழு : ஹஹா ஹஹா ஹஹா ஹஹா ஹஹா ஹஹா
ஹஹா ஹஹா ஹஹா ஹஹா ஹஹா ஹஹா
ஹஹா ஹஹா ஹஹா ஹஹா ஹஹா ஹஹா
ஹஹா ஹஹா ஹஹா ஹஹா ஹஹா ஹஹா

பெண் : கூண்டிலே காதல்
குயில் வாடுது பாடுது
கொண்டுப்போ கூவி உனைத் தேடுது தேடுது
கூண்டிலே காதல் குயில் வாடுது பாடுது
கொண்டுப்போ கூவி உனைத் தேடுது தேடுது

ஆண்: வெண்ணிலாவை சிறையில் வைப்பதா
வானம் என்ன வெளியில் நிற்பதா
வீரமான நெஞ்சமில்லையா
நெஞ்சில் இந்த வஞ்சியில்லையா

பெண் : நீ வரும் பாதையைப்
பார்க்கிறேன் ஓ
பிரியசகி நான் பிரியசகி
பிரியசகி உன் பிரியசகி
வருவேன் வாசல் தேடி
வருத்தம் ஏனடி
தருவேன் பாடல் கோடி தனிமை
ஏதடி

பெண் : இளைய தேகம் ஓ இணைய வேண்டும்

ஆண்: இனிய ராகம் ஓ புனைய வேண்டும்

பெண் : பிரியசகி நான் பிரியசகி

ஆண்: பிரியசகி ஓ பிரியசகி

******************************************

Sunday, June 23, 2019

காதல் கவிதைகள் - கோபுர வாசலிலே பாடல் வரிகள்



படம்: கோபுர வாசலிலே
இசை: இளையராஜா

******************************************

ஆண்:
காதல் கவிதைகள் படித்திடும்
நேரம் இதழோரம்
இனி காமன்
கலைகளில் பிறந்திடும் ராகம்
புது மோகம்
இதயம் இடம் மாறும்
இளமை பரிமாறும்
அமுதும் வழிந்தோடும்
அழகில் கலந்தாட

இருவரும்: இதம் தரும் காதல்

பெண்: கவிதைகள் படித்திடும் நேரம்
இதழோரம்
இனி காமன்
கலைகளில் பிறந்திடும் ராகம்
புது மோகம்
இதயம் இடம் மாறும்
இளமை பரிமாறும்
அமுதும் வழிந்தோடும்
அழகில் கலந்தாட

இருவரும்: இதம் தரும் காதல்

ஆண்: கவிதைகள் படித்திடும் நேரம்
இதழோரம்

******************************************

ஆண்: கைவீசிடும் தென்றல்
கண் மூடிடும் மின்னல்
இது கனியோ கவியோ
அமுதோ சிலையழகோ

பெண்: பண் பாடிடும் சந்தம்
உன் நாவினில் சிந்தும்
அது மழையோ புனலோ
நதியோ கலையழகோ

ஆண்: மேகமொன்று நேரில் இங்கு
வாழ்த்த வந்ததடி
தாகம் கொண்ட பூமி நெஞ்சில்
சேர்த்துக் கொண்டதடி

பெண்: இது தொடரும் வளரும் மலரும்
இனிக் கனவும் நினைவும் உனையே

ஆண்: தொடர்ந்திடும்
காதல் கவிதைகள் படித்திடும் நேரம்
இதழோரம்

பெண்: இனி காமன்
கலைகளில் பிறந்திடும் ராகம்
புது மோகம்

ஆண்: இதயம் இடம் மாறும்
இளமை பரிமாறும்

பெண்: அமுதும் வழிந்தோடும்
அழகில் கலந்தாட

ஆண்: இதம் தரும் காதல் கவிதைகள்
படித்திடும் நேரம்

பெண்: இதழோரம்
இனி காமன்
கலைகளில் பிறந்திடும் ராகம்

ஆண்: புது மோகம்

******************************************

பெண்: பூ மாலைகள் கொஞ்சும்
பாமாலைகள் கெஞ்சும்
உனை மனதால் நினைத்தால்
அணைத்தால் அது இனிமை

ஆண்: தோள் சேர்ந்திடும் கங்கை
செவ்வாழையின் தங்கை
எனை ஒருநாள் பலநாள்
தொடர்ந்தால் அது புதுமை

பெண்: கோவிலுக்குள்
ஏற்றி வைத்த தீபமல்லவா
காதலுக்குக்
காத்திருந்து காட்சி தந்ததோ

ஆண்: இனி வருவாய் தருவாய் மலர்வாய்
எனை உயிராய் உறவாய்த் தொடர்வாய்

பெண்: தினம்தினம்
காதல் கவிதைகள் படித்திடும் நேரம்
இதழோரம்

ஆண்: இனி காமன்
கலைகளில் பிறந்திடும் ராகம்
புது மோகம்

பெண்: இதயம் இடம் மாறும்

ஆண்: ம்

பெண்: இளமை பரிமாறும்

ஆண்: அமுதும் வழிந்தோடும்

பெண்: ம்

ஆண்: அழகில் கலந்தாட

பெண்: இதம் தரும்
காதல் கவிதைகள் படித்திடும் நேரம்

ஆண்: இதழோரம்
இனி காமன் கலைகளில் பிறந்திடும் ராகம்

பெண்: புது மோகம்

******************************************